Run Serial: அப்பாடா.. ரன் ஒரு வழியா ரூட்டை பிடிச்சுருச்சு!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் எப்படி எப்படியோ போய் ஒரு வழியா இப்போ சரியான ரூட்டை பிடிச்சு பயணிக்க ஆரம்பிச்சு இருக்கு.
விகடன் டெலிவிஸ்டாஸ் குழுமத்தின் சீரியலான ரன் ஆரம்பிச்சப்போ ஒரு விதமா, பிறகு ஒரு விதமா, பின்னர் ஒரே இடத்திலும் என்று இருந்தது.
இப்போ ஒரு வழியா நிழல்கள் ரவிக்கு குணமாகி சரியான ரூட்டை பிடிச்சு பயணிக்க ஆரம்பிச்சு இருக்கு.

ரன் சீரியல்
ரன் சீரியலில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சரியான ஜோடி அமையாமல், குழப்பமாகி பின்னர் அவரது ரியல் ஜோடி சாயாசிங்கையே ரீல் ஜோடியாக்கினார்கள் இவங்க ஜோடியை ஏத்துக்க கொஞ்சம் தாமதமானது.ஆரம்ப கதை திரில்லர் சினிமா பாணியில் சுவாரஸ்யமாக இருந்தது.

திரில்லர் மாறி
கதையில் திரில்லர் சம்பவங்கள் மாறி வழக்கமான பாணியில் பயணிக்க ஆரம்பிக்கையில் ஜோடியும் மாறிப்போக, சீரியல் பார்க்க சப்பென்று ஆனது. இந்த உப்பு சப்பில்லாத போக்கிலேயே எபிசோட்கள் கடந்து கொண்டு இருந்தது.நிழல்கள் ரவி படுத்த படுக்கையிலேயே இருந்தார்.

நிழல்கள் ரவி
நிழல்கள் ரவி மண்டையில் அடிப்பட்டு ஒரு வழியாக ஆபரேஷனில் தப்பிச்சுக்கறார். கண்முழிச்சு பேச ஆரம்பிக்கையில்தான் கதை திசை மாறி ரூட்டை பிடிச்சு இருப்பது தெரிய வருது. முழிச்ச உடனே சில முக்கியமான நினைவுகள் மறந்து போச்சுன்னு சொல்றார்.

எதிரிகள் இல்லை
நிழல்கள் ரவியின் எதிரிகளையும் அவர் இந்த நேரத்தில் மறந்து போய் இருப்பதால், கதையில் சூடு பிடிப்பது போல இருக்கிறது. ரன் சீரியல் ஆரம்பித்து 5 மாதங்களில் இப்போதுதான் சரியான ரூட்டைப் பிடித்து அந்த சீரியல் பயணிக்கத் துவங்கி இருக்கு.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications