Naam Iruvar Namakku Iruvar Serial: அய்யயோ என்ன இவ்ளோ களேபரமா மாறிப் போச்சு!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சும்மா ஜாலிக்கு என்பது போல மாயனின் ஜிங்குச்சான் கலர் லுங்கிகள்... கலக்கல் காமெடிகள் என்று மட்டும் இருந்தது இப்போது களேபரமா மாறிப் போச்சு.
ஆர்.ஜெ.செந்தில் இரட்டை வேடத்தில் வந்து அவர் மட்டுமே சீரியல் முழுக்க அப்படி இப்படி கண்களை அசைக்க விடாமல் நகைச்சுவை, குணச்சித்திரம், அடிதடி,, காதல் என்று கோலோச்சி வந்தார்.
இன்னிக்கு மாலை எபிசோட் களேபரமா மாறி குஸ்தியை நிலைகுலைய வச்சுருச்சு... அப்பா மகள் சென்டிமென்ட்.

மாப்பிள்ளை கார்த்திக்
தனது அக்காவை கல்யாணம் செய்துகிட்டு ரவுடி மாயனை பழிவாங்க நல்ல சந்தர்ப்பம் கிடைச்சது என்று அவனது தங்கையை காதலிச்சு கல்யாணம் செய்துக்க தயாராகிறான் கார்த்திக். இதுக்காக நிறைய சீர் செனத்திகள் கேட்கும் கார்த்திக் முதன் முறையாக போடும் கண்டிஷன் மாயன் கல்யாணத்தில் இருக்க கூடாது என்பது.

மாயனும் சென்றுவிட
மாயனும் கல்யாணத்தில் இருக்கமாட்டேன் என்று ஒப்புதல் அளித்து இல்லாமல் சென்றுவிடுகிறான். ஆனால் அப்பா குஸ்தி வாத்தியாருக்கு மாயன் இல்லாதது பொறுக்காமல் இந்த கல்யாணம் வேண்டாம் என்று தனது பெண்ணை எழுந்து வர சொல்கிறார். ஆனால், மாப்பிள்ளை அவள் வர மாட்டாள் என்று சொல்ல, குஸ்தி வாத்தியார் மாப்பிள்ளையை கன்னத்தில் பொளேர் என்று அடித்து விடுகிறார்.

வேண்டும் கல்யாணம்
எனக்கு இந்த கல்யாணம் வேண்டும்... நான் கார்த்திக்கைத்தான் காதலித்தேன். எனக்கு இந்த கல்யாணம் நடந்தாக வேண்டும் என்று ஆனந்தி வர மறுக்க கல்யாணம் நடக்கிறது. இப்போது மாப்பிள்ளை சும்மா இருப்பானா? குஸ்தி வாத்தியாரை மரியாதை குறைவாக பேசுகிறான்.

இங்கு நடக்கிறது
ஒரு கல்யாணத்தில் நடக்க கூடாதது எல்லாம் இங்கு நடக்கிறது. இரு சம்பந்தி வீட்டாரிடையே நடக்க கூடாத மரியாதை குறைவான விஷயங்கள் இங்கே நடக்கிறது. மாயன் மாப்பிள்ளையை கன்னத்தில் அடிக்கிறான். தங்கை அண்ணா என்று அலறுகிறாள்.

மாறியது ஏனோ?
எப்படி அவள் இனி அந்த வீட்டில் வாழ்வாள்? இதுவரை ஜாலியாக இருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஏன் இவ்வளவு சீரியஸாக மாறிப் போச்ச?! இதெல்லாம் பார்க்க கொடுமையாக இருக்கிறது... ஜாலியாக இருக்கும் சீரியல்கள் எல்லாம் இப்படி மாறிப் போனால் எப்படித்தான் பார்ப்பது?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications