கலர் கலர் ரீலு...சன் நியூஸ் வண்ணத்திரை பாரு!
சென்னை: ரீல் அறுந்து போகும் அளவுக்கு சிலர் கலர்கலரா பொய் சொல்வார்கள். ஆனால், சன் நியூஸ் வண்ணத்திரை இது ஆதாரத்துடன் கூடிய அக்மார்க் நிஜம். சன் நியூஸ் சானலில் தினமும் காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை வண்ணத்திரை என்று சினிமா தொடர்புடைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருது.
ஒரு சாதனையை குறிப்பிட்டு அந்த சாதனையோடு தொடர்புடைய விஷயங்களை சின்ன சின்ன காட்சிகளோடு நிகழ்ச்சியாகத் தொகுத்து வழங்குவதுதான் வண்ணத்திரை நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி மூலம் தெரியாத பல் விஷயங்களை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு. முக்கியமாக சினிமா துறை தொடர்புடையவர்களுக்கு இது பெரும் பொக்கிஷமாக கிடைக்கும் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

மாடர்ன் தியேட்டர்ஸ்
அந்த காலத்தில் படப்பிடிப்பு தளங்கள் சேலத்தில்தான் இருந்தன. சேலத்தில் மிகவும் புழப்பெற்ற தியேட்டர் என்றால் அது மாடர்ன் தியேட்டர்ஸ்தான். இதில் மேடை நாடகம், சினிமா வெளியீடு... சினிமா ஸ்டுடியோ என்று பல நிகழ்வுகள் அரங்கேறிய இடம். வண்ணத்திரையில் புதுமைகளை புகுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் என்று ஒரு எபிசோட் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

பாடகர் ஜெயச்சந்திரன்
மலையாள தேசத்து மயக்கும் குரல் என்று பாடகர் ஜெயச்சந்திரன் குறித்த பல்வேறு விஷயங்கள். இவர் இசை ஞானி இளையராஜா இசையில் ஜானைகியுடன் சேர்ந்து பாடிய டுயட்ஸ் ஏராளம். அப்படி புகழ்பெற்ற பாடல்களில் தாலாட்டுதே வானம், கொடியிலே மல்லிகைப்பூ மயக்குதே மானே போன்ற பாட்லகளை. இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கும் பாடகர் ஜெயச்சந்திரன் குறித்து ஒரு எபிசோட் வண்ணத்திரை நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

சக்தி கிருஷ்ணாசாமி
1960 களில் புகழ்பெற்ற வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பரந்த சக்தி கிருஷ்ணசாமி பற்றிய ஒரு தொகுப்பு நிகழ்ச்சியையும் வண்ணத்திரை நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பி இருக்கிறது சன் நியூஸ் சானல். வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன் போன்ற காவிய படங்களுக்கு வசனம் எழுதியவர். இவர் மேடை நாடகம் அரங்கேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் சக்தி என்கிற நாடக குழுவை துவங்கி நடத்தி வந்து இருக்கார். இவரது குழுவில் இருந்தவர்கள்தான் சிவாஜி, எம்.என்.நம்பியார் ஆகியோர்.

ஆடலுடன் பாடல்
இயக்குநர் கே.ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களில் எம்ஜிஆர், சிவாஜி என்று பல படங்களை இயக்கியவர் கே.ஷங்கர். இவர் கேரளாவில் பிறந்தவர்.. ஏவிஎம் ஸ்டிடியோவில் படத்தொகுப்பாளராக இருந்து, பின்னர் ஏவிஎம்மின் தயாரிப்பு படங்களை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தவர். எம்ஜிஆர் கே. சங்கர் கூட்டணி வெற்றி கூட்டணி என்று புகழ் பெற்ற காலக்கட்டம் அது. பணத்தோட்டம்..குடியிருந்த கோயில் இப்படி பல..ஆடலுடன் பாடலைக் கேட்டு என்கிற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. இதுக் குறித்தும் சன் நியூஸின் வண்ணத்திரை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications