நிலாகூட நிச்சயதார்த்தம்.. அவ தங்கச்சி கூட லிப் லாக்கா பலே பலே சஞ்சய்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் பகல் நேர சீரியலில் டாப் லெவலுக்கு போயிகிட்டு இருக்குன்னு சொல்லலாம்.
கதையில் சில மர்மங்கள் என்று இருந்தாலும் கதை என்னவோ குடும்ப கதை போல நகர்வது, ரொம்ப நல்லாருக்கு. இதனாலேயே அனைத்து தரப்பு பெண்களையும் இந்த சீரியல் கவர்ந்துள்ளது.

நிலாவை பெத்த அம்மாவே நிலாவை வெறுப்பது ஏன், நீலாம்பரி தம்பி மனைவி மன நிலை சரியில்லாமல் போனது ஏன், நிலாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் அண்ணன் நிலாவின் அண்ணன் ஆனது எப்படி, எதனால் தங்கையிடம் பேச்சுவார்த்தை இல்லை என்பது போன்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.
நீலாம்பரி, நிலாவை ஏமாத்தி சஞ்சய்யை கல்யாணம் பண்ணிக்க நிலாவும் நீலாம்பரி ஆன்ட்டியை நம்பி, சஞ்சயை கட்டிக்க சம்மதம்னு சொல்லிடறா.
இதுக்கு நடுவுல நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவை காதலிப்பதாக சொல்லி, அவளுடன் ஜாலியாக பொழுதை போக்கறான் சஞ்சய். ஆனாலும், நிலாவை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசையில தீர்மானத்துல இருக்கான்.

ஒரு வழியா நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளை நீலாம்பரி தன் வீட்டில் ஏற்பாடு செய்யறாங்க. தனக்கும், கார்த்திக்குக்கும்தான் நீலாம்பரி ஆன்ட்டி நிச்சயதார்த்தம் செய்து வச்சு, ரிங் மாத்திக்க சொல்லுவாங்கன்னு நிலா ஆவலோடு இருக்கா.
அந்த சமயத்துல மாடி மேல் இருக்கும் சஞ்சய், ஸ்வேதாவை பார்த்து மேல வான்னு கூப்பிடறான்.இவளும் அம்மாவுக்கு தெரியாம மேல போக, இதை அவளின் அம்மா பார்த்துடறாங்க.
ரூமுக்குள்ள போ ஸ்வேதான்னு சஞ்சய் சொல்றான். அவளும் உள்ளே போக, பின்னால் சஞ்சய் ரூமுக்குள்ள போறான்.என்ன ரிங் மாத்தற வரைக்கும் வந்துருச்சு.. எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன்னு ஸ்வேதா கேட்க, கல்யாணம் மட்டும் உன்னோடதான் ஸ்வேதான்னு சமாதானப் படுத்தி ரொமான்ஸ் பண்றான்.

ஸ்வேதாவின் அம்மா இவளை பின் தொடர்ந்து வந்தவங்க, ரூமில் இருந்து குரல் வர்றதை தெரிஞ்சு கதவைத் திறந்தா... லிப்லாக் சீன்... எப்படி இருக்கும்?சஞ்சய் போன் வந்தவன் போல நழுவிடறான். ஸ்வேதா அம்மானு சொல்ல ஒரு அறை கன்னத்தில் விழுது.
நான் சஞ்சயை காதலிக்கிறேன்மன்னு சொல்ல மறுபடியும் அடி.இதை வேற யாராவது பார்த்திருந்தா குடும்பத்தோட தற்கொலை செய்துக்க வேண்டியதுதான்.இனிமே இந்த வேலை வச்சுக்கிட்டே.. நான் உன்னை கொன்னு புதைச்சுருவேன். நிலா கல்யாணத்தை ஒட்டி, நானா எவ்ளோ திட்டம் போட்டு இருக்கேன். இதைவிட பெரியஇடத்துல உன்னை கல்யாணம் பண்ணி குடுப்பேண்டின்னு சொல்றாங்க.
இருந்தாலும் எப்புடி...அக்காவைக் கட்டிக்க போறவன்.. தங்கச்சியோட... சீய்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications