Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னோட தேடல் என்ன தெரியுமா.. கால் மடக்கி முரட்டு போஸ் கொடுத்த சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் பிக்பஸ் நிகழ்ச்சியில் மட்டும் கெத்து இல்ல எப்போதுமே கெத்தாக தான் சுத்திக் கொண்டிருக்கிறேன் என தீப்பிடிக்கும் பார்வையால் பட்டையைக் கிளப்பியுள்ளார் சனம் ஷெட்டி.

பார்த்ததும் மிரண்டு போகிற வகையில் பலருக்கும் ஷாக் கொடுக்கிற மாதிரி மொட்டைமாடியில் கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் சனம் ஷெட்டி.

அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சனம் ஷெட்டின்னாலே பயர்தான் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஜாஸ்திதான்

ரசிகர்கள் ஜாஸ்திதான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்து விட முடியாது .இந்த நிகழ்ச்சியை பல்வேறு ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் இதற்கு ரசிகர்கள் அதிகமாகத்தான் இருந்து வருகின்றனர் .நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்காக பல பேர் காத்துக் கிடந்தனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அனைத்து சிக்கல்களையும் தாண்டி இதில் முதலிடத்தில் இருந்து கொண்டிருந்தது.

மாறிப் போன வாழ்க்கை

மாறிப் போன வாழ்க்கை

இந்த நிகழ்ச்சி சேனலை மட்டுமல்லாமல் அதில் கலந்துகொண்ட கன்டஸ்டன்ட் லைப்பையும் டோட்டலாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு சீசனிலும் பலருக்கும் இது நல்ல திருப்புமனையாக அமைந்தது .பல்வேறு கன்டஸ்டன்ட் களுக்கு இது நல்ல ஒரு பிளாட்பாரம் ஆக இருந்திரக்கிறது .சில கன்டஸ்டன்ட் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இதுவரைக்கும் சம்பாதித்து வைத்திருந்த பேரும் புகழையும் இழந்துவிட்டு எதிர்மறை கேரக்டராக விமர்சிக்கப்பட்டு வந்தனர் .

செம சப்போர்ட்

செம சப்போர்ட்

ஆனால் ஒரு சிலரோ இதற்கு முன்பு வரைக்கும் இப்படித்தான் என இவருக்கு நெகட்டிவாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இப்படி எனக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த மாதிரிதான் சனம் ஷெட்டியும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வரும் போது பல்வேறு ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

அம்புலி படத்தில் அறிமுகம்

அம்புலி படத்தில் அறிமுகம்

இதற்கு முன்னர் இவர் அம்புலி திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் சைடு ரோலில் நடித்து இருந்தாலும் இவருக்கு என்று அடையாளம் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இவர் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தாலும் முதல் முதலில் தான் படித்த கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் வேலைக்கு தான் சென்று கொண்டிருந்தார் .ஆனால் அது அவருக்கு மன நிறைவு தரவில்லை என்று தான் கிடைக்கும் நேரங்களில் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார் .

நல்ல திறமை

நல்ல திறமை

மாடலிங்கில் இவருடைய திறமையையும் அழகையும் பார்த்து தான் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது . அம்புலி படத்தில் இவர் 1970களில் கல்லூரியில் படிக்கும் கல்லூரி பெண்ணாக இவர் நடித்திருந்ததால் பலருக்கும் இவரை சரியாக அடையாளம் தெரியவில்லை என்றாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கிடைத்த சிறு வேடங்களிலும் தனது திறமையை நிரூபித்து இருந்தார்.

பிக் பாஸ் மூலம் பிரபலம்

பிக் பாஸ் மூலம் பிரபலம்

ஆனால் எத்தனை திரைப்படங்களிலும் மாடல்களிலும் இவர்களுக்கு இருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கித் தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் .இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் இவருக்கும் இதற்கு முன்னர் சீசனில் கலந்துகொண்ட தர்ஷனுக்கு ஏற்பட்ட காதல் மோதலை பற்றி பலரும் சனத்தின் கேரக்டரை தப்பாக நினைத்துக் கொண்டிருந்தனர் .

பிடிச்சிருக்கு

பிடிச்சிருக்கு

ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவருடைய கேரக்டரை ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்திரக்கிறார்கள் .அதனால் தான் இவர் இந்த சீசனில் இருந்து பாதியில் வெளியேறும் போது கூட பலரும் இவருக்காக ஆதரவாக இணையதளங்களில் ஹாஸ்டேட் உருவாக்கி வைரலாக்கி வந்தனர்.இந்த நிலையில் மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கன்டஸ்டன்ட்க்கான டான்ஸ் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொள்ளும் நிலையில் இவர் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.

செம போஸ்

செம போஸ்

அதைப் பார்த்து இவருடைய ரசிகர்கள் குஷி ஆகி இருக்கிறார்கள். மீண்டும் இவர் திரையில் தோன்ற போகிறார் என்னும் ஒரு சந்தோசம் இருந்தாலும் இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படத்துக்கு பலரும் கமெண்ட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர் .அவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஐடியில் இருந்து இவருடைய போட்டோக்களை பதிவிட்டு வருவதால் இவருடைய போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+