Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனம் ஷெட்டி கையைப் பிடிச்சு.. செம ரொமான்ஸா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேண்டில் லைட் டின்னர் கொண்டாடியுள்ளார் சனம் ஷெட்டி. எனது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்து விட்டாய் மோனே என்று அவர் அந்த கேப்ஷனில் கூறியுள்ளார்.

ஆனால் யாரு கூட என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்களுக்கு ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பிய சனத் தின் போஸ்ட் பார்த்து கமெண்ட்களை கொட்டி தீர்க்கிறார்கள் ரசிகர்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும் அதில் கலந்துகொண்ட கன்டஸ்டன்டை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடவில்லை .அதிலும் சனம் எனும் பெயரைக் கேட்டாலே பெரும் ரசிகர்கள் குஷி ஆகி விடுவார்கள்.

ஷிவானி வாய் வரைக்கும் போய்ட்டு.. ரம்யா பாண்டியனுக்கு கேக் ஊட்டிய பாலாஜி!

ரசிகர்கள் மனதில் சனம்

ரசிகர்கள் மனதில் சனம்

அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மூலமாக சனம் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார் .இவர் இந்த நிகழ்ச்சியில் கடைசிவரை இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் எண்ணி வந்தனர் .ஆனால் இவர் பாதியிலே வெளியேற்றப்பட்டது அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஷாக்காகி இருக்கிறார்கள்.

கெளரவம்

கெளரவம்

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும் போது ஜாலியாகவும் தைரியமாகவும் தனது சுய கௌரவத்துடன் இந்த வீட்டிற்குள் வலம் வந்துகொண்டிருந்தார். தனது கருத்தை யார் எதிர்த்தாலும் இவர் தைரியமாக வெளிப்படுத்தியதை பார்த்து பலருக்கு இவரை பிடித்து விட்டது .இதில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பாக மாடலிங்கில் கலக்கி கொண்டிருந்தாலும் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

ஆனால் தற்போது இந்த பிக்பாஸ் மூலமாக இவர் பெயரைச் சொன்னதுமே பல பேருக்கு டக்கென்று ஞாபகம் வரும் அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார். ஏற்கனவே இவருக்கும் பிக்பாஸ் பிரபலம் ஒருவருக்கும் காதல் திருமணம் வரை போய் நின்று விட்டது .இந்த பிரச்சனை இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பெரிய பூதாகரமாக செய்தி சேனல்களில் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தாலும் அதற்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர் .

காதல்

காதல்

அதனால் தங்களுடைய வேலைகளில் பிசியாக இருந்து கொண்டனர். ஆனால் தற்போது மீண்டும் சனத்திற்கு காதல் துளிர் விட்டு இருக்கிறதாம். அதனை அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். அவர் பெங்களூருவில் இருக்கும் நிலையில் தனது காதலருடன் காதலர் தினத்தை கேண்டில் லைட் டின்னர் உடன் கொண்டாடி அதில் காதலர் இவரது கையை பிடித்து இருக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .

கையைப் பிடித்தபடி காதல்

கையைப் பிடித்தபடி காதல்

இந்த போட்டோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்களும் பிக்பாஸ் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதில் யார் என்று அவர் குறிப்பிடவில்லை. யார் அவர் என்பது பலருடைய கேள்வியாக இருந்து வருகிறது யார் அவர் அவருடைய முகத்தைக் காட்டுங்கள் என்று தான் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த போட்டோதான் இப்போது வைரலாகியுள்து.

அவரா இருக்குமா

அவரா இருக்குமா

ஆனால் கேண்டில் லைட்டில் தேவதை போல ஜொலித்துக் கொண்டிருக்கும் சனத்தின் கையை பிடித்த நபர் பாலாஜி ஆக இருக்குமோ என்று சில ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள் .ஆனாலும் அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்று பாலாஜியின் ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஆனால் யார் சனத்தின் மனதை கொள்ளை கொண்ட நபர் என்று தான் இப்ப வரைக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+