500 கோடி சமந்தா கேட்ட ஜீவனாம்சம்? சலசலத்த மீடியா.. குணத்தால் வென்று காட்டிய பல்லாவரம் நடிகை: பிரபலம்
சென்னை: சமந்தாவின் வாழ்க்கையில் தெலுங்கு சினிமா, மிகப்பெரிய திருப்பு முனையை கொண்டுவந்தது.. விண்ணைத் தாண்டி வருவாயா ரீமேக் படம் வெளியானதுமே, அவர்கள் சமந்தாவை தூங்கி கொண்டாடினார்கள்.. பிறகு, நாகார்ஜுனா வீட்டில் மருமகளாக சமந்தா சென்றதுமே, வியப்புடன் அனைவருமே பார்த்தனர்.. ஆனால், திடீரென விவாகரத்து அறிவிப்பும் வெளியானதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "38 வயது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் சமந்தா.. அதேபோல சமந்தாவின் சொத்து மதிப்பு தெரியுமா? என்று சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.. அது என்னவென்று படித்தால், 101 கோடி என்று பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், அதுகுறித்த ஆதாரப்பூர்வமான விவரங்கள் எதுவுமில்லை.

101 கோடி சொத்து என்று வைத்து கொண்டாலும், சமந்தாவின் பிரபலத்துக்கு அது பெரிய தொகை கிடையாது. பொதுவாக, நடிகைகளுக்கு வாய்ப்பு ஈஸியா கிடைத்துவிடும் என்பார்கள். ஆனால், எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்புகள் உடனே கிடைத்துவிடாது. சமந்தா போராடியே மேலே வந்தவர். ஒரு மாஸ் ஹீரோ இன்று 100 கோடியை சம்பளமாக அசால்ட்டாக வாங்கி செல்கிறார். ஆனால், 18 வருடம் சினிமாவில் சமந்தாவின் சொத்து மதிப்பு 101 கோடி தானா? என்றும் ஆச்சரியம் எழுகிறது.
2000 கோடி சொத்து
இதே சமந்தா, வேறு விதமான நடந்து கொண்டிருந்தால், இன்று 2000 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்திருக்கமுடியும். எப்போதுமே நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு தன்மானம் சற்று அதிகமாகவே இருக்கும். பல்லாவரத்தில் எளிமையான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த சமந்தா, படித்தது தி.நகரில்தான்..
மாடலிங்கில் நுழைந்து, பிறகு முதல்முதலாக மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.. 4 நாள் ஷூடிங்கும் நடந்தது.. ஊரெல்லாம் மணி ரத்னம் படத்தில் நடிக்க போவதாக தம்பட்டம் அடித்தாகிவிட்டது. பிறகு திடீரென சமந்தாவை படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள். இதுவே வேறு யாராவதாக இருந்தால் மனவிரக்திக்கு ஆளாகியிருப்பாரகள். ஆனால் சமந்தா அப்படி சோர்ந்து போகவில்லை.. முட்டிமோதித்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றார்..
திருப்பு முனை தெலுங்கு உலகம்
சமந்தாவின் வாழ்க்கையில் தெலுங்கு சினிமா, மிகப்பெரிய திருப்பு முனையை கொண்டுவந்தது.. விண்ணைத் தாண்டி வருவாயா ரீமேக் படம் வெளியானதுமே, அவர்கள் சமந்தாவை தூங்கி கொண்டாடினார்கள்.. பிறகு, நாகார்ஜுனா வீட்டில் மருமகளாக சமந்தா சென்றதுமே, வியப்புடன் அனைவருமே பார்ததார்கள்.. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.. ஆனால், திடீரென விவாகரத்து அறிவிப்பும் வெளியானது.
இந்த விவாகரத்துக்கு காரணமே சமந்தாதான் என்றார்கள்.. காரணம், நாகார்ஜூனாவுக்கு 4000 கோடி சொத்து இருப்பதால், ஜீவனாம்சம் கேட்பதற்காகவே திட்டமிட்டு இந்த திருமணத்தை சமந்தா செய்தததாக தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பை கிளப்பின. எப்படியும் சமந்தா 500 கோடி ஜீவனாம்சம் வாங்கிவிடுவார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், கடைசிவரை மவுனம் காத்தார் சமந்தா..
ஜீவனாம்சம் ரு.500 கோடியா
உனக்கு என்ன ஜீவனாம்சம் வேண்டும்? என்று எதிர்தரப்பிலிருந்து கேட்டபோதுதான், "உன் காசு 10 பைசா எனக்கு வேண்டாம்" என்றார் சமந்தா. இதைக்கேட்டதுமே அதே தெலுங்கு மீடியா சமந்தாவை தூக்கி வைத்து கொண்டாடியது.. திடீரென சமந்தாவுக்கு கிரேஸ் கூடியது.. இதற்கு பிறகும்கூட, துயரம் துரத்தி கொண்டே வந்தது.. சமந்தாவை தசை அழற்சி நோய் வாட்ட ஆரம்பித்தது. பல இன்னல்களை அதில் அனுபவித்து வருகிறார்.
தற்போது சிட்டாடல் என்ற வெப்சீரிஸ் நடித்துள்ளார். முதல்முறையாக அதிக சம்பளம் பெற்றுள்ளார்.. 10 கோடி சம்பளம் இந்த வெப்சீரிஸுக்காக வாங்கியதாக சொல்கிறார்கள்.. சமந்தா நினைத்திருந்தால், செய்தியாளர்களை சந்தித்து, நாகார்ஜூனா குடும்பம் மீது பல பழிகளை அன்றே சுமத்தியிருக்கலாம்.. அதன்மூலம் மேலும் பல கோடிகளை இழப்பீடாக பெற்றிருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை.
சமந்தா ஒரு பீனிக்ஸ் பறவை
நாக சைதன்யா 2வதாக சோபிகாவை திருமணம் செய்திருக்கிறார்.. அதாவது சமந்தாவுடன் வாழும்போதே சோபிதாவுடன் நாக சைதன்யாவுக்கு காதல் வந்துள்ளது.. அப்படியானால் சமந்தா எவ்வளவு இன்னலை அனுபவித்தார்? இதுவே ஒரு உச்ச நட்சத்திரத்தின் மகளாக சமந்தா இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா? பின்புலம் இல்லாததால்தான், ஆளாளுக்கு சமந்தாவை பந்தாடினார்கள்..
எனினும், சமந்தா ஒரு பீனிக்ஸ் பறவை.. விடாமுயற்சி தன்னம்பிக்கை, பேராசையின்மை, இது மூன்றும் இருந்தாலே இறைவன் யாரையும் உயரத்துக்கு கொண்டு செல்வான். சமந்தாவும் அழற்சி நோயிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும். சாதாரண நபர்கள என்று எண்ணிவிடும் நபர்களுக்குள்ளும் மிகப்பெரிய சக்தி உள்ளது என்பதற்கு உதாரணம்தான் சமந்தா" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications