சரண்யா பாக்யராஜூக்கு கல்யாணம் ஆகாமலே குழந்தையா? உறுத்தும் மனசாட்சி.. நல்ல நடிகை.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: பாக்யராஜ் மகள் சரண்யாவுக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும், நிச்சயம் அவர் ரீஎன்ட்ரி தருவார் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. சரண்யா பற்றி பயில்வான் தந்திருக்கும் இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பாக்யராஜ் மகள் சரண்யா பாக்யராஜ் சமீபத்தில் அவள் விகடன் youtube சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. முதல்முறையாக இந்த பேட்டியை தந்ததுடன் 18 வருடங்களுக்கு பிறகு தந்த பேட்டி என்பதால், அனைவரின் கவனத்தையும் இந்த பேட்டி பெற்றிருந்தது.

அதில், "எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.. என்னுடைய குழந்தையை கவனித்துக்கொண்டு, பிசினஸையும் கவனித்து வருகிறேன். நாம் ஒரு குழந்தைக்கு அம்மாவாகும்போதுதான், நம்முடைய அம்மாவும், அப்பாவும் இப்படித்தானே நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாங்க என்று புரிகிறது. இப்போது ஃபேஷன் டிசைனிங் கவனம் செலுத்தி வருகிறேன். ஒரே நேரத்தில் குழந்தையையும் கவனித்து கொண்டு, பிசினஸையும் பார்த்து கொள்வது சவாலான வேலையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
குழப்பம்: சரண்யாவின் இந்த பேட்டியை பார்த்ததுமே இணையவாசிகள் குழம்பிவிட்டார்கள்.. சரண்யாவுக்கு எப்போது திருமணம் நடந்தது? அவரது கணவர் யார்? எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் விவாதத்தை கிளப்பினார்கள். "எப்படியோ சரண்யா சந்தோஷமாக இருந்தால் சரிதான்" என்று சொல்லி அவருக்கு வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் என்ட்ரி தந்துள்ளார்.. AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், சரண்யா சொன்ன பேட்டி விவரங்களை பகிர்ந்துள்ளார். அதில் பயில்வான் ரங்கநாதன், "எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று சரண்யா பாக்யராஜ் சொல்லி உள்ளார். இது அனைவருக்குமே அதிர்ச்சியை தந்துவிட்டது.
தற்கொலை முயற்சி: அந்த பேட்டியில் சரண்யா, "நான் ஒரு முறை தற்கொலை முயற்சி செய்தேன். கடைசி நேரத்தில் என் அம்மாவும், அப்பாவும் காப்பாற்றிவிட்டார்கள். என் அப்பாவுக்கு என் நலனில் நிறைய அக்கறை உண்டு.. தினமும் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் நான்தான் அப்பாவின் மேக்கப்பை கலைத்துவிடுவேன்.. நான் கலைத்துவிட்டால், அப்பாவுக்கு அடுத்த பட வாய்ப்புகள் வரும் என்பது அப்பாவின் நம்பிக்கையாகும்.
அம்மா, அப்பாவிடம் இருக்கும் அட்டாச்மென்ட், என் தம்பி மீது எனக்கில்லை.. நாங்கள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டுதான் இருப்போம். ஒன்றரை வயதுதான் வித்தியாசம்.. சின்ன வயசில் இருந்தே சாந்தனு நடித்து வந்தாலும், பெயர் சொல்லும் அளவிற்கு படம் அமையாதது எனக்கு வருத்தம்தான்.
கேரக்டர்: நான் நடிக்க மாட்டேன் என்று சினிமாக்காரர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நல்ல கேரக்டர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். அது சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி நடிக்க தயார் என்று சரண்யா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சரண்யாவின் இந்த அறிவிப்பானது, அவருக்கு நல்ல வாய்ப்பினை மீண்டும் பெற்றுத்தரும் என்று நம்பலாம். ஏனென்றால், தாய் எட்டடி பாய்ந்தால், மகள்16 அடி பாய்வார்.. ஆரம்பத்திலேயே நல்ல பாவனையுடன், நல்ல படத்தில் நடித்தார். என்ன துரதிருஷ்டமோ, அவருக்கு முதல் படமே சக்ஸஸ் இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில், சரண்யா ரீ என்ட்ரி தருவார் என்று நம்பலாம்.
தவறு என்ன: "நான் செய்த தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள், என்னாலும் மன்னிக்க முடியவில்லை. மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன். என் மனசாட்சி உறுத்தி கொண்டேயிருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார் சரண்யா.
ஆனால், அவர் என்ன தப்பு செய்தார்? அந்த குழந்தையின் அப்பா யார்? சரண்யா திருமணம் செய்து கொண்டாரா? யாரை திருமணம் செய்து கொண்டார்? இப்போதும் அவருடன் சேர்ந்து வாழ்கிறாரா? போன்ற கேள்விகளுக்கு சரண்யா பதில் அளிக்கவில்லை" என்றெல்லாம் அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் சொல்லி உள்ளார்.
தற்கொலை முயற்சி: ஆனால், காதல் தோல்வியால் 3 முறை சரண்யா தற்கொலைக்கு முயன்றதாகவும் சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. அதற்கு பிறகு சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியினால் தான் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
அதேபோல, சரண்யாவுக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்திருந்தன. இந்த திருமண செய்தியை பாக்யராஜ் குடும்பத்தினர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு பிறகு, அந்த திருமணம் வதந்தி என்றார்கள். இப்படி பல்வேறு யூகங்கள் சரண்யா குறித்து வெளியாகியிருந்த நிலையில்தான் தனக்கு குழந்தை இருப்பதாக சரண்யா வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
இதையடுத்து, சரண்யாவிற்கு குழந்தை இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரண்யாவிற்கு இதுவரையில் திருமணம் ஆகவில்லை. அப்படி எப்படி குழந்தை வந்தது? என்றும் ஒருவேளை சரண்யா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாரா? என்றும் கேள்விகள் எழுந்தாலும், வாழ்த்துக்களை மறக்காமல் தெரிவித்து வருகிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications