மஞ்சள் கலரில் சொக்கா.. சாக்ஷி அசத்துறாங்க பக்காவா.. சூரியனே வெட்கப்படுமே!
சென்னை: சின்ன இடையை முழுசாக காட்டி சுட்டெரிக்கும் வெயிலில் தகதகவென ஜொலிக்கும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது போட்டோசூட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார் .
உடலை பாதுகாப்பதில் தன்னைப் பின் தொடருங்கள் என தன்னுடைய ரசிகர்களுக்காக இவர் பார்த்துப் பார்த்து உடற்பயிற்சிகளைச் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆரோக்கியம்
தற்போது கதாநாயகிகள் முதல் இளம்பெண்கள் வரைக்கும் ஸ்லிம்மாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அழகு, என தேடித்தேடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பது போல சாக்ஷி அகர்வால் தன்னுடைய உடம்பை எந்த அளவிற்கு பேணிப் பாதுகாக்க முடியுமோ அந்த அளவிற்கு செய்து வருகிறார். இவரைப் பார்த்து பல பெண்கள் தற்போது உடற்பயிற்சியை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜிம் வீடியோக்கள்
பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இவருடைய உடற்பயிற்சி வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர் .அதனால் சாக்ஷி அகர்வாலும் சளைக்காமல் தினமும் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன் களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இவர் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்ட பிறகு தமிழ் ரசிகர்களிடம் நன்றாக பிரபலமாகிவிட்டார் .

பிக் பாஸ் பிரபலம்
இது வரைக்கும் இல்லாத அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பிக்பாஸ் மூலம் கிடைத்து விட்டனர் .ஆனால் பிக்பாஸினால் மட்டுமல்லாமல் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர் .இவர் திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமிர்க்கு முன்னரே இவர் டிக்டாக்கில் பிரபலமானவர்.

டிக் டாக்கை விட அதிக ரசிகர்கள்
டிக்டாக்கில் இவருக்கு அதிகமான பாலோவர்ஸ்கள் இருந்து வந்தனர். தற்போது அது தடை செய்யப்பட்டிருந்தாலும் அதில் இருந்த ரசிகர்கள் பலமடங்காக இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருக்கின்றனர் .தற்போதைய சூழலில் நடிகைகள் பலருக்கும் பிடித்திருக்கும் போட்டோஷூட் மோகம் இவருக்கும் பிடித்திருக்கிறது .அதுவும் சில வருடங்களாகவே இவர் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறார் .

சூரியனே வெட்கப்படுமே
இவருடைய ஒவ்வொரு போட்டோஸ்களும் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்து விடலாம் என தான் பார்த்துப் பார்த்து எடுத்து வருகிறார் .அதுவும் தற்போது பாவாடை சட்டையோடு நின்ற படி தாவாணியை பறக்கவிட்டு வெட்கத்தோடு இவர் சிரித்தபடி தலைகுனிய அதனைப் பார்த்த சூரியனும் குளுமையை காட்டிக் கொண்டிருக்கிறது. இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களை பார்த்ததும் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட் களையும் குவித்து வருகின்றனர்.

உடம்பைக் குறைச்சுட்டார்
அதிலும் ஒரு சில ரசிகர்கள் கவிதைகளையும் பொழிந்து வருகின்றனர். புசுபுசுவென இருந்த இவர் தற்போது சிக்கென மாறி பார்ப்பவர்களை பார்த்ததும் கிறங்க வைத்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் படு சூடாக வலம் வருகிறது. இவருடைய ரசிகர்கள் பலர் இவருடைய பெயரிலேயே ஃபேன்ஸ் பேஜ் ஓபன் செய்து வைத்திருப்பதால் அவற்றிலும் இவை வைரலாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications