விஷால் காதலை அறிவித்த அடுத்த நொடி, வெடித்த ஆடை சர்ச்சை.. கோபத்தில் தொகுப்பாளினி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாய் தன்ஷிகா நடிக்கும் யோகிடா பட விழாவில் விஷாலும் தன்ஷிகாவும் காதலிக்கும் விஷயத்தை நேற்று பகிர்ந்து இருந்தனர். இவர்களுடைய திருமண தேதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அந்த மேடையில் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவமும் நடைபெற்றது. ஏற்கனவே தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் ஆடை குறித்த சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்து விவாதம் நேற்று யோகிடா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் விஷாலும் சாய் தன்ஷிகாவும் காதலிக்கும் விஷயம் நேற்று காலையிலேயே பத்திரிகைகளில் வெளியானது . அதே நேரத்தில் இவர்களுடைய திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மாலையில் விஷால் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. சாய் தன்ஷிகா நடிக்கும் யோகிடா படத்தின் விழாவில் விஷாலும் கலந்து கொண்டார்.

Sai Dhanshika Vishal

விஷால் தன்ஷிகா காதல் அறிவிப்பு

அப்போது சாய் தன்ஷிகா மேடையில் பேசும்போது, எனக்கு தெரிந்து எந்த ஹீரோவும் வீடு வரை வந்ததில்லை. அப்படி ஒவ்வொரு முறையும் எனக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் குரல் கொடுத்தவர் விஷால்தான். அந்த குணம் விஷாலிடம் எனக்கு பிடித்தது. சமீப காலமாகத்தான் நாங்கள் பேச ஆரம்பித்தோம். பேச ஆரம்பிக்கும் போது எங்களுக்குள் புரிதல் ஏற்பட்டுவிட்டது. அவருக்கும், எனக்கும் தோணிச்சு இரண்டு பேருமே மனதார அதை ஏற்றுக் கொண்டோம். இது திருமணத்தில் தான் முடியும் என்று நாங்கள் முன்னதாகவே தெரிந்து கொண்டோம். அதனால் இனி ஏன் காத்திருக்க வேண்டும் என இப்போது முடிவு செய்து இருக்கிறோம் என்று தங்களுடைய திருமண தேதியையும் அறிவித்திருந்தார்கள்.

ஐஸ்வர்யா ரகுபதி கேள்வி

இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி முடிவடையும் சமயத்தில் எதிர்பார்க்காத ஒரு சம்பவமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி தான். இவர் பல திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதுபோல சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவர் பேசும் போது வெயில் காலத்தில் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பேசி இருக்கிறார். கடைசியில் அவரிடம் ஒரு நபர் நீங்கள் வெயிலுக்காக தான் இப்படி ஆடை அணிந்து இருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

தொகுப்பாளினி ஐஸ்வர்யா

அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து புடவை அணிந்திருந்ததால் இவர் இப்படி கேட்கிறார் என்ற விவாதம் அந்த நேரத்தில் அதிகமாக எழுந்தது. அந்த நபர் கேட்டபோது கூட ஐஸ்வர்யா இந்த நிகழ்ச்சிக்கும் நீங்கள் என்னிடம் ஆடை பற்றி கேட்பதற்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். இதுகுறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. பலர் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வந்தனர்.

ஆடை குறித்து சர்ச்சை கேள்வி

ஏற்கனவே இதே தொகுப்பாளினிக்கு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கூல் சுரேஷ் மேடையில் மாலை போட முயற்சி செய்திருந்தார். அப்போது அந்த விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த இரண்டு சம்பவங்களையும் குறித்து யோகிடா இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா பேசியிருந்தார். அதில் பேசும்போது, இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் ஆடை குறித்து கேள்வி கேட்ட நபர் இப்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்களா?

தொகுப்பாளினியின் ஆதங்கம்

நான் இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னிடம் ஒருவர் ஆடை குறித்து பேசி இருந்தார். அப்போது யாருமே அவரிடம் தப்பு என்று சொல்லவில்லை. ஆனால் சோசியல் மீடியா பக்கத்தில் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் அவர் பேசியது தப்பு என்று சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி என்ன சொல்லிக்கொண்டு தனக்கு சப்போர்ட் செய்த சில போஸ்ட்களை அந்த மேடையில் ஐஸ்வர்யா படித்திருந்தார்.

Sai Dhanshika Vishal

வாக்குவாதம்

அதைத் தொடர்ந்து கோடைகாலத்தில் தண்ணீர் குடிப்பதற்கும் என்னுடைய உடைக்கும் என்ன சார் சம்பந்தம்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளி எங்கிருந்து தொடங்கியது தெரியுமா? எந்த மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் ஒரு காமெடி நடிகர் என் அனுமதி இல்லாமல் எனக்கு மாலை போட வந்தார், அவர் அப்படி நடக்கும்போது நான் அவருடைய கன்னத்தில் அறைந்து கன்னத்தை பழுக்க வைத்திருந்தால் இதுபோன்று இன்னொரு நபர் என்னிடம் கேள்வி கேட்டு இருக்க மாட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு இயக்குனர் பேரரசு இதில் தலையிட்டு அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+