சின்ன கோலிவுட்டில் இன்னும் ஒரு செல்ல வளைகாப்பு.. பூரித்துப் போன புரமோதித்தா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி உலகில் இப்போது வளைகாப்பு மற்றும் பிரவச மாதம் போல. அடுத்தடுத்து ஏகப்பட்ட வளைகாப்புகள், திருமணங்கள், பிரசவங்கள் என கலகலப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

அதிலும், இந்த விஜய் டிவில மட்டும் எப்பவுமே பங்ஷனுக்கு குறைவில்லாமல் தான் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பண்ணும் பங்க்ஷன்களை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் வளைகாப்பு பங்க்ஷன் கிரேட்டாக பண்ணி இருந்தார்கள். அதையும் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வந்து ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டிருந்தார்கள்.

வளைகாப்பு நிகழ்ச்சி

வளைகாப்பு நிகழ்ச்சி

அந்த மாதிரிதான் இப்போவும் ஒரு வளைகாப்பு பங்ஷனை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஜய் டிவி பிரபலமான சாய் பிரமோதித்தாவின் போட்டோஸ்கள் தான் வைரலாக பரவி வருகிறது. சாய் பிரமோதித்தா விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் . முதலிலே இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

காதல் மணம்

காதல் மணம்

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த சீரியல் இயக்குனருமான பிரவீன் பெண்ணெட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரவீன் பெண்ணெட் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்கள் ஆனா ராஜா ராணி முதல் கண்ணம்மா சீரியல் வரை பல சீரியல்களை இயக்கியுள்ளார்.

இந்த அழகான ஜோடிக்கு தற்போது வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவிற்கு விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு கொண்டிருக்கிறார்கள்.

காத்திருக்கிறோம் கண்மணி

காத்திருக்கிறோம் கண்மணி

அதுமட்டுமல்லாமல் அங்கு எடுத்த புகைப்படங்களையும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் . அதுபோலத்தான் ஸ்ரீதேவி அசோக் தன்னுடைய இணையதள இன்ஸ்டாகிராமில் இன்னும் இரண்டு வாரங்களில் அழகான ஒரு குழந்தை வரப்போகிறது .அதன் பிறகு இந்த வயிறும் விடைபெற்று விடும். குழந்தையின் இளஞ்சிவப்பு கன்னமான முகத்தையும் அழகிய கண்களையும் காண நாங்கள் காத்திருக்கின்றோம்.

வாழ்த்துவதற்கு ரெடி

வாழ்த்துவதற்கு ரெடி

உங்கள் குழந்தையை நாங்கள் அறிவோம். அது பெண்ணாக இருந்தாலும் சரி பையனாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியின் நாங்கள் வரவேற்கிறோம் .புதிய நட்சத்திரத்தை விரைவில் காணலாம் என்று மிகவும் ஆர்வமாகவும் ,உங்கள் குழந்தைக்கு எங்கள் ஆசீர்வாதத்தையும் வழங்குகிறோம் என்று கமெண்டுகளை போட்டிருக்கிறார்.

ஸ்டார்களின் கூட்டம்

ஸ்டார்களின் கூட்டம்

அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் திருமணம் சீரியலில் நடிக்கும் ஸ்ரேயா - சித்து ஜோடியும், ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடியும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விரைவில் வருகை தரும் குழந்தைக்கு குட்டி ஷூ மற்றும் ஆடை, மிட்டாய்களோடு போட்டோ எடுத்து இருக்கிறார்கள்.

பையனா பொண்ணா

பையனா பொண்ணா

இந்த போட்டோக்களை எடுத்து பலரும் எண்ணமா இப்படி பன்றீங்களே என்று கலாய்க்கிறார்கள். வளைகாப்பு பங்ஷனுக்கு கலர் கலர் பலூன்களுடன் "பாய் ஆர் கேர்ள்" என்று எழுதிய பலூன்களையும் ஆங்காங்கே தொங்கவிட்டு இவர்கள் அடித்த லூட்டி தான் வைரலாக பரவி வருகிறது. அதிலும் சிலர் எண்ணமா இந்த வளைகாப்பு நேரத்திலும் இந்த மாதிரி எல்லாம் உடை உடுத்தி போட்டோஸ் போட்டு இருக்கிறீர்களே என்றும் கேட்டு வருகிறார்கள்.

எப்பப் பார்த்தாலும் இப்படித்தான்

எப்பப் பார்த்தாலும் இப்படித்தான்

விஜய் டிவி எப்பவுமே புதுசு புதுசாக தான் செய்து கொண்டிருப்பார்கள். அந்த மாதிரிதான் தற்போது இந்த வளைகாப்பு பங்க்ஷனையும் நடத்தியிருக்கிறார்கள். விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டாலும் அவர்களின் ரசிகர்களும் புது குழந்தையின் வருகைக்கு ஆசீர்வாதங்களை அளித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+