பால்கனியில் சாக்ஷி அகர்வால்.. இப்படியெல்லாமா.. ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகர்கள்!
சென்னை: சாக்ஷி அகர்வால் மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு கொடுத்திருக்கும் போஸைப் பார்த்து ரசிகர்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டுத் தள்ளுகின்றனர்.
திரைப்பட நடிகர்களுக்கு தங்களுடைய முகம் ரசிகர்களிடம் இருந்து மறைந்து விடக்கூடாது என்பதற்காக இணையதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள். அந்த மாதிரி சாக்ஷி அகர்வால் இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்.
காலா படத்தில் ரஜினியின் மருமகள் ஆகவும் விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் நடிக்க வருவதற்கு முன்பு மாடலாகவும் விளம்பர நடிகையாகவும் இருக்கிறார். இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.

பிக் பாஸில் கலக்கல்
திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் கடைசிவரை நிலைத்து நிற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியே வந்துவிட்டார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

திரைப்பட வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருக்கு சில படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த லாக்டோன் வந்து திரைப்படங்களை வெளியிட முடியாமல் போனது. இதனால் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கிறதாம் இவருக்கு. இருந்தாலும் தங்களுடைய ரசிகர்கள் இவரை மறந்து விடக்கூடாது என்பதற்காக இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

துடிக்க வைக்கும் கவர்ச்சி
இணையதளத்தில் இவர் போடும் போஸ்டர்களை பார்த்து ரசிகர்கள் வாயை பிளக்கிறார்கள். அந்த அளவிற்கு படு கவர்ச்சிகரமாக போட்டோக்களை குவிக்கிறார் .இவர் நடிக்க வருவதற்கு முன்பாக பிரபலமான ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஆலோசகராக மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தான் அந்த வேலையை கூட விட்டுவிட்டு நடிப்பதற்கு வந்து இருக்கிறார் .

கெட்டியான படிப்பு
இவர் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது படிப்பில் கெட்டிக்காரராக இருக்கிறார். காலேஜ் கோல்ட் மெடல் எல்லாம் வாங்கி இருக்கிறாராம். இருந்தாலும் அவர் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் நடிப்பதில் தனக்கு இருந்த ஆர்வத்தினால் நடிப்பதற்கு களமிறங்கியிருக்கிறார். முதலில் இவர் நடிப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைக்கவில்லையாம். இவர்தான் பிடிவாதம் பிடித்து தான் நடிப்பதற்கு சம்மதம் வாங்கி இருக்கிறாராம்.

வீட்டில் ஆதரவு
ஆனால் வீட்டில் இப்போது இவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணுகிறார்கள். இப்போ சூட்டிங் இல்லாத நேரத்தில் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணுவதையே முழுநேர வேலையாக செய்து கொண்டிருக்கிறாராம். தன்னுடைய உடற்பயிற்சி செய்கிற வீடியோக்களையும் மாடலிங் போட்டோக்களையும் அப்லோட் பண்ணிட்டு இருந்த இவர் இப்போது படுக்கையறை போட்டோக்களையும் அப்லோட் பண்ண ஆரம்பித்துவிட்டார.

கவர்ச்சி ரசம்
படுக்கை அறையில் உள்ளாடையோடு படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கிற மாதிரி போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார் அதை பார்த்து ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள். அதேபோல இப்போது பால்கனி சுவரில் சாய்ந்து சூப்பர் போஸ் கொடுத்துள்ளார். எல்லோரும் ஜொள்ளு விட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால் சாக்ஷி இந்த மாதிரி கமெண்ட்களை தான் ரொம்ப விரும்புகிறார் போல இதுக்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் அவர் எடுத்த போட்டோக்களை அப்லோட் பண்ணிட்டு தான் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications