Run Serial: ரொம்ப மெனக்கெட்டு சினிமா பாணி கேமிரா போல ரன்...செம!
சென்னை: சன் டிவியின் விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல் ரன். இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகுது. ஆரம்பித்த புதிதில் சினிமா பாணியில் காட்சிகள் ஒளிபரப்பானதில் நிஜமாவே பல பேருக்கு என்ன கதை என்றே புரியவில்லை.
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கதை பிடிபட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் காட்சி அமைப்புகள்,கேமிரா செல்லும் கோணங்கள் என்று பார்த்தால் அது சினிமா பாணியில் ரொம்ப மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள்.
இதுத் தொடர்ந்தால் ரசித்துப் பார்க்க மக்களுக்கு ஆர்வம் கூடும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. நிஜமா இது ஒரு வித்தியாசமான சீரியல்தான்.

கேரோலின் காதலி
கேரோலின் சக்தியின் காதலி. இவ சக்தியுடன் வெளியில் போகிறேன் என்று சொல்லிவிட்டு சக்தியுடன் போகவில்லை. ஆனால், காணாமல் போய்விடுகிறாள். சக்தி, டியூ கட்டாத கார்களை சீஸ் செய்பவன். அப்படித்தான் ஹாங்காங்கில் இருந்து ஹாஸ்பிடலிட்டி இன்டெர்ன் முடித்து வந்த திவ்யாவுக்கு அறிமுகம் ஆனவன். அதாவது, திவ்யா காருக்கான டியூவை காட்டவில்லை என்று. அவள் காரை சீஸ் செய்யும் போது

அப்பாவின் விழாவில்
திவ்யாவின் அப்பா நிழல்கள் ரவி பெரும் புகழ் பெற்ற டாக்டர்.மருத்துவமனை வைத்தும் நடத்துபவர். அவரின் திருமணநாள் விழாவில், அவரே பெரும் கலக்கத்தில் இருக்கார். அப்பா என்னாச்சு என்று கேட்டும் அப்பாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதை நீ பார்த்துக்கோ திவ்யா. கொஞ்சம் வெளியில அவசரமான வேலை இருக்கு. நான் போயிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு போறார்.

பார்த்து சக்தி
அந்த சமயம் பார்த்து சக்தி, வந்து...ஓ இதுவும் உன் வீடுதானா? உங்க வீட்டில் யாருக்கும் கார் வாங்கினா டியூ கட்டற பழக்கமே இல்லையான்னு கேட்கறான். இந்த நம்பர் கார் உன் அப்பா கார்தானே...அதை இன்னிக்கு சீஸ் பண்ணாம விட மாட்டேன்.எங்க அவர் கார்னு கேட்கிறான். அவர் வெளியில போயிருக்கார்.முடிஞ்சா சீஸ் பண்ணுடான்னு சொல்லிட்டு போயிடறா.

இருவரையும் காணோம்
இதே இரவில்தான் இங்கு திவ்யாவின் அப்பாவையும் ,அங்கு சக்தியின் காதலி கேரோலினையும் காணோம்.இருவருமே போலீஸ் புகார் கொடுக்க வரும்போது மறுபடியும் சந்திச்சுக்க, இவன்தான் சார் நேற்று பார்ட்டியில் வந்து கலாட்டா பண்ணினான்.இவனை பிடிச்சு விசாரிங்கன்னு திவ்யா சொல்ல, போலீசும் தயாராக இருக்க,அவன் கட்டிக்கப்போற பொண்ணை காணலைன்னு அவன் கூட அந்த லாயர் சொல்றார்.
சக்தி சொல்றான், நான் காரை எடுக்கும்போது அதில் அவர் இல்லை சார்.வெறும் கார்தான் இருந்துச்சுன்னு சொல்றான். இப்படி மர்ம ஓட்டத்தில் இப்போது ரன் சீரியல்!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications