நல்லா காத்து வாங்கறாரே சாக்ஷி.. விழுந்து விழுந்து வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் போஸ்ட் இன்ஸ்டாகிராமில் வந்ததும் அவருடைய ரசிகர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்களை பரவச மூட்டி ரசிகர்களின் மனதறிந்து பார்த்து பார்த்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் கூடுவதை போல இவரது போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை சீசன் வந்து இருந்தாலும் அதில் கலந்து கொண்ட ஒரு சிலரை ரசிகர்கள் மறந்து விடுவதில்லை. அந்த மாதிரிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்தவர் சாக்ஷி அகர்வால்.

 ரூம் போட்டு யோசிப்பாரோ

ரூம் போட்டு யோசிப்பாரோ

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் ரசிகர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காக யோசித்து யோசித்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கிறார். இவர் இதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் வழி தான் இணைய தளங்கள். இணைய தளங்களில் தற்போது இவருடைய போட்டோக்களும் இவருடைய வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது.

 நல்லா புசுபுசுன்னு இருந்தாரு

நல்லா புசுபுசுன்னு இருந்தாரு

இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கொஞ்சம் புசுபுசுவென்று இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சிக்கென்று சில்வண்டு போல மாறி விட்டார். அதுவும் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உடல் எடை குறைத்த பிறகு சும்மா இருப்பாரா என்ன அதை நான் மட்டும் பார்க்கக்கூடாது.

 உடற்பயிற்சி செய்கிறார்

உடற்பயிற்சி செய்கிறார்

என்னை மாதிரி பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு எப்படி உடற்பயிற்சி செய்வது என்பது தெரியவில்லை அதனால் நான் சொல்லி தருகிறேன் வாருங்கள் என்று அவருடைய ரசிகர்களுக்கும் அவர் செய்யும் உடற்பயிற்சிகளை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். இதுவரைக்கும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்கள் கூட தற்போது இவருடைய வீடியோக்களை பார்த்து அவருடைய வழியை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்களாம்.

 சூப்பர் ஷூட்

சூப்பர் ஷூட்

உடல் எடையை குறைத்த பிறகு அடிக்கடி போட்டோசூட் நடத்துவதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கும் அவர். அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தாராளமாக பதிவிட்டு வருகிறார் .இவருடைய தாராளமான போஸ்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ரசிகர்கள் மன்றம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர் பாணி தான் இவருக்கு பிறகு வந்த ஷிவானி , தர்ஷா குப்தா, ரம்யா பாண்டியன் என பலரும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 இது தனி ரகம்

இது தனி ரகம்

எத்தனை குதிரை வந்தாலும் இது தனி ரகம் என்று இவரை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள். இவரைப் பற்றி ரசிகர்கள் கமெண்ட் போடுவதை பார்த்து இவரும் மேலும் குஷியாகி விட்டு இன்னும் தாராளமாக காட்டுகிறேன் என்று கோதாவில் இறங்கி இருக்கிறார். இவருக்கு போட்டியாக இருந்த ஷிவானியும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போய்விட்டதால் மேலும் இவருக்கு ரசிகர்கள் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

 போஸ்ட் போடுகிறார்

போஸ்ட் போடுகிறார்

தினமும் நாள் தவறாமல் இவர் போடும் போஸ்ட்களை பார்ப்பதற்காகவே பலரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவரும் அந்த அளவிற்கு ரசிகர்களை ஏமாற்றாமல் போஸ்ட்ஸ்டுகளாக போட்டு தள்ளுகிறார். இவரும் இந்தளவிற்கு தாராளம் காட்டுவதால் ரசிகர்களும் நன்றாகவே இருக்கிறார்கள் அவர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்.

 கலாய்த்தாலும் கவலை இல்லை

கலாய்த்தாலும் கவலை இல்லை

என்னதான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவர் நாளுக்கு நாள் மெருகேறி விதவிதமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். இப்போதும் அந்த மாதிரி தான் பஞ்சு மிட்டாய் கலர்ல ஒரு பேண்ட் இறுக்கமாக போட்டு, அங்கங்க கிழிச்சு விட்டு, அதுவும் ஹார்ட்டின் எல்லாம் போட்டுக்கிட்டு உடற்பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார்.

 எங்க பார்க்கறீங்க

எங்க பார்க்கறீங்க

இவர் செய்யும் எக்சர்சைஸில் பார்த்து ரசிகர்கள் இதில் எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். தினமும் இந்த மாதிரி உடற்பயிற்சி செஞ்சி தான் அவர் சிக்ஸ்பேக் ஏத்தி இருக்கிறாராம் .தொப்பை இருந்த இவரது வயித்தை சிக்ஸ் பேக்காக மாற் றி அதையும் அடிக்கடி காட்டி ரசிகர்களை சூடேத்தி வருகிறார். அதுவும் இப்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அங்கு இங்கு எங்கு பார்க்கிறீங்க இங்க நல்லா பாருங்க என்று ரசிகரின் கண்களை எங்குமே மேய விடாமல் கட்டி இழுத்து வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+