Run Serial: ருத்ரன் நல்லவன் போல இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ராஜ்கபூர் நடிக்கவும் செய்கிறார். சன் டிவி சீரியல்கள் இயக்கவும் செய்கிறார். மனிதருக்கு பெரிய திரை கைக் கொடுத்தது போல சின்னத் திரையும் நன்றாகவே கை கொடுக்கிறது.

ராசாத்தி சீரியலில் திரைக்கதை மற்றும் இயக்குநர் ராஜ் கபூர், விகடன் டெலிவிஸ்டாஸின் ரன் சீரியலில் மிரட்டும் வில்லனாக நடிக்கிறார்.

பார்த்தாலே பயம் வரும் அளவுக்கு திட்டம் போடுவதும், திவ்யாவை அலைய வைப்பதும் என்று படு மிரட்டல். இதில் திவ்யாவின் சித்தப்பாவாக நடிக்கும் ராஜ்கபூர் பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி திவ்யா குடும்பத்தில் கூடவே இருந்து கெடுதல் செய்கிறார்.

சித்தப்பா திவ்யா

சித்தப்பா திவ்யா

டாக்டர் ஆர்.கேவாக நடித்து வரும் நிழல்கள் ரவி மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.இவரின் ஃபிளாஷ் பேக் காட்சிகள் வரும்போது மீண்டும் நடிக்க வருவாரோ என்னவோ, இப்போதைக்கு நிழல்கள் ரவி கதாபாத்திரம் சீரியலில் இல்லை. அவரது பெரிய மகள் திவ்யா இதனால் சித்தப்பாவிடம்தான் தான் மாட்டி இருக்கிறோம் என்பது தெரியாமலே அல்லல் படுகிறாள்.

ருத்ரன் சித்தப்பா

ருத்ரன் சித்தப்பா

சித்தப்பா விநாயகம் ருத்ரனை கைக்குள் போட்டுக் கொண்டு போதை மருந்து கடத்தலுக்கு திவ்யாவை மிரட்ட செய்கிறார். ருத்ரனும் விநாயகம் சொல்படி திவ்யாவை மிரட்டுவது, அவளது தங்கை ரம்யாவை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போல நடித்து, திவ்யா வீட்டிலேயே அடைக்கலம் இருந்து போதை மருந்து கடத்தலை செய்வது என்று சீரியல் முழுக்க என்ன நடக்குமோ என்கிற ஒருவித பீதியில் கதை நகர்கிறது.

பெண்கள் ருத்ரன்

பெண்கள் ருத்ரன்

இப்படி கெட்டவனாக இருக்கும், ருத்ரன், நான் செய்யும் தொழில் கெட்டதாக இருக்கலாம். ஆனால், என்னோட கேரக்டர் கெட்டவனாக இருக்கக் கூடாதுன்னு ஸ்கெட்ச் போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு குடியைத் தொடாமல் இருப்பது பெண்கள் வேண்டாம் என்று சொல்வது என்று கொஞ்சம் நல்லவனாக காண்பித்து இருப்பது என்று அவ்வப்போது புது திருப்பங்களாக கதை செல்கிறது.

ருத்ரன் விநாயகம்

ருத்ரன் விநாயகம்

விநாயகம் உன் மூலமாகத்தான் இந்த போதை மருந்து கடத்தல் பிசினெஸை சக்ஸஸ் ஃபுல்லாக செய்கிறார்.ஆனால், மேலிடத்தில் என்னவோ தானே கஷ்டப்பட்டு செய்வது போல பேசுகிறார் ருத்ரா என்று ருஜு சொல்ல..அப்போதுதான் யோசிக்க ஆரம்பிக்கிறான் ருத்ரன். தனக்கு வெறும் பணத்தை கொடுத்து பெண்களை அனுபவிப்பதில் நாட்டமில்லை. காதலோடு அமைந்ததாக அது இருக்க வேண்டும் என்று கூற வைத்து , திவ்யாவின் தங்கை ரம்யா அவனை காதலிப்பது போலக் காட்டி இருப்பது நன்றாக இருக்கிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+