Run serial: ரிப்போர்ட்டர்ஸ் இப்படியா பிஹேவ் பண்ணுவாங்க...?
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் கொஞ்சம் மர்மம் கலந்த கதையாக இருக்கிறது. பார்க்கவும் நன்றாக இருக்கிறது. படப்பிடிப்பும் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இதுவரை பார்த்திராத அழகிய வீடுகள்,அழகிய இடங்களில் சீரியலை ஷூட் செய்து கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
சீரியலின் கதைக்கு ஏற்ப நல்ல தரத்தில், நல்ல லொக்கேஷன்களில் ஷூட்டிங் செய்து இருக்கிறார்கள். அதுக்கு ஏற்றார் போல கதையில் மர்மம் நிறைந்து இருக்கிறது.

ஆர்.கே. கேரோலின்
சக்தியின் காதலி கேரோலின் ஒரு புறம் இருக்க, வேறு ஒரு எல்லையில் இருக்கும் ஆர்.கேவுக்கும் கேரோலினுக்கும் எப்படி சம்பந்தம்? இவர்களுக்குள் என்ன உறவாக இருக்க முடியும் என்று பல விதமாக யோசிக்க வைத்து இருக்கிறது.கேரோலின் டாக்டர் வேஷம் போட்டு ரகசியமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்து இருக்கிறாள் எனும்போது, டாக்டர்கள் செய்யும் உறுப்பு திருடுவது போன்ற செய்கைகள் இந்த கதையிலும் வருமா என்கிற கேள்வியும் வருகிறது.

சக்தி கேரோலின்
சக்தி உயிருக்கு உயிராக கடந்த இரண்டு வருடமாகத்தான் கேரோலினை காதலிக்கிறான். இதற்கு முன்னாலான கேரோலின் வாழ்க்கை சற்று மர்மம் நிறைந்ததாக இருந்து இருக்கிறது என்று போலீஸ் சொல்லும் கருத்தை ஏற்க மறுக்கிறான் சக்தி. ஆனால், இருவரையும் இணைத்து மக்கள் பேச துவங்கி உள்ளனர் .அதாவது இருவரும் அடுத்தடுத்த நாட்களில் பிணமாக கிடைக்கிறார்கள்.

ஆர்.கே. கேரோலின்
கேரோலின் காணோம் என்று சக்தியும், அப்பா டாக்டர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணனைக் காணோம் என்று அவரது மகள் திவ்யாவும் தேடிக்கொண்டு இருக்கையில்தான் சக்தி மீது திவ்யாவுக்கு சந்தேகமும் ,ஆர்.கே .மீது சக்திக்கு சந்தேகமும் வருகிறது.

மீடியா ரிப்போர்ட்டர்ஸ்
பிரபல டாக்டர் ஆர்.கே.இறந்த நிலையில், பத்திரிகை, மீடியாக்கள் சூழ்ந்து கொள்கின்றன. கேள்வி மேல் கேள்வி என்று கேட்டுக்கொண்டு இருப்பவர்கள். ஒரு கட்டத்தில் ஆர்.கே குடும்பத்தை சேர்ந்தவர்களை வர சொல்லுங்கள் சார், நாங்கள் சில கேள்விகள் கேட்கணும் என்று நிருபர்கள் பேசும்போது, திவ்யா வருகிறாள்.
உண்மையில் பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் இப்படி தரமின்றி, இழப்பு ஏற்பட்டு இருக்கும் குடும்பத்தை சார்ந்தவரை ,கேள்வி மேல் கேள்வி கேட்டு மன உளைச்சலை அதிகமாக்க மாட்டார்கள் என்பதை விகடன் டெலிவிஸ்டாஸ் புரிந்து கொள்க.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications