சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் டைட்டில் வின்னர் இவர் தானா?10 லட்சம் பரிசு!இத்தனை நாள் கஷ்டத்திற்கு கிடைக்கும் வெற்றி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஆறு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இதில் டைட்டில் வின்னராக யார் தேர்வாக போகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்கான ஏற்கனவே சில போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கின்றனர். அதில் மித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாவது இறுதிப் போட்டியாளர் யார் என்பதற்காக தேர்வு போட்டிகள் நடைபெற்று வந்தது.

கேள்விகள்
அதில் இந்த வாரத்தில் பாடிய குழந்தைகளில் சிறப்பாக பாடி பலருடைய பாராட்டை பெற்றது அபினேஷ் தான் ஐந்தாவது இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்த பட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து ஆறாவது போட்டியாளர் தேர்வு நடைபெறுமா? அல்லது வைல்ட் கார்ட் ரவுண்டு நடைபெறுமா? அல்லது ஃப்ரீ பைனல் ஆக இருக்கலாமா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகிறது.

டாப் 5 போட்டியாளர்கள்
அதே நேரத்தில் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 இறுதி சுற்று போட்டி விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் பாடகர்களுக்குள் போட்டியும் அதிகரிக்க இருக்கிறது. இந்த போட்டியில் தேர்வான ஐந்து போட்டியாளர்களில் யார் சிறப்பாக பாடி சரிகமப லிட்டில் சாப்ஸ் டைட்டில் வின்னர் ஆகி 10 லட்சம் ரூபாயை அள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது. முதல் பரிசை பெறுபவருக்கு தான் பரிசுத்தொகை கிடைக்கும். இதனாலேயே ஆறு மாதங்களாக பல குழந்தைகள் போட்டி போட்டு வந்தனர்.
மயக்கும் பாடல்
ஒரு சில குழந்தைகளின் பாடல்களை ரெக்கார்ட் செய்து வைத்து விட்டு எப்போது வேண்டும் என்றாலும் அதை மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் பலருடைய மனதை கவர்ந்து விட்டது. அதிலும் திவினேஷ் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறார். பழைய பாடல்கள் இவருடைய குரலால் கேட்கும்போது பலருடைய கவலையெல்லாம் கரைந்து போவதாக கூறி வருகிறார்கள்.

டைட்டில் வின்னர்
அந்த காலத்து பாடல்களிலும் இவ்வளவு அருமை இருக்கிறதா? என்று இந்த காலத்தில் இளைஞர்களையும், குழந்தைகளையும் யோசிக்க வைக்கும் அளவிற்கு திவினேஷ் பாடி வருகிறார். அவரை போல யோகஸ்ரீ பலருடைய பாராட்டைப் பெற்று வருவதால் இவர்கள் இருவரில் தான் ஒருவர் டைட்டிலை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் கருத்து
ஆனாலும் கடைசி நேரத்தில் போட்டியாளர்களில் யாருடைய பாடல் அருமையாக இருக்கிறதோ அவருக்குத்தான் வெற்றி கிடைக்கும். இதுவரைக்கும் தங்களுடைய சிறப்பை கொடுத்து வந்த போட்டியாளர்கள் இறுதியில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வெற்றி பெற்றால் சரியாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க பாஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications