Run Serial: ரன் சீரியலை ராத்திரி 10 மணிக்கு எதுக்கு மாத்துனீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் டெக்னிக்கலாகவும், கதைப் படியும், ஷூட்டிங் படியும் ரொம்ப வித்தியாசமா மாறுபட்டு இருக்கிறது என்று சொல்லி இருந்தோம்.

எவ்வளவு நல்ல சீரியலாக இருந்தாலும் அதை பார்க்கறதுக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கித் தந்தால்தான் வியூவர்ஸுக்கு பார்க்க நன்றாக இருக்கும்.

விஸ் காம், எலெக்ட்ரானிக் மீடியா படிக்கும் மாணவர்களுக்கு இந்த சீரியல் நிஜமாகவே ஒரு பாடம் போல இருந்தது. அதாவது விஷுவல் கிளாஸ் போல. இதற்காகவே பல மாணவர்கள் இந்த சீரியல் முன் ஆஜராகி விடுவார்கள்.

யுக்தி சன் டிவி

யுக்தி சன் டிவி

சன் டிவியின் யுக்தி எப்போதும் வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்தே சீரியல்கள் எடுக்கப்படுவதாக இருக்கிறது. அதிலும் பாருங்கள் பகல் நேரங்களில் குடும்ப சென்டிமென்ட்ஸ், கள்ள காதல், சகுனம், சித்தர் என்று அதிகம் இருக்கும். இரவு நேரங்களில் இது இல்லை என்று சொல்லிவிட முடியாது.அவ்வளவாக இருக்காது. வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களை குறி வைத்தே சீரியல்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சன் டிவி.

வன்முறை குடும்பம்

வன்முறை குடும்பம்

இரவு நேரங்களில் குடும்ப வன்முறை, நல்ல குடும்பங்களில் நடக்கும் உண்மையான நடைமுறைகள் என்று சீரியலை கொண்டு போகிறார்கள்.அதிலும், வெட்டு, குத்து என்று இல்லாமல் இல்லை. சரி, அதெல்லாம் இருக்கட்டும். லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வரும் வாரம் மட்டும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது சன் டிவி.

நேர சீரியல்

நேர சீரியல்

நிஜமாவே சீரியல் என்றால் அரை மணி நேரம்தாங்க தாக்கு பிடிக்கும் பார்ப்பவர்களுக்கு. இதில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை ஒரு மணி நேரம் என்று ஒரு வாரத்துக்கு ஒளிபரப்ப இருக்கிறார்களாம். எப்படிங்க பார்க்கறது. எங்க வீட்டு வேலையை நீங்கள் செய்வீர்களா என்று மக்கள் கேட்பது. உங்கள் காதில் விழ நியாயமில்லை..அடுத்தது அருந்ததி சீரியல் பார்க்கணும் என்று காத்து இருப்பார்கள் குழந்தைகள். எங்களுக்கு நேரம் வீண்!

ரன் சீரியலை

ரன் சீரியலை

அது சரி விகடன் டெலிவிஸ்டாஸ் ரன் சீரியல் ரொம்ப வித்தியாசமான டெக்னீஷியன்ஸ் வச்சு ரசிக்கும்படியும், மாணவர்கக்ள் கற்றுக் கொள்ளும் படியும் சீரியல் எடுத்து வருகிறார்கள் என்று பாராட்டு பத்திரம் எழுதி இருந்தோம். அந்த சீரியலின் நேரத்தை 10 மணிக்கு மாற்றி வச்சு இருக்கீங்க. எல்லாமே வியாபார யுக்தியுடன் பார்த்தால்,, நம்ம டிவி சீரியல்கள் இப்படித்தாங்க கள்ள காதல், காதல், கொலை, கொள்ளை, குடும்பத்துக்குள் பழி வாங்கி ஒருவருக்கு ஒருவர் குழி பறித்து குடும்பத்தை நாசமாக்கும் பொம்பளைங்க என்றுதான் சீரியல்கள் எப்போதும் இருக்கும்.

பேட்டனை கொஞ்சம் கொஞ்சமாக மாத்துங்க. .புண்ணியமா போகும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+