நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமண ஏற்பாடுகளை கூடவே இருந்து கவனிக்கும் "சமந்தா"
சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி ஜோடியாக திகழ்ந்த சமந்தா - நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இருவரும் பிரிந்த பின்னர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது அந்த தகவல் உண்மையாகி இருக்கிறது.
சமந்தா மற்றும் நாகார்ஜுனா மகனான, நாக சைதன்யா இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். இருவரும் தங்களது வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஷோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம்: சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா இருவரும் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மிகக் குறைந்த அளவிலான நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஷோபிதா துலிபாலாவின் மெஹந்தி விழா: இந்நிலையில், இருவரின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஷோபிதா துலிபாலாவின் வீட்டில் மெஹந்தி சடங்கு கொண்டாடப்பட்டது. இந்த சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷோபிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

தற்போது, ஷோபிதா மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு "திருமண மங்கை" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவில் சமந்தாவும் உள்ளார். ஆனால் முதல் மனைவி சமந்தா என நினைத்துவிடாதீர்கள். ஷோபிதா துலிபாலாவின் தங்கை பெயரும் சமந்தா. அவரும் சகோதரியுடன் இருக்கையின் ஒரு கை பகுதியில் அமர்ந்துள்ளார். இன்னொரு கை பகுதியில் நாக சைதன்யா அமர்ந்துள்ளார். சமந்தா தனது சகோதரியின் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். தனது வருங்கால மைத்துனரான நாக சைதன்யாவை பார்த்து கொழுந்தியார் சமந்தா புன்முறுவல் பூத்தபடி உள்ளார்.

ஷோபிதா துலிபாலாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஷோபிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி ஜோடியாக திகழ்ந்த சமந்தா - நாக சைதன்யா பிரிந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தற்போது நாக சைதன்யா புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அவருக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications