இதுவரை இப்படி ஒரு சீனில் சமந்தா நடித்தது இல்லை.. சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிசால் ரசிகாஸ் குஷி
சென்னை: சமந்தா மற்றும் வருண் தவான் நடித்த 'சிட்டாடல்: ஹனி பன்னி' (citadel: honey bunny) தொடரில் இவர்கள் இருவரும் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் கிளாமர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. புதன்கிழமையன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடர் ஸ்பை-ஆக்ஷன் ஜானரைச் சேர்ந்ததாகும். இந்த நிலையில் சமந்தா நடிப்பிலான கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
வைரலாகும் ஒரு வீடியோவில், சமந்தா வருண் தவானுடன் லிப்-லாக் செய்யும் காட்சி உள்ளது. மேல் சட்டை ஓபனாகி உள்ளாடை தெரிகிற வகையிலும் போட்டோ உள்ளது. 2010 ஆம் ஆண்டு திரையுலகில் என்ட்ரி செய்த சமந்தா இதுவரை இப்படி ஒரு காட்சியில் நடித்தது இல்லை. நாக சைதன்யாவுடன் விவாகரத்தாகியுள்ள நிலையில் சமீப காலமாக சமந்தா கவர்ச்சி ரோல்களை விரும்பி ஏற்கிறார். ஃபேமிலி மேன் 2வது பாகத்தில் பஸ்சில் வைத்து சமந்தாவின் மார்பில் ஒருவர் கை வைப்பது போலவும், அதை இவர் அனுமதிப்பது போலவும் காட்சி இருக்கும்.
போலீசிடமிருந்து தனது குழுவை தப்பிப்போகச் செய்ய அட்ஜஸ்ட்மென்ட் செய்வது போலவும் அதே சீரிசில் ஒரு காட்சி உண்டு. புஷ்பா படத்தில் சமந்தா போட்ட குத்தாட்டமும் வெகு ஃபேமஸ். இதுவரை சமந்தா ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக ஊ சொல்றியா மாமா இருந்து வருகிறது. ஆனால் லிப்-லாக்கில் இதுதான் முதல்முறை என்கிறார்கள் ரசிகாஸ்.

இதற்கு முன்பெல்லாம், கவர்ச்சியான காட்சிகளிலும், பிகினி அணிவதிலும் சமந்தா தயக்கம் காட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தாறுமாறு தக்காளிச் சோறு வகை ரோல்களை கையில் எடுத்துவிட்டார். "வருண் தவானே, இந்த காட்சியில் நீங்கள் அற்புதமாக நடித்திருக்கிறீர்கள். இத்தனை கவர்ச்சியான நாயகியுடன் இணைந்து நடிப்பது எளிதான காரியமல்ல," என்று ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் ரசித்து பதிவிட்டுள்ளதை பார்க்க முடிந்தது. சமந்தாவின் கவர்ச்சியான நடிப்பை பாராட்டி ஜொள்விட்ட மற்றொரு ரசிகர், "சமந்தா ரூத்லெஸ் பிரபு" என்று அடைமொழி வைத்து குறிப்பிட்டுள்ளார்.
'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரில், ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்யும் ஒரு உளவாளியாக வருண் தவான் நடித்துள்ளார். அவர் சமந்தா ரூத் பிரபுவை ஒரு டாஸ்கில் சேர்த்துக் கொள்கிறார், இதில் அவர்கள் ஒரு போட்டி நிறுவனத்துடன் மோதுகிறார்கள். நீண்ட மற்றும் சில மர்மமான பயணத்திற்குப் பிறகு, சரியானது தவறானது இடையிலான எல்லைகள் அவர்களுக்கு எப்படி தெளிவாகின்றன என்று கதை நீள்கிறது.
சமந்தா ரூத் பிரபு இந்த தொடரின் முக்கிய ஈர்ப்பு நட்சத்திரமாக திகழ்கிறார், முழு கதையிலும் அவர் சுற்றி வருகிறார். பயந்த சுபாவம் கொண்ட அவர் தைரியமான, அச்சமற்ற உளவாளியாக மாறுவது போல காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியும் தீயாக வந்துள்ளது. அதையெல்லாம் விடுங்க, கிஸ்சிங் சீன் எந்த எபிசோட் என்றுதானே கேட்கிறீர்கள். அதை சொன்னால் ஒரு எபிசோடு பார்த்துவிட்டு நடையை கட்டிவிடுவீர்களே. முழு எபிசோட்களையும் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். முழு ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது.












Click it and Unblock the Notifications