Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமன் வசூலை முந்த முடியல.. பெரிய ஹீரோக்களையே தூக்கி சாப்பிட்ட சூரி.. ரூ.45 கோடியை தூக்கிய மதுரை ஹீரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியிருக்கும் படம் மாமன்.. நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது... இப்படத்தின் 30வது நாளையொட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூரி மகிழ்ச்சியுடன் பாராட்டி சில வரிகளை பதிவிட்டிருந்தது பலரது கவனத்தை பெற்றது.. இப்போது மாமன் படத்தின் லேட்டஸ்ட் வசூல் வெளியாகி, சூரி ரசிகர்களுக்கு பூரிப்பை தந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம்வந்து கொண்டிருந்த சூரி, தற்போது ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

Television Maaman Soori

அந்த படத்தில் சூரியின் பக்குவமும், யதார்த்தமும் கலந்த நடிப்பு, மக்களை வெகுவாக ஈர்த்தது.. இதையடுத்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களிலும் ஹீரோவாகவே நடித்தார்.. கமர்ஷியலாக இல்லாவிட்டாலும், 3 படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது...

அதிலும், கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது.. இதனால், சூரியின் மார்க்கெட் லெவலும் உயர்ந்தது..

மீண்டும் வரவேற்பு

இதைத்தொடர்ந்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் ஹீரோவாகவே நடித்தார் சூரி.. லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி , ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த வெளிவருவதற்கு முன்பேயே, நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாற வேண்டும் என சூரியின் ரசிகர்கள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்திருந்தனர்.. அத்துடன், சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் நடத்தியிருந்தனர்.. ஆனால், மண்சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து கேள்விப்பட்ட நடிகர் சூரி மனம் வேதனை அடைந்தார்.

மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

மதுரையில் மண்சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கு.. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் கண்டிப்பாக. அதை விட்டுட்டு மண்சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா? அந்த காசுக்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், சாப்பாடு வாங்கி தந்திருக்கலாம்" என்று வேதனை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, படம் வெளியான நாளிலிருந்தே, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாமன் படம்.. வெறும் 9 நாட்களில் மட்டும் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

வார்த்தைகள் போதவில்லை

பிறகு 'மாமன்' படம் வெளியாகி 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு சூரி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30-வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க - உங்கள் அன்புக்கே!

வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.

இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் - உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை! இந்த படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை. அதனால் தான் பலர், 'நம்ம வாழ்க்கையைப் போல தான்', 'மனதை தொட்ட படம்'" என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்தது.

அன்புக்கு நன்றி

வெற்றி விழா நடத்தவில்லையா? இல்லை... ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் - இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்! 'மாமன்' குழுவுக்கு, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திங்க் மியூசிக், மீடியா நண்பர்கள் - உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்கள் அன்பே எனக்கு புதிய உற்சாகம்! அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும். என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் - நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்று பூரிப்புடன் தெரிவித்திருந்தார் சூரி.


மீண்டும் வசூல் சாதனை

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த விவரம் மீண்டும் வெளியாகி உள்ளது. அதன்படி, மாமன் படம் வெளியான 32 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 வது நாளில் 50 கோடியை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சூரி ரசிகர்கள் நெகிழ்ந்து சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+