Run Serial: ஆர்.கேவுக்கும் கேரோலினுக்கும் என்ன தொடர்பு? விசாரணை!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் இப்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிட்டு வருது. கதை, திரைக்கதை, லொக்கேஷன்ஸ் என்று வழக்கமான சீரியல்களில் இருந்து இது மாறுபட்டு இருப்பது ரசிக்க வைக்கிறது.
படப்பிடிப்பு சினிமா பாணியில் இருந்தாலும், இப்போது கதை, காட்சிகள் பிடிபடும்படி இருப்பதால் வழக்கமான சீரியல் விரும்பிகளும், புதிதாக பார்ப்பவர்களும் ஆர்வமாய் இந்த சீரியலை பார்க்க துவங்கி உள்ளனர்.
இதை வித்தியாசமான சீரியல்களை வரவேற்பதற்கான அறிகுறி என்று கூட சொல்லலாம். எல்லாமே ஒரு கட்டத்தில் போராக இருக்கும்போது இதுபோன்ற டெக்கினிக்கல் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

இறப்பு கேரோலின்
முதல் ஓரிரண்டு எபிசோட்களில் இருந்தே கேரோலினை காணோம் என்கிற பரபரப்பு. இங்கு பிரபல டாக்டர் ஆர்.கே வை காணோம் என்கிற பரபரப்பு என்று இருந்தாலும், இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்பது போல சாதாரணமாக .சீரியலை பார்க்க வைத்து, கேரோலின் கடற்கரையில் பிணமாக கிடைத்த நிலையில்,இதோ இப்போது தொடர்பு படுத்தி இருப்பது நல்ல திருப்பம்.

என்னதான் ஆர்.கே.கதை?
பிரபல டாக்டர் ஆர்.கே. என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷணனுக்குள் என்ன மர்மம் இருக்கும் என்றும், நல்ல டாக்டர் என்று அவரை எல்லாரும் புகழும் பட்சத்தில் இவருக்கும் இந்த கேரோலின் பெண்ணுக்குமான தொடர்புதான் என்ன என்கிற கேள்விகள் எழுகிறது. விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.

ஆர்.கே.அப்பா திவ்யா
அப்பாவை காணோம் என்று திவ்யா வீட்டில் பரபரப்பு மட்டுமல்ல, இவ்வளவு கடன் தரணும், அவ்வளவு கடன் தரணும் என்று அவரவர் படை எடுத்து வர, குடும்பமே ஆடிப்போய் நிற்கிறது. அதோடு, பணக்கார வீடுகளில் எப்போதும் மர்மம், வீட்டின் பொறுப்பை சுமப்பவர்களுக்கு எப்போதும் டிப்ரஷன் இப்படித்தான் இருக்குமோ என்கிற பீதி கூட வருகிறது.

புதிய கதையாக
கதை இப்போது புது திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதால் பார்க்க நன்றாக இருக்கிறது.கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகவும், அரைத்த மாவையே அரைப்பது போலவும் இல்லாமல் இதுவரை ஃபிரஷாகத்தான் கதை சென்று கொண்டு இருக்கிறது. இதுவே தொடர்ந்தால் போரடிக்காமல் சீரியலை பார்க்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications