காட்டுக்குள்ளேயே போட்டாச்சு போலயே.. பூஜையை.. கையில அது என்ன??

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜைக்காக சீரியல் நடிகைகள் பல்வேறு வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த மாதிரி தான் தற்போது சாக்ஷியும் மங்களகரமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் .ஆனால் அதைப் பார்த்து பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சாக்ஷி போட்ட அந்த கலகலப்பான போட்டோக்கள்தான் வைரலாகியுள்ளன. தற்போது அந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சாக்ஷி அதகளம்

சாக்ஷி அதகளம்

பிக்பாஸ் 4 பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் போது அதே பிக் பாஸ் 3 இல் பெரும் சர்ச்சைகளையும் என்டர்டைன்மென்ட் பண்ணிக்கொண்டிருந்த சாக்ஷி அகர்வால் வைரலான ஃபோட்டோஷூட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருடைய போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் அர்ச்சனைகளை தூவி வருகிறார்கள்.

சிவந்து போன சாக்ஷி

சிவந்து போன சாக்ஷி

மாடல் உடைகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது குடும்ப குத்துவிளக்காக சிவப்பு கலர் புடவையில் கற்கள் கூட்டத்தில் அமர்ந்து எடுத்த போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார். இதுவரைக்கும் படுகவர்ச்சியாக ஜொலித்துக் கொண்டிருந்தார். இதுவரை இவரை பார்க்காத கோலத்தில் முதல்முறையாக இவருடைய ரசிகர்கள் பார்த்ததால் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.

சேலை போஸ்ட்

சேலை போஸ்ட்

சேலையில் போஸ்ட் போட்டு, அடுத்த போஸ்ட்ல உள்ளாடையோடு கூடிய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை அப்லோட் பண்ணி விட்டார். இவர் உடற்பயிற்சி செய்வதில் தீவிரமாக ஆர்வத்தை வெளிக்காட்டும் இவருக்கு உடற்பயிற்சியில் ஒரு பைத்தியம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு நான் ரசித்து உடற்பயிற்சியை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

நல்லா மெலிஞ்சுட்டாரே

நல்லா மெலிஞ்சுட்டாரே

அது மட்டுமல்லாமல் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் புசுபுசுவென்று இருந்த இவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் முழுக்க முழுக்க உடற்பயிற்சி மூலமாக தனது உடம்பை குறைத்து சிக்கென்று ஆகி விட்டாராம் .அதனால்தான் தான் சிக்கென்று மாறி சிக்ஸ் பேக் வைத்திருப்பதை ரசிகர்களுக்கு காட்டி வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார்.

செம சிக்ஸ் பேக்

செம சிக்ஸ் பேக்

சேலை கட்டி கொண்டிருந்தாலும் மாடல் உடையில் இருந்தாலும் சரி அவரது சிக்ஸ் பேக்கை காட்ட தவறுவதில்லை. வேணும்னா நல்லா சிக்ஸ் பேக்கை ரசிகர்கள் பார்த்து விட்டு போங்கள் என்று வெளிச்சம் போட்டு தான் ரசிகர்களின் கண்களுக்கு குளுமை கட்டிய கொண்டிருக்கிறாராம். ஆனால் இந்த சிவப்பு நிற புடவையில் மட்டும் எதையும் காட்டாமல் கை நிறைய வளையல் ஓடும் தெய்வீகம் ததும்ப ததும்ப போட்டோவை எடுத்து இருக்கிறார்.

நாங்களும் பார்க்கிறோம்

நாங்களும் பார்க்கிறோம்

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை டிவியில் மட்டுமல்ல ஹாட்ஸ்டார் இல் பாருங்கள். நானும் அதில் தான் பார்க்கிறேன் என்று ஆடிக் கொண்டு ஒரு வீடியோவையும் போட்டிருக்கிறார் .இந்த வீடியோவை பார்க்கும் பல ரசிகர்கள் கலாய்த்து கொண்டுதான் இருந்தார்கள். யார் என்ன செஞ்சாலும் எனக்கு கவலை இல்லை கலாய்க்கிறவங்க தாராளமாக கலாய்ச்சிவிட்டு போங்க என்று அசால்டாக இருக்கிறார் சாக்ஷி.

பெண்களுக்கு ஆர்வம்

பெண்களுக்கு ஆர்வம்

இந்த நிலையில் இவர் தற்போது செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை பார்த்து பல பெண்களும் உடற்பயிற்சிக்கு ஆர்வமாக இவரை பின்தொடர்கிறார்கள் .அந்த ஒரு ஹேப்பினஸ் எனக்கு போதும் என்று கூறியிருக்கிறார் .பலருக்கு நாம் முன்மாதிரியாக இருக்கும்போது குறைசொல்லும் சிலரை பற்றி கவலை இல்லை என்று அடாவடியாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+