அழைத்தவுடன் வந்து பிள்ளைகளுக்கு தாயின் பெருமை உணர்த்திய சாய்....!
சென்னை: சன் டிவியின் ஷீரடி சாய் பாபா சீரியலில் சாயியின் வசனங்கள் கேட்க இனிமையா இருக்கு. மனசுக்கு ஆறுதல் தருவதாவும் இருக்கு.
கண் தெரியாத ஒரு தாய் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க கூடாதுன்னு வீட்டை விட்டு வெளியில் வந்துடறாங்க. எப்படியோ கஷ்டப்பட்டு சாயியின் துவாரகமயிக்கு வந்துடறாங்க.
சாயின் அருளால் அந்த அம்மாவுக்கு கண் நல்லாத் தெரியுது. அவங்க உடைகளில் சரிகை வேலைப்பாடுகள் செய்யறதுல வல்லவங்க. அதனால, துவாரகமயில தங்கி இருக்கும் இவங்க மத்தவங்களுக்கு இந்த வேலைப்பாடுகளை செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கறாங்க.

துவாரகாமா
இதை தெரிஞ்சுக்கிட்ட அந்த அம்மாவின் பிள்ளைகள் துவாரகமயிக்கு வந்து, அம்மாவை வீட்டுக்கு கூப்பிடறாங்க. தாயும் பிள்ளைகளைக் கண்டதும் தான் வீட்டுக்கு செல்வதாக சாயியிடம் கூற, சாய், நீங்க வீட்டுல போயி இந்த சரிகை வேலை செய்ய கூடாது. நல்லா ஓய்வு எடுங்கன்னு சொல்லி அனுப்பறாங்க.

சரிகை வேலை
வீட்டுக்கு வந்த பிறகும் சரிகை வேலை செய்யாமல் இருக்கும் அம்மாவை மகன்கள், மருமகள்கள் ஏன் சரிகை வேலை செய்ய மாட்டேங்கறீங்கன்னு கேட்கறாங்க. சாய் என்னை இந்த வேலைகளை செய்ய வேணாம்னு சொல்லிட்டாங்கன்னு அம்மா சொல்ல, பிள்ளைகளுக்கு கடுப்பாகுது.

கை எழுத்து
இவங்க நமக்கு சுமையா இருக்காங்க... அதனால, அம்மாகிட்ட கை எழுத்து வாங்கி அவங்க பேரிலிருக்கும் இந்த வீட்டை வித்துட்டு,நாம எங்காவது வெளியூர் போயிடலாம்னு வற்புறுத்தி கை எழுத்து கேட்கறாங்க.

நக்கல்
அம்மா சாய் சாய்னு அழறாங்க.. இங்க எங்கே சாய் வரப்போறார்னு நக்கல் அடிக்கறாங்க. மறுபடியும் அந்த அம்மா சாய் சாய்ன்னு கூப்பிட, சாய் வர்றார்.

அம்மா பேர்
இந்த வீடு உன்னுடையதுன்னு பேரா எழுதி இருக்குன்னு கேட்டீங்களே...இதோ உங்க அம்மாவின்பேர் இருக்கான்னு பாருங்கன்னு காமிக்கறார். வீட்டுல அம்மா பேர் எழுதி இருக்கு.

ஓரு மந்திரவாதி
சாய் நீங்க ஒரு மந்திரவாதின்னு பிள்ளைங்க சொல்ல...கண்ணு தெரியாம பிள்ளைகளுக்கு பாரமா உங்க அம்மா பட்ட கஷ்டங்களை பாருங்கன்னு சொல்லி, ஒரு படம் போல சாய் காமிக்க.. தாய் பட்ட துயரங்களை பார்க்கறாங்க. கண்ணீர் வடிக்கறாங்க.

வாக்குறுதி
பத்திரத்தில் வாங்கின கை எழுத்து மாயமாகிறது. பிறகு தாயின் பெருமைகளை உணர்ந்த பிள்ளைகள் அவரை ஓய்வில் வச்சு காப்பாத்தறதா வாக்குறுதி தர்றாங்க.
இப்படி வாழும் காலத்தில் மகானாய் ஜொலித்த சாய், இன்றும் மக்கள் மனதில் தெய்வமாக குடிகொண்டு பல அற்புதங்களை செய்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications