எனக்கு நீயும் வேணும் நிலாவும் வேணும்..டபுள் கேம் ஆடும் சஞ்சய்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி எதனால் நிலாவை டார்கெட் செய்து, தன் மகன் சஞ்சய்க்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்கன்ற விஷயம் இன்னும் மர்மமாவே இருக்கு.
நிலா கார்த்திக்கை காதலிக்க, நிலா சஞ்சய்யை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னது கார்த்திக்குக்கு தெரிஞ்சுருது. மனசு வேதனையில் குடிச்சுட்டு காரை ஓட்டி விபத்துல சிக்கிக்கறான் கார்த்திக்
நிலாவின் தங்கை ஸ்வேதாவை காதலிக்கறதா சொன்ன சஞ்சய், நிலாவை கல்யாணம் செய்துக்க எப்படி சம்மதிச்சான்னு குழம்பி போயி, சஞ்சயை சந்திக்க போன் செய்யறா.

நிலாவை எனக்கு
ஸ்வேதா கோபமாக உட்கார்ந்திருக்க, என்ன ஸ்வேதா கோபமா உட்கார்ந்திருக்கேன்னு கூலா கேட்கறான் சஞ்சய். என்ன சஞ்சய் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கறே.. என்கிட்டயும் பழகறே...நிலாவை கல்யாணம் செய்துக்க்வும் சம்மதிக்கற.. என்ன சஞ்சய் இதுன்னு கத்தறா.என்னை உனக்கு பிடிக்கலையான்னு கேட்கறா.. உன்னையும் பிடிக்கும், நிலாவையும் பிடிக்கும்னு சொல்றான் சஞ்சய்.

கோபம் குழப்பம்
நீ என்ன சொல்றே.. எனக்கு ஒன்ணுமே புரியலை.. கோபமும் வருது.. குழப்பமாவும் இருக்கு. அன்னிக்கு என்ன சொன்னே.. சும்மா அம்மாவுக்காக பொண்ணு பார்க்க வந்தேன்னுதானே சொன்னே.. இப்போ என்னையும் புடிக்கும், நிலாவையும் புடிக்கும்னு சொல்றன்னு கேட்கறா.

பிடிக்கும் நிலாவை
நிலாவை பிடிக்கும்னு சொன்னேன்..அதுல உனக்கு என்ன பிரச்சனை..நிலாவை நேரில் பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு அதான் சொன்னேன்..உனக்கு என்ன இதுலன்னு கேட்கறேன் சஞ்சய். ஏன்னா.. உன் மேல நான் பைத்தியமா இருக்கேன்.. உன்னை லவ் பண்றேன் சஞ்சய்னு சொல்றா. எஸ்..எஸ்னு அவளுக்கு தெரியாமல் குதூகலிக்கிறான் சஞ்சய்.

நிலாவும், நீயும்
சும்மா உன் மனசிலேர்ந்து இது வருதான்னு பார்க்க டீஸ் பண்ணினேன் ஸ்வேதா.நான் தனியா பிசினெஸ் பண்ண ஆசைப்படறேன். அம்மா நிலாவை கல்யாணம் செய்துகிட்டாத்தான் பணம் தருவேன்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் இந்த டிராமா. நான் உன்னைத்தான் லவ் பண்றேன்.. உன்கூட வாழத்தான் ஆசைப்படறேன்னு சொல்லி அவளை நம்ப வைக்கறான்.மனசுக்குள்ள எனக்கு நீயும் வேணும், நிலாவும் வேணும்னு சொல்றான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications