தமிழில் தள்ளாட்டம்... இந்தியில் வீறுநடை போடும் பிக்பாஸ்... இதுக்கு காரணம் மெனக்கெடல்தாங்க
Recommended Video

மும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை காட்டிலும் அதை நடத்தும் சல்மான் கானின் மெனக்கெடலே நிகழ்ச்சி வெற்றிக்கு காரணமாக தெரிகிறது.
பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இந்தியில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை ஒரே வீட்டில் தங்க வைத்து 100-ஆவது நாள் கடைசியாக தங்கும் போட்டியாளரே அந்த சீசனில் வெற்றி பெற்றவராவார்.
இந்த நிகழ்ச்சி மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவது சல்மான் கான். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
இன்ஸ்டாகிராம்
தற்போது இந்தியில் 12-ஆவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் அதன் தொகுப்பாளர் சல்மான் கான் உடற்பயிற்சி செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஆர்வம்
அதில் பிக்பாஸ் சீசன் 12-க்காக தான் தயாராவதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று ஒவ்வொரு சீசனுக்கும் போட்டியாளர்களை காட்டிலும் தொகுப்பாளரான சல்மான் கான் ஆர்வத்துடனும் மெனக்கடலுடன் நடத்தி வருகிறார்.

கமென்ட்கள்
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை கூறியுள்ளனர். மேலும் ஓ மை காட் சல்மான் கான் உங்களை நிகழ்ச்சியில் காண துடிக்கிறோம் என்றெல்லாம் அவருக்கு கமென்ட்கள் வருகின்றன.
View this post on InstagramThis is how I am preparing for Bigg Boss season 12 #BB12
A post shared by Salman Khan (@beingsalmankhan) on
புகைப்படங்கள்
அவரது புகைப்படம் போட்ட ஒரு மணி நேரத்துக்குள் 4 லட்சம் பேர் லைக் போட்டு விட்டனர். கடந்த ஆண்டு பிக்பாஸ் செட்டில் உள்ள ஜிம்மில் சல்மான் கான் நடித்த படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பெயிண்டிங்காக செய்திருந்தனர்.

பிரயோஜனம் இல்லை
இதுதான் இந்த நிகழ்ச்சி இந்தியில் 12 சீசன் வரை சென்றிருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழில் 2-ஆவது சீசனே தள்ளாட்டத்தில் உள்ளது. இந்த சீசனை வெற்றிக்கரமானதாக்க கமல்ஹாசன் எத்தனை முயற்சிகள் செய்தாலும் அதில் பிரயோஜனம் இல்லை.

முக்கியம்
முதல் சீசனை மக்கள் விரும்பி பார்த்ததை போல் இந்த சீசனை பெரும்பாலானோர் பார்ப்பதில்லை. இதை எப்படியாவது ஓட வைக்க கடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீண்டும் செட்டுக்குள் வந்துள்ளனர். அவர்களும் ஏதேதோ போட்டிகளை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எடுபடவில்லை. மெனக்கடல் முக்கியம் ஆண்டவரே!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications