Thirumanam Serial: கரப்பான் பூச்சி.. கண்ணை கட்டி மனைவி மடி... ஆஹா ரொமான்ஸ்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சந்தோஷ், ஜனனி ஒன்று சேர்ந்தாலும் சேர்ந்தார்கள் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சி வைக்கறாங்க. அப்படி இருந்த ஜோடியா இப்போ இப்படி மாறிட்டாங்கன்னு சொல்ற அளவுக்கு ரொமான்ஸ்ல நனைஞ்சு பிழியறாங்க.
கோயிலுக்கு மஞ்சள் காட்டு மைனாவா மஞ்சள் புடவையில் ஜொலித்த அழகு பொண்டாட்டி ஜனனியை சந்தோஷ் தூக்கிகிட்டே படி ஏறினான். பார்த்த மாயாக்கா வயிறு எரிஞ்சுட்டாங்க. இவங்க ரொமான்ஸ் அத்தோட முடியலை.
குடும்பமே சேர்ந்து ஜாலியா கும்மியடிக்கறாங்க. அப்போதும் மாயாக்கா வயிறுதான் எரியுது. மாயாக்கா புருஷன் பாவம்...அப்பிராணி. அவர் தம்பிதானே தம்பி பொண்டாட்டிதானேன்னு எதையும் கண்டுக்கறதில்லை. அதுக்காக பொண்டாட்டி மாயாவையும் கண்டுக்கலேன்னா இப்படி அவங்க வயிறு எரியத்தானே செய்யும்.

மனைவி மடியில் பலூன்
மனைவி மடியில் பலூன் வச்சு உட்கார்ந்து இருக்கணுமாம். அவங்கவங்க புருஷன் கண்ணைக் கட்டிக்கொண்டு மனைவியின் மடியில் உட்கார்ந்து அந்த பலூனை உடைச்சுடணுமாம். ஆஹா ஜாலின்னு புருஷன்கள் எல்லாரும் களத்துல இறங்கிடறாங்க. வழக்கம் போல ஹீரோதான் ஜெயிச்சார். சரியா கண்ணைக் கட்டிக்கிட்டு ஜனனியை நெருங்க அவள் தன கால் கொலுசால் லேசாக வெள்ளிக் கொலுசு மணி என்று அசைக்க, கண்டு பிடிச்சுட்டான் சந்தோஷ். மடியில் உட்கார்ந்து பலூனை வெடிச்சுட்டான். ரொமான்ஸில் ஜோடி மெய் மறந்து உட்கார்ந்து இருக்க, விளையாட்டு முடிஞ்சாச்சுன்னு சொல்லி பிரிக்கறாங்க.

குளிக்கறதை எட்டி பார்த்தாங்களா?
பெட்டில் படுத்து இருக்கான் சந்தோஷ்...ஆ...ன்னு அலறிக்கிட்டு ஓடிவந்த ஜனனி, சந்தோஷை கட்டிப் பிடிச்சுக்கறா. அது மட்டுமா.. பயமா இருக்கு காப்பாத்துங்கன்னு அலறுகிறாள். அழுதுகிட்டே கண்ணை மூடிகிட்டு நிக்கறா. என்னம்மா பாத்ரூமில் குளிக்கும்போது யாராவது எட்டிப் பார்த்துட்டாங்களானு சந்தோஷ் சமயோசிதமா ஒரு கேள்வி கேட்கறான். பின்னே பாத்ரூமில் இருந்து இப்படி ஓடிவந்தா வேற என்ன கேட்பாங்களாம்!

கரப்பான் பூச்சி இன்னுமா?
இல்லை.. அங்கே அங்கே என்று ஜனனி ஒன்னும் சொல்லாமல் அழறா.என்ன அங்கே.. வா பார்க்கலாம் என்று அவன் பாத்ரூமுக்கு அவளையும் அழைச்சுட்டு போயி பார்த்துட்டு, ஒன்னும் இல்லையே என்ன பார்த்தே ஜனனி என்று கேட்கிறான். அவள் மெதுவாக சுவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, கரப்பான் பூச்சியைப் பார்த்துவிட்டு, அவன் மேல் சாய்ந்து அதோ அதோ என்று காட்டுகிறாள். என்ன கரப்பான் பூச்சியா என்று கேட்கிறான்.. ஆமாம் என்று ஜனனி தலையசைத்து அவனை இன்னும் இறுகக் கட்டிக்கறா. இன்னுமா இந்த கரப்பான் பூச்சி ரொமான்ஸ் எல்லாம் கைக் கொடுக்குது?

மீசை வச்ச பூச்சி
மீசை வச்ச ஆண்களுக்கு பயப்படாத பெண்கள் மீசை வச்ச இந்தக் கரப்பான் பூச்சிக்கு மட்டும் பயப்படறாங்களே.. மிஸ்டர் கரப்பான் பூச்சி அடிக்கடி இங்கே விசிட் பண்ணுங்கன்னு சொல்றான். அதை விரட்டி விடுங்கன்னு ஜனனி சொல்றா. அதை விரட்டி விட்டா நீ இப்படி என்னைக் கட்டிக்குவியான்னு பொண்டாட்டியை கொஞ்சறான் சந்தோஷ். பிறகு ஆசையா ஜனனிக்கு மேக்சி வாங்கிட்டு வந்து குடுத்து போட்டு வர சொல்றான். ஜனனி போட்டுக்கிட்டு வர்றா..
வாவ்.. பார்பி டால் மாதிரி கலக்குற என் பொண்டாட்டின்னு கிட்டே வர்றான்.. இன்னிக்கும் ரொமான்ஸ் இருக்கு பாருங்க.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications