தழையத் தழைய வேட்டி கட்டி.. மேல் பட்டன் இல்லாமல் சட்டை போட்டு.. சாக்ஷி செம!
சென்னை: கொஞ்ச நாளைக்கு முன்னாடி இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணினாலே அது முழுக்க முழுக்க சாக்ஷி அகர்வால் போட்டோஸ்கள் ஆகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்கள் போட்டு கலக்கிக் கொண்டிருந்தார்.
தற்போது பலர் அவருக்கு போட்டியாக இருந்தாலும் ஒருசில போட்டோஸ் தான் அப்டேட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதுவும் நச்சுன்னு அப்லோட் பண்ணி விடுகிறார். ஒரே போட்டோவில் அத்தனை பேரையும் தூக்கி விடுகிறார்.
அந்த வகையில் இப்போ ஆம்பளை மாதிரி வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு வேற லெவல் போஸ் கொடுத்திருக்கிறார். இதுவும் வைரலாக பரவி வருகிறது.

சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்
பலர் இவருக்கு போட்டியாக ஆக்டிவாக விதவிதமாக போட்டோஸ் அப்லோடு பண்ணினாலும் இவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்று நிரூபிக்கும் விதமாக இவர் போடும் போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இவர் ஆக்டிவாக தினமும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் விதவிதமான செல்பிகளை போட்டு வருகிறார். இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்துள்ளது.

இன்ஸ்டன்ட் ரசிகர்கள்
சினிமாக்களில் இவர் நடித்து கிடைத்த ரசிகர்களை விடவும் இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் இருக்கும் போது இவர் நல்லவரா கெட்டவரா என்று ரசிகர்களே குழம்பிப் போகும் அளவுக்கு இவரது கேரக்டர் இருந்தது. அவரது கேரக்டருக்கு ஆதரவாகவும் பலர் இவருக்கு எதிர்ப்பாகவும் இருந்ததால் இந்த வீட்டை விட்டு வெளியே வரும் நிலைமை ஏற்பட்டது.

ஜிம்னாஸ்டிக் பாடி
இருந்தாலும் வெளியே வந்த பிறகு இவருக்கு ஏக வரவேற்புதான் இன்ஸ்டாகிராமில் ட்விட்டரிலும் கிடைத்திருக்கிறது. இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி வீடியோக்களையும் உடம்பை குறைத்து தன்னுடைய முழு அழகையும் ரசிகர்களுக்காக வாரி வழங்கி காட்டிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் பல ரசிகர்கள் அவரது செல்லமான சிரிப்புக்கும் அடிமையாகி விட்டார்கள்.

எடைக் குறைப்பு வீடியோ
அந்த அளவுக்கு இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருந்தாலும் அவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஆனாலும் இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது இவர் உடல் எடை குறைத்த இடுப்பு அழகையும் செல்பி எடுப்பதையே வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் இவரது தொப்பையை குறைத்து இருக்கும் இடுப்பை விதவிதமான கோணத்தில் சுத்தி சுத்தி போட்டோ எடுக்கிறார்.

இடுப்பழகி
அந்த அழகிய இடுப்பை அப்படியே இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை வாரி வழங்கி கமெண்ட்களை குவித்து வருகிறார்கள் . சில குறும்புக்கார ரசிகர்களும் இந்த வீடியோவில் இவருக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர் உங்களுடைய சிரிப்புக்கு அடிமையாகி விட்டோம் என்றும் சிலர் லவ் யூ பேபி என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.

கலக்கல் வேட்டியில்
அடிக்கடி விதவிதமான உடைகளை அணிந்து போரடித்துவிட்டது தாம் இவருக்கு. கவர்ச்சியில் மட்டுமல்ல சாக்ஷி விதவிதமான உடை அணிவதில் வேற மாதிரி என்று நிரூபிக்கும் விதமாக வேஷ்டி சட்டை அணிந்து தலை முடியை பறக்கவிட்டு அவருடைய செல்லமான சிரிப்பால் ஒரு போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார். இதற்கு பலர் ரசிகர்களும் உருகி உருகி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

கொடி நாட்டிட்டாரே
தலைவி வேற லெவல் என்று ஏக வசனத்தில் ரசிகர்கள் உருகிறார்கள் .போற போக்க பார்த்தா ரசிகர்கள் இவருக்கு கொடியை தூக்கி விடுவார்கள் போல .
ஆரம்பத்தில் இவர் அந்த அளவிற்கு பாப்புலர் இல்லை என்றாலும் தினமும் தன்னை வித விதமாக ஒர்க்கவுட் செய்து அழகையும் மெருகேற்றி உடம்பை மெருகேற்றி ரசிகர்களின் தலைவியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications