எனக்கெல்லாம் கவர்ச்சி கண்ணுலதான் இருக்கு.. கவர்ந்திழுக்கும் காயத்ரி!
சென்னை: இணையதளங்களில் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி வரும் நிலையில் தனது ஆடையில் கவர்ச்சி காட்டாமல் கண்களாலேயே ரசிகர்களை கிறங்கடித்து வரும் சாய் காயத்ரியின் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாக்களில் பணிபுரிந்து வந்தாலும் இணையதளங்களில் ஆக்டிவாக விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார் சாய் காயத்ரி. இவர் சீரியல்களில் நடிப்பது போலவே இணையதளத்திலும் கண்ணியமான உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.
சீரியலில் இருப்பதுபோலவே இணையதளத்திலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ரொம்பக் குடும்பப் பாங்கான முகமும் இவருக்கு ரசிகர்களை குவிக்க உதவியுள்ளது.

மதுரைக்காரப் பொண்ணு
சிவா மனசுல சக்தி சீரியலில் அறிமுகமானவர் சாய் காயத்ரி. மதுரைக்காரப் பொண்ணு.. அதுல ரொம்பப் பெருமை இவருக்கு. மதுரையில் ஹையர் செகண்டரி வரைக்கும் முடித்துவிட்டு விஷுவல் கம்யூனிகேஷன் சென்னையில் படித்து இருக்கிறார். இவர் படித்துக்கொண்டிருக்கும்போது மாடலிங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மாடலிங் மூலமாக தான் இவருக்கு சீரியலில் வாய்ப்பு வந்திருக்கிறது.

மதுரை டூ சென்னை
இவர் நடிக்க ஆரம்பித்ததும் இவரது குடும்பமும் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து இருக்கிறது. ஜாலியான கலகலப்பான குடும்பத்தில் இவர் செல்ல பிள்ளையாம். இவருடைய அம்மாவிடம் தான் தன்னுடைய கோபத்தை காட்டுவாராம். எந்த டென்ஷன் இருந்தாலும் அம்மாவிடம் திட்டி விட்டு சிறிது நேரத்தில் எதுவுமே நடக்காதது போல வந்து பேசி விடுவாராம். அம்மாவும் போனாப் போகுது நம்ம செல்லக் குட்டிதானே என்று பொறுத்துப் போய் விடுவாராம்.

சீப்பு இல்லாட்டி கஷ்டம்
இவருடன் எப்பவும் இருக்கும் பொருட்களில் ஒன்றாக சீப்பு இருக்கிறதாம். அடிக்கடி தலையை சீவி கொண்டே இருப்பாராம். கை சும்மாவே இருக்காதாம்.. தலையை சீவிட்டே இருப்பாராம் அப்பப்ப. சீப்பு இல்லாமல் இருக்க முடியாதாம். என்னோட சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் கூட நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவரே ஜாலியாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட நடிப்பவர்களையும் ஒருவழி படுத்தி விடுவாராம்.

எப்பவுமே ஜாலிதான்
எப்போதும் ஜாலியாக இருக்கும் குணமுடைய இவருக்கு, கூட இருப்பவர்களையும் கலகலப்பாக வைப்பதுதான் இவரது வேலையாம். இவர் நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொகுப்பாளரும் கூட.. அவர் ஜெயா டிவி ,ஜீ தமிழ் டிவி, ராஜ் டிவி களிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் முதன்முதலில் கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை சீரியல்களில் விஜய் டிவியில் நடித்திருக்கிறார்.

ஈரமானே ரோஜாவில்
தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இணையதளத்தில் விதவிதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டும் உடைகளில் நேர்த்தியாகவும் போடும் போஸ்டர்கள் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறதாம். இவர்மீது நல்ல ஒரு அபிப்ராயம் ரசிகர்களிடம் இருக்கிறது. இவர் மதுரைத் தமிழில் படபடவென்று பேசினாலும் இணையதளத்தில் தன்னுடைய கவர்ச்சியான பார்வையாலும் அழகாலும் கலக்கி வருகிறார்.

இதுதான் என்னோட பலம்
பலர் கவர்ச்சியைக் காட்டி இணையதளத்தில் வைரலாக பரவி வரும் போது 90ஸ் கிட்ஸ் களின் ட்ரெஸ்ஸை போட்டுகிட்டு எலுமிச்சை கலரில் கொஞ்சோண்டு இடுப்பு தெரிவது இவருடைய ரசிகர்களுக்கு செமையாக இருக்கிறதாம். உடல் கவர்ச்சியில் இல்லைங்க நம்ம அழகு.. மாறாக நல்ல பேச்சிலும் நம்ம பார்வையிலும்தான் எல்லாமே இருக்கிறது என்று சொல்லும் இந்த மதுரைக்காரப் பொண்ணு.. பெரிய நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்துடன் நடை போட்டுக் கொண்டிருக்கிறாராம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications