Run Serial: ராஜ்கபூர் சித்தப்பா நல்லவரா கெட்டவரா?
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் ரொம்ப ரிச்சாக படம்பிடித்து ஒளிபரப்பி வருகிறார்கள்.புதிதாக இந்த ஃ பீல்டில் தடம் பதிக்க விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இந்த சீரியலில் இருக்கிறது.
கேமிரா ஆங்கிள், இரிடேட்டிங் இல்லாத லைட்ஸ் நல்ல கட் ஷாட்ஸ் என்று பார்க்க நன்றாக இருக்கிறது. இதற்கேற்ப கதையும் சுவாரஸ்யமாகவே நகர்கிறது.
புகழ் பெற்ற டாக்டர் ஆர்.கே. நிழல்கள் ரவி திவ்யாவின் அப்பா காணாமல்போயிடறார். ஒரு பக்கம் சக்தியின் காதலி கெரோலின் கடத்தப்பட்டு இருக்கிறாள்.

ராஜ் கபூர் சித்தப்பா
இயக்குநர் ராஜ்கபூர் திவியாவின் சித்தப்பாவாக, அதாவது ஆர்.கே.யின் சகலையாக நடிச்சு இருக்கார். இவர் நல்லவரா கெட்டவரா என்பதை மர்மமாகவே வைத்து இருக்கிறார்கள். ஆர்.கே வின் திருமண நாளன்று, ராஜ்கபூரை சாதாரணமாக பேசிய ஒரு டீ கடைக்காரர் அவரின் ஆட்களால் பின்னால் அழைத்து செல்லப்பட்டு, அடித்து துவைக்கப்பட்டார். இதில் கூட ராஜ்கபூர் பற்றி தெரிஞ்சுக்க முடியலை.

புத்தகம் பரிசு
ராஜ்கபூர் சகலை ஆர்.கே.வுக்கு கொடுத்த பரிசு புத்தகங்கள் பெயர்கள் நட்பு, துரோக, பழிக்குப் பழி என்பது போன்ற தலைப்பில் இருந்தன.இதை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டார் என்றாலும், இப்போதும் சித்தப்பாவின் உண்மை முகம் தெரியவில்லை. இந்த சமயத்தில்தான் ஆர்.கே. காணாமல் போயிருக்கார். இந்த சமயத்தில் எங்களுக்கு இத்தனை லட்சங்கள்,எங்களுக்கு இத்தனை லடசங்கள் ஆர்.கே.சார் கடன் தர வேண்டும் என்று வீட்டுக்கு படை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மகள் திவ்யா
ஆர்.கே.வின் மகள் திவ்யாதான் இதற்கெல்லாம் பொறுப்பேற்று பதில் சொல்றா.ஆர்.கே. வளர்த்துவிட்ட சித்தப்பா ராஜ்கபூரிடம் உதவி கேட்டால், இப்போது என்னிடம் பணம் இல்லை. நான் வெளிநாடு போயிட்டு வந்து தர்றேன்.நீ நான் சொல்ற சேட்கிட்டே போயி பணம் கேளு.நான் போன் பண்ணி சொல்றேன் தருவார்னு சொல்ல அங்கும் போகிறாள் திவ்யா.

வைத்தியம் இலவசம்
ஆர்.கே.டிரஸ்ட் வச்சு பலருக்கும் இலவச வைத்தியம் பார்த்ததில் நஷ்டத்தில் ஓடிக்கிட்டு இருந்திருக்கு ஆஸ்பத்திரி. வேலை பார்க்கும் டாக்டர் உட்பட அனைத்து வேலைக்காரர்களும் 5 மாச சம்பள பாக்கி. என்னதான் செய்யப் போகிறாள் திவ்யா? அப்பா நீ எங்கேப்பா போயிட்டேன்னு உடைஞ்சு போயி அழறா.
குருவி தலையில் பனங்காயை வச்சது போல எப்படி இந்த பிரச்சனைகளை சமாளிப்பாள் திவ்யா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications