"குணா" படம் பிளாஃப் ஆனதற்கு "தளபதி" படம்தான் காரணம்.. சந்தானபாரதி ஓபன் டாக்
சென்னை: குணா படம் பிளாஃப் ஆனதற்கு காரணமே தளபதி படம்தான் என இயக்குநர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தற்போது வசூலை குவித்து வரும் நிலையில் குணா படத்தின் இயக்குநர் சந்தானபாரதி அந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். அதிலும் குணா குகை செட் போட்டு எடுத்துள்ளார்கள்.
அவ்வளவு அற்புதமாக இயற்கையாக எப்படி செட் போட்டார்கள் என தெரியவில்லை. முதலில் நான் பார்த்த போது குணா குகைக்கு செல்ல அனுமதி இல்லையே இவர்கள் எப்படி எடுத்தார்கள் என யோசித்தேன். அப்புறம்தான் அது செட் என தெரியவந்தது. நாங்கள் குணா குகைக்கு போன போது எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.
ஒரு குகை வேண்டும் என கேட்டபோது அங்கிருந்த கைடு ஒருவர் எங்களை அழைத்து சென்றார். அப்படி போய் பார்த்ததுதான் அந்த குகை. இந்த இடத்தில் நிறைய குழிகள் இருக்கும். அதில் விழுந்தால் நேராக கீழே போய்விட வேண்டியதுதான். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என அந்த கைடு சொன்னார். ஆனால் எங்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.
அங்கு 3 குகைகள் இருந்தன. அதில் 3ஆவது குகைக்கு செல்வதுதான் மிகவும் கஷ்டமாக இருந்தது. நாங்கள் 4 பேர் முதலில் போய் பார்த்த போதே ஒவ்வொருத்தராக கைகளை பிடித்துக் கொண்டு போனோம். ஆனால் ஒரு யூனிட்டே போக வேண்டும் என்றால் எப்படி பாதுகாப்பு அளிப்பது என யோசித்தோம். வனத்துறையினரிடம் பேசிய போது அவர்கள் அந்த குகைக்கு செல்ல படிகளாக வெட்டிக் கொடுத்தனர்.
பக்கவாட்டில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி கொடுத்தனர். கயிறு மூலம்தான் மூன்றாவது குகைக்கு சென்றோம். டிபன் சாப்பிட்டுவிட்டு காலை 7 மணிக்கு கீழே சென்றால் அத்துடன் மாலை 5 மணிக்குத்தான் மேலே வருவோம். சாப்பாடெல்லாம் கிடையாது. 34 ஆண்டுகள் கழித்து மஞ்சுமெய் பாய்ஸால் குணா படம் பேசப்படுகிறது என்பது பெருமையாக இருக்கிறது.
மஞ்சுமெல் பாய்ஸில் நடந்த சம்பவம் கடந்த 2006 ஆம் ஆண்டு உண்மைச் சம்பவம் என்கிறார்கள். இதை தமிழ் சினிமா மிஸ் செய்தது என எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது கேரளாவில் நடந்த சம்பவம், இது நமக்கு பரீட்சயம் இல்லை. இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்தவுடன்தான் நமக்கு இந்த சம்பவம் நடந்ததே தெரிகிறது.
குணா படமும் தளபதி படமும் ஒன்றாக வெளியே வந்தது. ஆனால் குணா படம் மக்களுக்கு புரியவில்லை என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால் இன்று குணா படம் பேசப்படுகிறது என்றால் அப்போ அது நல்ல படம்தானே! இவ்வாறு சந்தானபாரதி தெரிவித்திருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications