முடியல மச்சான்... எப்பவும் அவ நினைப்பாவே இருக்கு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் சுமங்கலி சீரியலில் அனு பழசை மறந்துட்ட நித்யாவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் தரேன்னு அழைச்சுக்கிட்டு வர்றா. நித்யாவை அனுவோட புருஷன் சந்தோஷ் ஒரு காலத்தில் காதலிச்சுருக்கான்.

நித்யான்னா அவனுக்கு ரொம்ப இஷ்டம், ஆனா கட்டின அனுவுக்கு துரோகம் செய்யக்கூடாதுன்னு வைராக்கியமா இருக்கான். நித்யா மேல இருக்க ஆசையை அவளை வெறுப்பதன் மூலம் வெளிப்படுத்தறான்.

நித்யா இப்போதைக்கு பழசை மறந்துடறதுனால உலகம் தெரியாம வெகுளியா அனு அக்கா, சந்தோஷ் சார்னு பாசமா இருக்கா.இது சந்தோஷுக்கு பிடிக்கலை.

நாள்

நாள்

அனுவுக்கும், சந்தோஷுக்கு கல்யாண நாள்னு சொல்லிட்டு, அவங்களுக்கு பொக்கே, பேனர், கேக், லஞ்சனு ஆர்டர் செய்து சந்தோஷப்பட்டறா நித்யா. ஆனா, நம்மை தனிமையில் இருக்க விடாம தொந்திரவு செய்யறாளேன்னு கோவம் வருது சந்தோஷுக்கு.

வந்தால்

வந்தால்

வீட்டுக்கு வந்தால், வீட்டில் பயங்க அலங்காரம், அனுவின் அப்பா அம்மா, அண்ணன், அனுவின் மாமியார், மாமனார் குழுமி இருக்காங்க. என்னது இதுன்னு கேட்டா, உங்க கல்யாணத்துல இதெல்லாம் செய்யலேன்னு அத்தை சொல்லி கேள்விப்பட்டேன்.. அதான் நானே ஆரஞ்ச் பண்ணினேன்னு சொல்றா. இப்போதும் சந்தோஷுக்கு பிடிக்கலை.

விளையாட்டு

விளையாட்டு

கடைசியாக இசை நாற்காலி விளையாட்டு இருக்கு. இதுல யார் ஜெயிக்கறாங்களோ அவங்களுக்கு அரை பவுன் மோதிரம்னு சந்தோஷ் அப்பா சொல்றார். கடைசியாக நித்யாவும், அனுவும் மட்டும் ஒட்டிக்கொண்டு இருக்க,. நித்ய உட்கார போகும்போது, நாற்காலியை கொடூர முகத்துடன் தள்ளி விடறான் சந்தோஷ்.. நித்யா கீழே விழறா.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

மாப்பிள்ளை நீங்க தவறி செய்யலை, நிஜமாவே செய்திருக்கீங்க..ஏன் மாப்பிள்ளை இப்படி பண்றீங்க.. நான் உங்க மச்சான் என்கிட்டே மனசை விட்டு சொல்லுங்கன்னு கேட்கறான் அனுவின் அண்ணன். எங்கே அனுப்பக்கம் விழுந்துருவீங்களோன்னு பயமா இருக்கா? ஒரு காலத்துல நீங்க காதலிச்ச பொண்ணு வேறன்னு சொல்றான்.

மச்சான்

மச்சான்

ஆமாம் மச்சான்.. மனசு முடியலை.. நான் என் கட்டுப்பாட்டில் இல்லைன்னு சொல்றான். அப்படீன்னா அவளை வேற எங்கியாவது தங்க வைக்கலாம்ல.. எங்க மச்சான்.. அவள் ஆபீசுக்கு வர்றாளேன்னு சொல்றான். நம்மை நம்பி வந்த அவளை எங்க மச்சான் கொண்டு விடறது. பாவம் எதுவும் அவளுக்கு நினைவு இல்லையேன்னு பாவமா சொல்றான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+