கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு.. கண்ணுல அப்படி ஒரு வேகம்.. அதிர வைக்கும் சாக்ஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வித்தியாசமான கெட்டப்களில் போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். என்னை குறைச்சு மதிப்பிட்டுப் பார்.. என்று சவால் விடும் வகையிலான கேப்ஷனுடன் அவர் போட்டுள்ள போட்டோ வைரலாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்துவரும் போட்டா போட்டியில் நடிகைகளுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிறது. அதுவும் நம்ம சாக்ஷி அகர்வாலுக்கு சொல்லவே வேண்டாம். அவர் போடும் போட்டோ ஷூட் போட்டோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.

வழக்கமாக கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட படம் போடுவார். சில நேரம் சிந்திக்க வைப்பார்.. சில நேரம் சீரியஸான படங்களையும் போடுவார். அப்படி ஒரு போட்டோதான் இப்போது போட்டிருக்கிறார்.

 கையில் குச்சியுடன்

கையில் குச்சியுடன்

கையில் முரட்டுத்தனமான ஒரு குச்சியைப் பிடித்துக் கொ ண்டு, குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார். கண்களில் ஒரு வெறி தெறித்து விளையாடுகிறது. என்னை குறைத்து மதிப்பிட்டுத்தான் பாருங்களேன்.. அதுதான் செம வேடிக்கை என்று ஒரு கேப்ஷனும் போட்டிருக்கிறார். இது ஜாலியான போஸா அல்லது ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் பார்க்கவே செம மிரட்டலாக இருக்கிறது.

 இன்ஸ்டாவில் கிடைத்த புகழ்

இன்ஸ்டாவில் கிடைத்த புகழ்

பல திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராம் மூலம்தான் இவருக்கு கிடைத்திருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தாலும் இரண்டாவது கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவில் வெறித்தனமாக தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு ஒரு ஒர்க் அவுட் பண்ணி இன்ஸ்டாகிராமில் போட்டு ரசிகர்களை வெறி ஏற்றிருக்கிறார்.

 தீவிர ஒர்க் அவுட்

தீவிர ஒர்க் அவுட்

பல ரசிகர்களும் இவரைப்போலவே ஒர்க்அவுட் செய்து வருகிறார்களாம். அந்த அளவிற்கு இவர் பலருக்கு மோட்டிவேஷன் ஆக இருக்கிறார். இவர் நடிகர் அஜீத்தின் தீவிரமான ரசிகையாம். சின்ன வயதில் இருந்தே இவர் மீது இவருக்கு ஒரு கிரஸ் இருந்திருக்கிறது. அவரை கண்ணால் பார்த்தாலே போதும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவருடன் இணைந்து நடிப்போம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையாம். விஸ்வாசம் படத்தில் முதல் முறையாக அவரைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷத்தில் இருந்திருக்கிறார்.

 ஈகோ இல்லாத அஜீத்

ஈகோ இல்லாத அஜீத்

அஜித்தும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் இவரை பார்த்ததும் எழுந்து வந்து சாக்ஷி உங்களோட வீடியோவை பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். சாக்ஷி அஜித்தின் பிறந்த நாளுக்கு வெளியிட்ட வீடியோவை பார்த்து அதற்கு அஜித் இவருக்கு தேங்க்ஸ் சொல்லி இருக்கிறார். அந்த நிமிடத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் ஆகவும் நடித்திருக்கிறார்.

 வயசு வித்தியாசம் பார்க்காத ரஜினி

வயசு வித்தியாசம் பார்க்காத ரஜினி

அதுவும் எதிர்பார்க்காமல் தான் கிடைத்தது. 50 நாட்கள் சூட்டிங்கில் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. ரஜினிகாந்தும் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுவது எனக்கு ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார். தனது ரோல் மாடல்களில் அவரும் ஒருவர் என்றும் கூறியிருக்கிறார். இவருக்கு நடிகர் தனுஷை ஒரு முறையாவது நேரில் பார்த்து சில கேள்விகள் கேட்க வேண்டுமாம்.

 தனுஷிடம் அதை கேட்கணும்

தனுஷிடம் அதை கேட்கணும்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அப் - டவுன் டைம் களில் டவுனில் இருக்கும் போது எந்த மாதிரி அந்த சூழலை சமாளித்து மேலே வந்தீர்கள் என்று முக்கியமாக கேட்க வேண்டும் என்று ரொம்பவே காத்திருக்கிறாராம். இவர் சினிமாவுக்காக தான் பார்த்துக்கொண்டிருந்த இன்போசிஸ் வேலையை விட்டுவிட்டு வந்து இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சினிமாக்களில் ஜொலிக்க முடியாததால் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் வட்டத்தை அதிகமாக்கி கொண்டிருக்கிறார்.

 முண்டியடிக்கும் ரசிகர்கள்

முண்டியடிக்கும் ரசிகர்கள்

நாளுக்குநாள் இவருக்கு ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் இவருக்கு பலர் ஆதரவாளராகவும் பலர் எதிர்ப்பாளராக இருந்தாலும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் தான் மாடல் உடையில் மட்டுமல்லாமல் பாவாடை தாவணியில் கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை ஆட்டம் காண வைத்திருக்கிறாராம்.

 கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

இவருடைய போட்டோக்களுக்கு உருகி உருகி கமெண்டுகளை போட்டு வந்தாலும் சிலர் இவரை கலாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இவர் அவர்களைப் பற்றி கண்டு கொள்வதே இல்லையாம். அதுபோன்ற சமயங்களில் இவருக்கு விஜய்யின் மோட்டிவேஷனல் பேச்சுதான் தான் ஞாபகம் வருமாம். அவர் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாக்களில் அவார்டு பங்ஷன்களிலும் பேசும் வார்த்தைகள் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் .

 கவர்ச்சியே மூலதனம்

கவர்ச்சியே மூலதனம்

அந்த வார்த்தைகள் இவருக்கு அத்தகைய நேரங்களில் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்குமாம். கருப்பு நிற உள்ளாடையோடு இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து பலர் மூச்சு விட முடியாமல் திணறுகிறார்கள். அந்த அளவிற்கு வெரி ஹாட் பிக்சர் களை இவர் அப்பப்ப வெளியிடு ரசிகர்கள் இவரை மறந்து விடாத அளவிற்கு வைத்துக் கொண்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+