Run Serial: இப்படியும் ஒரு கற்பனையா? ரன் ஓட்டம் சரி இல்லையே...!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியலில் சக்தி திவ்யாவை காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல, அவன் காதலை சொல்ல வைக்க திவ்யா தனது அப்பாவுடன் சேர்ந்து போடும் திட்டம் சகிச்சுக்க முடியலை. இப்படியும் கற்பனை செய்வாங்களா என்று முகம் சுளிக்கத்தான் வைத்து உள்ளது.
சக்தியாக நடிக்கும் கிருஷ்ணாவுக்கு விகடன் டெலிவிஸ்டாஸின் இரண்டாவது சீரியல். என்றாலும் தெய்வமகள் சீரியல் போன்று இந்த சீரியல் கிருஷ்ணாவுக்கு ஹிட் சீரியலாக அமையவில்லை என்பதுதான் உண்மை.
கிருஷ்ணா நல்ல நடிகர் என்றாலும், இவருக்கு இந்த சீரியல் மூலம் நிறைய டிராபேக்தான். முதலில் சீரியல் ஒளிபரப்பப்படும் நேரம் நல்ல ரேட்டிங் டைமோ, அனைவரும் விரும்பிப் பார்க்கும் நேரமோ இல்லை.

முதலில் ஜோடி அடுத்து டப்பிங்
முதலில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்த சரண்யா சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இவருக்கு ஜோடியாக இப்போது இவர் மனைவியே நடிக்கிறார்.. இது இந்த சீரியலுக்கு ரியல் ஜோடி ரீல் ஜோடியான பிளஸ்... இதை சன் டிவியே கொண்டாடுகிறது. என்றாலும் இது மட்டும் கிருஷ்ணாவுக்கு பெரும் வெற்றியை கொடுத்துவிடாது. இவருக்கு வழக்கமாக டப்பிங் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இல்லாமல் வேறு ஒருவரின் குரல் இவருக்கு எடுபடவில்லை.

திவ்யா சக்தி
திவ்யா சக்தியை காதலிக்க, சக்தி கரோலின் நினைவில் திவ்யாவை தவிர்க்கிறான். திவ்யாவின் அப்பாவாக நடிக்கும் நிழல்கள் ரவி கூட இந்த கல்யாணத்துக்கு சம்மதித்து விடுகிறார். ஆனால், சக்தி மட்டும் திவ்யாவின் காதலை ஏத்துக்கலை. இதனால் திவ்யா போடும் நாடகம் சகிச்சுக்க முடியலை. சக்தியின் நெருங்கிய நண்பன் பிரபு திவ்யாவுக்கு நெருங்கிய நண்பன்தான். இவனின் அண்ணன் அண்ணி மேட்ரிமோனியல் பார்த்து, தன்னை பொண்ணு பார்க்க வருவது போலவும், பிரபு முதலில் ஷாக்காகி பின்னர் திவ்யாவை திருமணம் செய்துக்க சம்மதித்து போலவும் செட்டப் செய்கிறாள்.

இதுதான் இடிக்கிறது
என்னதான் செட்டப் என்றாலும் கூட கற்பனை கூட செய்து பார்க்கக் கூசும் அளவுக்குத்தான் இந்த காட்சி இருக்கிறது. சக்தியின் மனசில் இருக்கும் காதலை வெளி கொண்டுவரத்தான்இந்த நாடகம் என்றாலும் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக கற்பனை செய்து இருக்கலாமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கூச்ச நாச்சம் எல்லாம் இப்போது பெரிது என்று யாரும் எடுத்துக்கொண்டு சீரியல் கதை எழுதுவதில்லை. ஆனால், ஏன் அப்படி இருக்கிறோம் என்று சிந்தித்து கற்பனை அதில் நாகரீகம், இங்கிதம் எல்லாம் கொண்டு வர வேண்டும்.

மறு ஒளிபரப்பு
ரன் சீரியலின் மறு ஒளிபரப்பு மறுநாள் காலையில் ஒளிபரப்பாகிறது. ஆரம்பத்தில் கதை கொஞ்சம் திரில்லர் சப்ஜெக்ட் மாதிரி சென்றுகொண்டு இருந்தது. போகப்போக சாதாரண கதையாகி மிகச் சாதாரணமாக போதை மருந்து கடத்தல், காதல், சொத்து பறித்தல் என்று சுவாரஸ்யம் கம்மியாகி உள்ளது. சன் டிவி கொடுத்து இருக்கும் நேரத்துக்கு தக்க கதையை அமைத்தால் போதுமென்று கதைக்குழு முடிவு செய்துவிட்டது போலும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications