Kaatrin Mozhi Serial: பூ குடுக்கறான்.. கட்டி புடிக்கறான்.. என்னங்கடா டேய்..!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேசமுடியாத கண்மணிக்கு சந்தோஷ் ஒற்றை ரோஜா குடுக்கறான்.. கட்டி புடிக்கறான்.
வாய் பேச முடியாத பொண்ணாச்சே... கட்டி புடிச்சுட்டு அப்புறம் டெண்டர் கிடைச்ச சந்தோஷத்தில் கட்டி புடிச்சுட்டேன் கண்மணி சாரின்னு சொல்றான்..
எண்ணங்கடா டேய்.. பணக்காரங்க உங்க இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் செய்வீங்களா?

அலுவலக முதலாளி
அலுவலகத்துக்கு முதலாளி சந்தோஷ்... அவனுக்கு டெண்டர் திருட்டு போனது கூட தெரியவில்லை. அலுவலகத்தை ஒப்படைத்த மாமா போன் செய்து என்ன சந்தோஷ், நர்மதா என்டர் பிரசஸ் நம்மளை விட குறைச்சலா கோட் பண்ணி இருக்காங்களாம் என்று சொல்ல சான்ஸே இல்லை மாமான்னு சொல்றான்.

செக் பண்ணு
இல்லை சந்தோஷ் செக் பண்ணு என்று மாமா சொல்ல, அப்போதுதான் செக் பண்றான் சந்தோஷ். திருட்டு போனது தெரிய வருது. அதை கூட கண்டு பிடிக்க தெரியாம அங்கு வரும் கண்மணியிடம், கண்மணி டெண்டர் திருட்டு போயிருச்சு கண்மணி. என் கம்பியூட்டரில் இருந்து யாரோ திருட்டாங்கன்னு சொல்றன்.

கண்மணி சொல்றா
அப்போது கண்மணி சொல்றா... நான் பார்த்தேன் என்று. நீ .பார்த்தியா என்று எப்போ பார்த்தே என்று கேட்கிறான். எப்போன்னு சொன்னால்தான் கேமிராவில் பார்க்க முடியும் கண்மணி என்று அவளை துரிதப்படுத்துகிறான் சந்தோஷ். அதை கூட தேட முடியாதவனாக வாய் பேச முடியாத பெண்ணிடமே எல்லாவற்றையும் கேட்க முயலுகிறான்.

அடையாளம் காண்பிக்கிறாள்
கண்மணி திருடியவனை அடையாளம் காட்டுகிறாள். பின்னர் அவனை கண்டு பிடித்து போலீசிடம் ஒப்படைக்கிறான். இவன் என்ன முதலாளி... பின்னர் டெண்டர் கிடைச்சுருச்சுன்னு குதிக்கிறான். அங்கு வரும் கண்மணியை உணர்ச்சி வேகத்தில் கட்டிக்கிறானாம்.

சாரி கேட்பது
பிறகு சாரி கண்மணி என்று விலகிக்கறான். பாவம் வாய் பேச முடியாத அந்த பேதை பெண்.. சந்தோஷ் கட்டிப் பிடித்ததை எண்ணி எண்ணி வீட்டுக்கு போயி தானும் சந்தோஷும் இருப்பது போல ஒரு ஓவியம் வரைந்து வைத்து அதை எடுத்து வச்சு அழகு பார்க்கிறாள். இது எங்கு சென்று முடிய போகிறதோ...!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications