ரூ.500 கோடிக்கு பிசினஸ் ஆன கூலி.. சன் பிக்சர்ஸ் காட்டில் அடைமழை தான்.. கர்நாடகாவில் ஓடுமா: பிரபலம்
சென்னை: ஏற்கனவே ரஜினி படங்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன.. அதிலும், லோகேஷ் கனகராஜ், ரஜினி, சன் பிக்சர்ஸ் , இந்த கூலி படத்தில் இணையும்போது பெரிய சக்சஸ் உண்டு.. அந்த சக்சஸை மக்களிடம் கொண்டு போக வேண்டும் என்ற நோக்கமில்லாமல் அமைதியாக பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Recent Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "படத்தின் பெயர் மட்டும்தான் கூலி.. ஆனால், பிசினஸ் எல்லாம் கோடிக்கணக்கில் நடக்குது..

ஓவர்சீஸ் விற்பனை மட்டுமே 100 கோடி என்கிறார்கள்..கேரளாவில் 20 கோடி, கர்நாடகாவில் 20 கோடி . ஆந்திரா, தெலுங்கானா சேர்ந்து 60 கோடி, ஓடிடி 105 கோடி என்று கிட்டத்தட்ட 500 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளதாக உத்தேசமாக சொல்கிறார்கள். இதைத்தாண்டி தியேட்டர் கலெக்ஷன் என்று தனியாக உள்ளது.. எனவே, சன் பிக்சர்ஸ் காட்டில் அடைமழை என்றே சொல்லலாம்..
100 கோடி எகிறியது
கங்குவா, தக் லைஃப் போன்ற பெரிய பேனர்களில் நடித்த, பெரிய ஹீரோக்களின் படங்கள் தோல்வியடைந்து விட்டதால், பெரிய எதிர்பார்ப்பு கூலி படத்துக்கு எழுந்துள்ளது.. அதிலும் லோகேஷ் கனகராஜ் + ரஜினி + சன்பிக்சர்ஸ்க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். மிகப்பெரிய காயத்துக்கு பிறகு மருந்தாக இந்த படம் இருக்கும் என்று நம்பலாம்.
எனினும் படக்குழு உட்பட யாருமே பெரிதாக இந்த படத்தை பேசவில்லை.. இதற்கு காரணம், ஓவர் எதிர்பார்ப்பை தந்துவிடக்கூடாது என்று நினைக்கலாம். கங்குவா, தக் லைஃப் படங்களுக்கு ஓவர் ஹைப் தந்ததுதான் தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்துவிட்டது. ரெட்ரோ படத்துக்கு பெரிதாக ஹைப் தராததால், சுமாராக அந்த படம் ஓடியது.. அது சூர்யாவுக்கும் ஊக்கத்தை தந்துள்ளது..
நிதானம், அமைதி
ஏற்கனவே ரஜினி படங்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன.. அதிலும், லோகேஷ் கனகராஜ், ரஜினி, சன் பிக்சர்ஸ் இணையும்போது பெரிய சக்சஸ் உண்டு.. அந்த சக்சஸை மக்களிடம் கொண்டு போக வேண்டும் என்ற நோக்கமில்லாமல் அமைதியாக பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகப்போகிறது.. படத்துக்கு ஓவராக எதிர்பார்ப்பை தந்துவிட்டு, மண்ணை கவ்வுவதைவிட, இப்படி அமைதியாகவும், நிதானமாகவும் இந்த விஷயத்தை கொண்டு செல்கிறார்கள். கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் ஓடும்.
மீடியா ஹைப் எதுக்கு
லோகேஷூடன் ரஜினியும் இணைந்து படத்தை தருகிறார்கள் என்ற ஒரே ஹைப் போதும். மீடியா ஹைப் இந்த படத்துக்கு அவசியமில்லை.. ரஜினிக்கு விளம்பரமே தேவையில்லை. இயற்கையான விளம்பரங்கள் மூலமாக மட்டுமே கூலி படங்கள் பேசப்பட்டுவருகிறது.
பல நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதே மிகப்பெரிய பலத்தை தரும்.. 60 கோடி ரூபாய்க்கு தெலுங்கானா, ஆந்திராவில் கூலி படம் பிசினஸ் ஆகியிருக்கிறது என்றால், நாகார்ஜூனா படத்தில் இருப்பதும் பிளஸ் பாயிண்ட்தான். ஏற்கனவே ரஜினி படம் கர்நாடகாவில் நன்றாகவே போகும். இந்த படத்தில் உபேந்திரா இணைகிறார்.. எனவே கர்நாடகாவிலும் நன்றாக ஓடும்..
பிசினஸ் யுக்தி இது
மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்தவரும் இதில் நடிப்பதால், கேரளாவிலும் நன்றாக ஓடும். அமீர்கானும் இதில் கெஸ்ட் ரோலில் உள்ளதால், பாலிவுட்டிலும் இப்படம் ஓடும். இதெல்லாம் வியாபார யுக்தியாகும்.
தக்லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாததால், கூலி படத்துக்கு பிரச்சனை வருமா? என்று கேட்கிறார்கள்.. அதற்கெல்லாம் சான்ஸே கிடையாது.. தக் லைஃப் படத்தையே சரியான முறையில் அணுகியிருந்தால் நிச்சயம் கர்நாடகாவிலும் வெளியாகியிருக்கும். காரணம், அவர்களுக்கும் தமிழ்நாட்டில் பிசினஸ் நடக்க வேண்டும்..
கர்நாடகாவில் கூலி ரிலீஸ் ஆகுமா?
காந்தாரா, கேஜிஎப்-க்குபிறகு கர்நாடகாவில் இப்போதுதான் பேன் இந்தியா மூவியை நோக்கி நகர்கிறார்கள்.. ஆனால் கமல் தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்கிவிட்டார்.. ஒருவேளை கமல் திட்டமிட்டு சர்ச்சையை உருவாக்கினாரோ? என்றுகூட பலருக்கும் சந்தேகம் உள்ளது..
சர்ச்சையை உருவாக்கி, அதன்மூலமாக படத்தை தூக்கி நிறுத்தணும் என்று முயற்சிப்பதால்தான், இதுபோன்ற சிக்கல்கள் வருகிறது. ஆனால், ரஜினி படத்துக்கு அப்படியான எதிர்ப்புகள் எதுவுமே வராது" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications