நாக சைதன்யாவுக்கு துலிபாலாவுடன் திருமணம் ஒருபக்கம்.. பாலிவுட் பிரபலத்தை மணக்கும் சமந்தா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் சமந்தா ருத் பிரபு. அதுவும் விஜய்க்கு ஜோடி என்றால், 90களின் சிம்ரன்-விஜய் ஜோடி போல அருமையாக பொருந்தியது இவரது முக அமைப்பு. தனது அழகு மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் சமந்தா. 2010 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல விருதுகளை வென்றுள்ள சமந்தா, தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர், நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, சிறிது காலம் என்னவோ மகிழ்ச்சியாகதான் இருந்தார். ஆனால், 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

அர்ஜுன் கபூருடன் காதல் வதந்திகள்: சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு, அவரது காதல் வாழ்க்கையைப் பற்றிய வதந்திகள் விதவிதமாக பரவுகிறது. சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது. இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டது, இந்த வதந்திகளுக்கு மேலும் எண்ணையை ஊற்றியது. ஆனால், இந்த வதந்திகளை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
சமந்தாவின் படங்கள்: காதல் வதந்திகளுக்கு இடையிலும், சமந்தா தனது தொழில் வாழ்க்கையில் பக்காவாக கவனம் செலுத்தி வருகிறார். மயோசைடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். பல படங்களில் நடித்து வரும் இவர், தனது நடிப்புத் திறமையை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அர்ஜுன் கபூரும் பல படங்களில் நடித்து வருகிறார்.
காதல் கட்: அதேநேரம், அர்ஜுன் கபூர் சமீபத்தில் மலைக்கா அரோராவை பிரிந்துள்ளார். இந்த பிரிவுக்கு காரணம் சமந்தாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. இதுவரை சமந்தா அல்லது அர்ஜுன் கபூர் இருவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. இது வெறும் வதந்தியாக கூட இருக்கலாம். இருப்பினும், சமந்தா ரசிகர்களோ, அர்ஜுன் கபூர் வேண்டாம் சம்மு என கெஞ்சி போஸ்ட்களை போட்டு வருகிறார்கள். அர்ஜுன் கபூருக்கு 39 வயதாகிறது. மலைக்கா அரோராவுடன் சுற்றி பிரேக் அப் ஆனவர். எனவேதான் ரசிகர்கள் சமந்தாவிடம் கெஞ்சியபடி போஸ்ட்களை அள்ளித் தெளித்து வருகிறார்கள்.
மாஜி மைத்துனர் திருமணம்: இதனிடையே, நாகார்ஜுனா குடும்பத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே, நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நாகார்ஜுனா நேற்று, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அகில் அக்கினேனி, தனது காதலி ஜைனப் ரவ்ஜியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஜைனப் ரவ்ஜியை தங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று நாகார்ஜுனா குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் முன்னாள் கணவரும், நாகார்ஜுனா மகனுமான, நாக சைதன்யாவுக்கும், நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சமந்தா குறித்த வதந்திகள் முக்கியத்துவம் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications