கடற்கரையில் நீச்சல் டிரஸில் நின்ற சாய் பல்லவி.. அப்ப இமேஜ் இல்லாத நடிகையை தேட வேண்டியதுதானே: பிரபலம்
சென்னை: நடிகை சாய்பல்லவி இப்போது ராமாயணா என்ற படத்தில் நடித்துள்ளார்.. இதுவரை தான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி செலுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.. எனவே இது பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில், சாய் பல்லவி பிகினி டிரஸ் அணிந்ததாக சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டியொன்றில் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
நடிகை சாய் பல்லவி கவர்ச்சியான கேரக்டரை நம்பாமல், தன்னுடைய நடிப்பு, நாட்டிய திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் வலம் வருபவர்.. ஒருகட்டத்தில் மேக்கப் இல்லாமலும் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார்.. இதனால் ஹோம்லி நடிகை என்று சாய் பல்லவியை பலரும் கொண்டாட துவங்கினர்.

சாய் பல்லவி இமேஜ்
இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் சாய் பல்லவி. அப்போது தன்னுடைய தங்கையுடன் எடுத்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார்.. அதில் இருவரும் பிகினி உடை அணிந்திருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.
சாய் பல்லவியும் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டாரா? என்று கேள்விகளை இணையவாசிகள் கேட்க துவங்கினர்.. மேலும் சிலர், ஒருவரின் ஆடையை எதற்காக விமர்சிக்க வேண்டும்? அது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம், இதில் யாரும் தலையிட முடியாது" என்று ஆதரவு குரல் தந்தனர்.
மற்றொருதரப்பினர், அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சாய் பல்லவிக்கும், அவரது தங்கைக்கும் பிகினி போல சித்தரித்துள்ளனர் என்று கருத்துக்களை கூறினார்கள்.. இதையடுத்து, சாய்பல்லவியே ஒரு விளக்கம் தந்திருந்தார்..
ஒரிஜினல் ஏஐ பதிவு
அதில், "இது முழுக்க முழுக்க ஒரிஜினல் பதிவு, AI பதிவுகள் அல்ல.. நான் அப்படி உடை உடுத்தவில்லை என்பதற்காக, பிறரும் என்னை போல இருக்க வேண்டும் என்றில்லை, அது அவரவர் உரிமை" என்று கூறியிருந்தார்.. இந்த விளக்கத்துக்கு பிறகு சர்ச்சை ஓரளவு முடிவுக்கு வந்தாலும், வடமாநிலங்களில் ஓயவில்லை.
காரணம் இந்தியில் 'ராமாயணா' படத்தில் சீதா வேடத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி.. இந்த கேரக்டரில் சாய் பல்லவி நடிப்பதற்கு, ஆரம்பத்திலிருந்தே ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. சாய்பல்லவி சீதா கேரக்டரில் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இப்போது பிகினி உடையும் இணையத்தில் வைரலாகி வருவதால், மீண்டும் சாய் பல்லவியை விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள்..
சீதை கேரக்டர்
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "நடிகர், நடிகைகள் என்பவர்கள் எந்த கேரக்டர் தந்தாலும் நடிக்கக்கூடியவர்கள்.. அதுக்காக சீதையாக நடிக்கும்போது இப்படியெல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும் என்று முத்திரை குத்த முடியாது.. அப்படி சீதையாக நடிக்க வேண்டுமானால், எந்த இமேஜூம் இதுவரை இல்லாத வேறு யாராவது புதுமுகங்களை கொண்டு வந்து நடிக்க வைக்கலாம்.. சீதையாக நடித்தாலும் அது சினிமா தானே?
இப்படித்தான், நடிகை பூனம் பாண்டே, மண்டோதரி கேரக்டரில் நடிக்கவிருந்தார்.. ஆனால் அவரும் அந்த கேரக்டரில் நடிக்க கூடாது என்று பஞ்சாயத்து செய்துட்டு இருக்காங்க.. அவர் ஒரு ஆபாச நடிகை.. அவர் எப்படி மண்டோதரியாக நடிக்கலாம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. இப்படி ஒவ்வொருவரையும் குறை சொல்லி கொண்டிருந்தால் யார் தான் நடிப்பது?
சரித்திர படங்கள்
பொதுவாக சரித்திர படங்களை பெரிய பட்ஜெட் இல்லாமல் எடுக்க முடியாது.. அப்படியானால் பெரிய நடிகர், நடிகைகளை வைத்துதான் எடுக்க வேண்டியிருக்கும்.. இல்லாவிட்டால் பிசினஸ் செய்ய முடியாது.. எல்லா பெரிய நடிகர்கள், நடிகைகளுக்கு பின்னாடியும் ஒரு பிரச்சனை, விவகாரங்கள் உள்ளன..
ஆனால் நடிகர்கள் விதிவிலக்காக உள்ளனர்.. ராமன் கேரக்டரில் ரன்வீர் கபூர் நடிக்க போகிறார். அவர் அனிமல் படத்தில், பெண் பித்தனாக நடித்திருந்தார்.. சரக்கு அடித்தாரு.. ஆனாலும் சட்டதிட்டங்களை வசதிக்கேற்ப மாத்திக்கிறாங்க.. இதெல்லாம் தவறாக உள்ளது..
சினிமாவில் அரசியல்
எப்போது அரசியல் கட்சிகள் சினிமா துறைக்குள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததோ, அப்போதே சினிமாவும் வீணாக போய்விட்டது.. யாருமே சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு நிலைமை மாறிக்கொண்டேயிருக்கிறது. இப்படியே போனால், யாருமே தாங்கள் நினைத்த படங்களை எடுக்க முடியாது.. அப்படியொரு ஆபத்தான திசையை நோக்கி சினிமா போயிட்டு இருக்கு" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications