அது என்ன அல்வாத் துண்டா.. இன்பக் குழப்பத்தில் சாக்ஷி ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில், சாக்ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு பிக் பாஸ் நல்ல வெளிச்சம் போட்டுக் கொடுத்தது. அந்த வெளிச்சத்தில் தற்போது சூப்பராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகைப் பொறுத்தவரையில் தினம்தினம் புதுமுகங்கள் வரத்து அதிகமாகி தான் இருக்கு. அதில் ஒரு சிலர்தான் ரசிகர்களை மனதில் ஆழமான இடத்தை பெற்றிருக்கிறார்கள்.

அந்த மாதிரி பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்ட சாக்ஷி அகர்வால் இணையதளத்தில் வைரலாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

 பிக் பாஸ் சாக்ஷி

பிக் பாஸ் சாக்ஷி

பேசிக்கலி சாக்ஷி அறிமுகமானது மாடல் நடிகையாதான். அதன்பிறகு மாடலிங்கிலிரு்நது சினிமாவுக்கு வந்தார். தமிழ், கன்னடம், மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் ஆலோசகராக வேலை பார்த்துகிட்டு பகுதிநேர மாடலிங்கில் வேலை செய்திருக்கிறார். இதிலிருந்துதான் இவருக்கு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 சென்னைக்காரப் பொண்ணு

சென்னைக்காரப் பொண்ணு

சென்னையில் பிறந்தவர்தான் சாக்ஷி. தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். அத்தோடு எம்பிஏ பட்டப் படிப்பினையும் முடித்துள்ளார். அதன் பிறகு மார்க்கெட்டிங் ஃபீல்டில் வேலை பார்த்துகிட்டு மாடலிங்கில் காலடி வைத்து விளம்பரங்களிலும் கலக்கியிருக்கிறார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டார். அதன் பிறகு ஜில்லா ஒரு கலவரம் என்ற ஆல்பத்திற்கு நடித்திருக்கிறார்.

 ராஜா ராணியில் குட்டி வேடம்

ராஜா ராணியில் குட்டி வேடம்

அதன் பிறகு ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் யோகன் படத்திலேயும் காலா படத்தில் ரஜினியின் மருமகள் ஆகவும் நடிச்சிருக்காங்க. விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் பிரண்ட் ஆகவும் நடிச்சிருக்காங்க. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பனசுந்தரி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்திருக்காங்க. அதன்பிறகுதான் பிக் பாஸ் வீட்டுக்குள் போயிருக்காங்க.

 புகழ் வெளிச்சம்

புகழ் வெளிச்சம்

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இவங்க நல்லவங்களா கெட்டவங்களா அப்படின்னு தெரியாம ஒரு பெரிய குழப்பம் ரசிகர்களுக்கு ஓடிக்கொண்டிருந்தது. இவரைப் பற்றி எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவில் இவருடைய கேரக்டர் அமைந்திருந்தது. மேலும் அவர் அங்கு சரியா தூக்கம் இல்லாமல் ரொம்ப தான் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனால் பிக் பாஸ் மூலமாக கிடைத்த வெளிச்சமும் புகழும் அந்த கஷ்டத்தை சரி செய்து விட்டதாம்.

 சூடான போட்டோக்கள்

சூடான போட்டோக்கள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு இவர் கூல் ஆவதற்கு நிறைய இடங்களுக்கு சென்று நிறைய போட்டோஸ் எல்லாம் எடுத்து குவிச்சிட்டு வந்தாங்க. இப்ப இந்த லாக் டவுன் டைம்ல வெளியில போக முடியாது. அதனால் போட்டோ ஷூட் நடத்தி இதே இணையதளத்தில் போஸ்ட் போட்டு இருக்கார். அவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அவரை கலாய்ச்சி தள்ளி இருக்கிறார்கள். சில ரசிகர்கள் உருகி உருகியும் போஸ்ட் போட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+