Run Serial: இங்கே அப்பாவை காணோம்...அங்கே காதலியை காணோம்...இனி ரன்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் இப்போதுதான் கதை கொஞ்சம் பிடிபடுகிறது. இதுவரைக்கும் இப்படி திரும்புவதற்குள் ஃபிளாஷ்பேக், அப்படிப் பார்ப்பதற்குள் நிகழ்காலம் என்று கண்ணாமூச்சு ஆட்டம் காண்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

இன்னமும் பல குழப்பங்கள் தீரவில்லை என்றாலும், கொஞ்சம் கதைக்குள் வந்தது போல இருக்கிறது. பெரும் பணக்காரர் ஆஸ்பத்திரி உரிமையாளர் டாக்டராக நடிக்கும் நிழல்கள் ரவி, வேடத்துக்கு கச்சிதமாக இருக்கிறார்.

நடிகர் கிருஷ்ணா இம்முறை விகடன் டெலிவிஸ்டாஸின் இயக்குநர் குமரனின் தெய்வமகள் சீரியலில் நடித்தவர்.இப்போது அதே குழுமத்தின் வேறு இயக்குநருடன் இணைத்துள்ளார்.

திருமண நாள்

திருமண நாள்

பணக்காரர்கள் என்றாலே மர்மம் என்றும் ஒரு அர்த்தம் எடுத்துக்கலாம். அதே மாதிரி நிழல்கள் ரவியை சுற்றி ஏதோ மர்மங்கள். திடீர்னு என்னாச்சோ, கார்களுக்கு கூட டியூ கட்டலை. முதலில் கார் கூட மொத்த பணம் குடுத்து கூட வாங்க முடியதா? அப்புறம் பெரும் பணக்காரர் என்று எதற்காக காண்பிக்கிறீர்கள் என்கிற கேள்வியும் வருகிறது. இவரின் இரண்டாவது மகளாகத்தான் நியூஸ் ரீடர் சரண்யா நடித்து இருக்கார்.

சேட்டு கிருஷ்ணா

சேட்டு கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா சக்தின்னு ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிச்சு இருக்கார்.இவருக்கும் ஒரு கார் ஃபைனான்ஸ் செய்யும் சேட்டுக்கும் நட்பு. இந்த நட்பு, டியூ கட்டாத கார்களை பிடித்து எடுத்து வந்து சேட்டிடம் ஒப்படைத்து பணம் வாங்குவது. இதற்கு முன்னதாக அந்த காரில் காதலியுடன் ஒரு ஜாலி ரைடு போவது என்று வாழ்ந்து வருபவர்.

அடுத்து தந்தை

அடுத்து தந்தை

முதலில் சரண்யாவின் ஆடி காரை பிடுங்கி சேட்டிடம் ஒப்படைத்த கிருஷ்ணா, அடுத்து அவரின் அப்பா காரை பிடுங்க வரும் போதுதான், அவரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் மகள் சரண்யாவை பார்த்து உங்க வீட்ல யாருக்கும் கார் வாங்கினா டியூ கட்டற பழக்கமே கிடையாதான்னு கேட்டுட்டு உங்கப்பா எங்கேன்னு கேட்டால், கல்யாண நாள் கொண்டாட்டம் நடக்கும் நிலையில், நிழல்கள் ரவி மகளிடம் மட்டும் சொல்லிவிட்டு எங்கோ போய்விடுகிறார்.

காதலியைத் தேடி

காதலியைத் தேடி

காரை எடுக்க அவரைத் தேடிப்போன கிருஷ்ணாவுக்கு, அவரின் காதலியை காணோம்னு போன் வருது.உன் கூட வந்ததாக அவள் சொன்னாளேன்னு .இவனிடம் கேட்டால், என் கூட அவ வரலேன்னு சொல்லிட்டு,இதோ உடனே வரேன்னு கிளம்பிப் போறான்.ஆனால், காரை கண்டுபிடித்து போன போது,அதில் சரண்யாவின் அப்பா நிழல்கள் ரவி இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+