Run Serial: அப்போ ஆர்.கே.மோசமான டாக்டரா? கேரோலின் எதுக்கு அவர் கூட?

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியின் ரன் சீரியல் வழக்கமான சீரியல்கள் போல அதாவது நாடகம் போல இல்லாமல் தனித்துவமாக இருக்கிறது. காட்சிகளை நன்றாக ஷூட் செய்து இருக்கிறார்கள்.கதையும் வித்தியாசமான கதை.

கதைக் களமும் நன்றாக இருக்கிறது. காமிரா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலும், ஒரே லொக்கேஷன் என்று இல்லாமல் காட்சிகளின் லொகேஷன்ஸ் மாறுவதும் சீரியலுக்கு பிளஸாக இருக்கிறது.

நடிகர் கிருஷ்ணா, செய்தி வாசிப்பாளர் சரண்யா..மிக முக்கியமாக நிழல்கள் ரவி, இயக்குநர் ராஜ்கபூர் நடித்து இருப்பதும் கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

சக்தியின் காதலி

சக்தியின் காதலி

ஒரே நாளில் சக்தியின் காதலி கேரோலினையும் காணோம். திவ்யாவின் அப்பா ஆர்.கே.வையும் காணோம். சரி அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்னு நாம் சும்மா இருந்தாலும், ப்ரோமோவில் ஒரு காருக்குள் பிரபல டாக்டர் ஆர்.கே.வுடன் கேரோலின் இருக்கும் ஒரு நொடி காட்சியையும் காட்டிவிட்டார்கள். இப்போது என்னடான்னு மண்டையை பிச்சுக்க வேண்டி இருக்குது.

இலவச வைத்தியம்

இலவச வைத்தியம்

சிட்டியில் பெரிய ஆஸ்பத்திரி நடத்தும் மிகப் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.கே. இவர் நிறைய பேருக்கு இலவச சிகிச்சை கொடுத்து உயிரையே பிழைக்க வைத்து சாதனை செய்துள்ளார்.கடைசியில் ஆஸ்பத்திரி அக்கவுன்டில் பேலன்ஸ் கம்மியா இருக்கு.ஐந்து மாச சம்பள பாக்கி என்று சீஃப் டாக்டர் ரிசைன் பண்ணிட்டு போறார். இப்படி ஆர்.கே.வை சுற்றி மர்மங்கள். அவரும் காணாமல் போயிட்டார்.

சித்தப்பா குடும்பம்

சித்தப்பா குடும்பம்

ஆர்.கேவின் மனைவியை கல்யாணம் செய்துகிட்டு ராஜ்கபூர் பரம ஏழையாக இருந்து பெரும் பணக்காரர் ஆகி இருக்கார். அதற்கு காரணமும் ஆர்.கே.சகலைதான் என்று அவர் புகழ் பாடியும் இருக்கார். இவர் ஆர்.கே.வுக்கு விசுவாசமானவரா என்றும் விளக்கும் காட்சிகள் இன்னும் வரவில்லை.

கேரோலின் கடற்கரையில்

கேரோலின் கடற்கரையில்

கடற்கரையில் கேரோலின் பிணமாக கிடக்கிறாள். அதிர்ந்து போகிறான் சக்தி.அவனை கடைசியாக கூட கேரோலினை பார்க்கவிடாமல் அவளின் அண்ணன் போலீசை வச்சு மிரட்டி கல்லறைக்கு வெளியில் நிறுத்தி விடுகிறான்.இந்த செய்தியை டிவியில் பார்த்த திவ்யா மிக அதிர்ச்சியில் இருக்கிறாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+