ஐலாவுக்கு தெரியாமல் மகன் அர்ஷை கொஞ்சும் சஞ்சீவ்.. தாடி குத்த போகுது பாப்பு.. ஆலியா மானசா அக்கறை!
சென்னை: ஐலாவுக்கு தெரியாமல் மகன் அர்ஷை சஞ்சீவ் கார்த்திக் கொஞ்சும் போது குழந்தைக்கு தாடி குத்த போகிறது என ஆலியா மானசா அக்கறையுடன் கோபப்படுகிறார்.
சின்னத்திரையில் மேட் பார் ஈச் அதர் ஜோடிகளில் ஒருவர் சஞ்சீவ் கார்த்திக்- ஆலியா மானசா. இவர்கள் ராஜா ராணி சீரியலில் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜா ராணி பார்ட் 2 வில் ஆலியா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் 2ஆவது முறையாக கர்ப்பம் தரித்ததை அடுத்து அந்த சீரியலில் இருந்து விலகினார்.

ஆலியாவும் சஞ்சீவும்
இந்த நிலையில் ஆலியாவும் சஞ்சீவும் ரசிகர்களுடன் சமூகவலைதள பக்கத்தில் அவ்வப்போது பேசுவது வழக்கம். அப்போது ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீர்கள், பெண் குழந்தை பிறந்தால் என்ன வைப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெண் குழந்தைக்கு ஒரு பெயரை குறிப்பிட்ட சஞ்சீவ், ஆண் குழந்தை பிறந்தால் அர்ஷ் என பெயர் வைப்பதாக தெரிவித்தார்.

மார்ச் மாதம்
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஆலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை செவிலியரிடம் இருந்து பெற்று ஆரத்தழுவும் புகைப்படத்தையும் சஞ்சீவ் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ஆலியா தற்போது இரு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார்

சஞ்சீவ் கயல் சீரியலில் பிஸி
சஞ்சீவ் கயல் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள். அந்த வகையில் சஞ்சீவ் அர்ஷை கொஞ்சும் வீடியோவை ஆலியா தனியார் தொலைகாட்சி சேனலுக்கு வெளியிட்டுள்ளார். ஒரு மாதமேயான தனது மகனின் தலையின் பின்புறத்தில் இரு கைகளை வைத்துக் கொண்டு சஞ்சீவ் கொஞ்சுகிறார்.

தாடியுடன் கொஞ்சும் சஞ்சீவ்
சஞ்சீவ் தாடியுடன் குழந்தையை கொஞ்சுவதை பார்க்கும் ஆலியா, அவனுக்கு குத்த போகுது, உங்கள் தாடிய வச்சி அவனை கிஸ் பண்ணி கொடுமைப்படுத்துறீங்க பாப்பு நீங்க! என்கிறார். பின்னர் சஞ்சீவ் கதவை மூடு ஐலா பார்த்தால் பொசசிவ் ஆவாள் என்கிறார் சஞ்சீவ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது போல் குழந்தையை கொஞ்சும் சம்பவம் வீட்டுக்கு வீடு நடந்தாலும் சீரியல் நடிகர், நடிகைகளின் வீடியோக்களை அவர்களது ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.












Click it and Unblock the Notifications