தொடாதீங்க குளிச்சுட்டேன்.. அழுக்காக்கறேன் வா.. சேர்ந்து குளிக்கலாம்.. ஆஹா.. ஆககககா!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் மருமகள்களுக்குள்ள ஹோம் கீ, பரம்பரை செயினை யாருக்கு கொடுக்கலாம்னு ஒரு போட்டியே வைக்கறாங்க.
ரெண்டாவது மருமக வடிவுதான் ரெண்டையும் கைப்பத்த துடிக்கறா..ஆனா, ஜெயிச்சது என்னவோ சம்பாதான். வீட்டுல வயசானவங்க கிட்ட ராத்திரி படுக்கப் போம்போது 10 நிமிஷமாவது பேசிட்டு போகணும்னு பெரியய்யா. சின்னம்மாகிட்ட வந்து பேசிட்டு போறதுன்னு மனசை இழுக்கறா.
சாவியும், நகையும் சம்பாவுக்குத்தான்னு சொல்லியும் வேணாம், நாத்தனார் திருமண வாழ்க்கை சரியில்லாம இருக்கு. அவங்க வாழ்க்கையை சரி பண்ற முக்கிய கடமை இருக்குன்னு சொல்லி, அதை நான் பார்த்துக்கணும்னு சொல்லி வாங்கிக்க மறுக்கறா சம்பா.

எந்திரிங்க சின்னையா
சம்பா காலையில் எழுந்து, தலைக்கு குளிச்சு டவலை தலையில் கட்டிக்கிட்டு, வந்து கணவனை எழுப்பறா.எப்படி தூங்கறதை பாரு.. சின்னையா எழுந்திரிங்க சின்னையா வேலைக்கு போக வேணாமான்னு எழுப்பறா.

ரொமான்ஸ் பார்வை
கண் விழிச்சவுடன் அழகாக நிற்கும் சம்பாவைப் பார்த்து ஒரு ரொமான்ஸ் லுக் விடறான். அவள் கையை இழுத்து அருகிலே உட்கார வைக்கறான். குளிக்க போகணும்தான். அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கேன்னு இழுக்கறான்.

அது என்னது
சின்ன வேலையா.. அது என்னது.. எனக்கே தெரியாம.. குளிக்கறதுதான் உங்க வேலை...இப்போ என்னன்னு கேட்கறா சம்பா. அந்த வேலை செய்ய ஒரு 10 இல்ல 15 நிமிஷம் போதும் சம்பான்னு அவளை நெருங்க சின்னையா.. விஷயம் புரிஞ்சு போச்சு. நான் குளிச்சுட்டேன் சின்னையான்னு சொல்றா.

ரெண்டுபேரும்
உன்னை அழுக்காக்கிடறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம் சம்பான்னு சொல்றான் சின்னய்யா.. அது எல்லாம் ஒண்ணும் வேணாம்.. பாத்ரூம்ல எல்லாம் இருக்கு போயி குளிங்கன்னு பாத்ரூம் வரை விட்டுட்டு நகர

ஷாம்பூ டவல்
சம்பா சோப்பு இல்லை வந்து பாருன்னு சொல்றான்.. அங்கதான் இருக்கு.. இப்போதான் சின்னையா எடுத்து வச்சேன்னு சொல்றா..சம்பா ஷாம்பூன்னு இவன் கேட்க..அங்கதான் சின்னையா இருக்கு.. பார்க்காம கேட்காதீங்கன்னு சொல்றா.. சம்பா சாத்தியமா டவல் இல்லை வந்து பாருன்னு சொல்றான்.

வைக்காம விட்டுட்டேனோ..
அங்கதான் சின்னையா வச்சேன்.. மறந்துட்டேனோன்னு இவை குழப்பத்துடன் உள்ளே போக, அவன் இழுத்துக்கறான் உள்ளே.. ஒரே கசமுசா.. அப்புறம் வெட்கத்தோடு வெளியில வர்றா சம்பா.. திரும்ப ஒரு தடவை குளிச்சாளான்னு காமிக்கலியே... நான் எப்படிங்க பொய் சொல்றது..












Click it and Unblock the Notifications