Nachiyarpuram Serial: தமிழ் பசங்களுக்கு வேட்டி சட்டைதான் செம கெத்து... மதுரை மருமகள்!
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியலில் அடுத்த சீசனில் மீனாட்சியாக நடித்தவர் ரக்ஷிதா. இவர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். 17 வயசிலேயே சினிமா,தொலைக்காட்சி தொடர்கள் பக்கம் வந்துவிட்ட ரக்ஷிதாவுக்கு தமிழ் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வம்.
பெங்களூருவில் தங்களது வீட்டை சுற்றி தமிழர்கள் வாழ்ந்து வந்ததால், அவர்களுடன் பேசியே தமிழ் சரளமாக பேச வந்ததாக கூறுகிறார். இப்படித்தான் தமிழ் சீரியல்களில் நடிக்க மிக ஆர்வம் கொண்டு சென்னைப் பக்கம் வந்து இருக்கார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் கைகொடுத்தது. உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் ரக்ஷிதா. மதுரை மருமகள் ஆகிவிட்ட ரக்ஷிதா, தமிழ் பசங்களுக்கு வேட்டி சட்டைதான் செம கெத்து என்று சொல்கிறார்.

மாமியார் பாப்பா
சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் ரக்ஷிதா. தினேஷ் மதுரைக்காரர்..இருவரும் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மதுரையில் வசிக்கும் தினேஷின் பெற்றோருடன் நாட்களை செலவிட மதுரைக்கு சென்றுவிடுகின்றனர். மாமியார் தன்னை மிகவும் செல்லமாக பார்த்துக்கொள்வார் என்றும், கணவர் தினேஷ் அழைப்பது போலவே மாமியாரும் பாப்பா என்றே செல்லமாக கூப்பிடுவார் என்றும் ரக்ஷிதா கூறுகிறார்.

வேட்டி வேட்டி வேட்டி கட்டு
தினேஷ், ரக்ஷிதா இந்த ரியல் ஜோடி, இப்போது ஜோடி சேர்ந்து ரீல் ஜோடியாகவும் ஜீ தமிழ் டிவியின் நாச்சியார்புரம் சீரியலில் நடித்து வருகின்றனர். இருவரின் ஜோடி பாப்புலர் என்பதால், ஜீ தமிழ் டிவி இந்த யுக்தியைக் கையாண்டு இருக்கிறது. தினேஷ் எப்போதும் நாச்சியார்புரம் சீரியலில் வேட்டி சட்டை கெட்டப்பில்தான் வருகிறார். இவரை மிஸ்டர் ஒயிட் என்றுதான் சீரியலில் மற்றவர்கள் கூப்பிடுகிறார்கள்.

கிரேஸ் வெட்டி
எனக்கு பசங்க வேட்டி சட்டை போட்டு வந்தால்தான் பிடிக்கும். வேட்டியில் தினேஷைத் பார்த்தால் ரொம்ப கிரேஸியாகிருவேன். தமிழ் பசங்களுக்கு வேட்டிதான் அழகு. வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, மீசையை முறுக்கிவிட்டா... தமிழ் பசங்களை அடிச்சுக்க ஆளில்லை என்று கூறுகிறார் ரக்ஷிதா. தனது விருப்பத்துக்கு ஏத்த மாதிரியே தினேஷ் வேட்டிசட்டை கெட்டப்பில் வரும்படி நாச்சியார்புரம் சீரியல் அமைஞ்சுருச்சு.. எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அவருக்கு புடவை
தினேஷை மாமான்னுதான் கூப்பிடுவேன்.. அவர் செல்லமா கூட என்னை அடிக்க கை ஓங்கியதும் கிடையாது. நானும் அவரை செல்லமா தட்ட கூட கையை ஓங்கியதில்லை. காதலிச்ச நாள் முதல் இன்னி வரைக்கும் தினேஷை நான் பேர் சொல்லி கூப்பிட்டதில்லை. அவருக்கு நான் புடவை காட்டினா ரொம்ப பிடிக்கும். இவ்ளோ சீக்கிரம் புடவை கட்டிட்டியா.. இவ்ளோ அழகா கட்டி இருக்கேன்னு பாராட்டுவார். எங்காவது போகணும்னா புடவை கட்டிக்க சொல்லி வற்புறுத்துவார். எனக்கும் புடவை கட்டுவதுதான் பிடிக்கும்.

ஜீ தமிழ் டிவி
ஜீ தமிழ் டிவி எங்க திறமையை மதிச்சு... இந்த வாய்ப்பை கொடுத்து இருக்காங்க.ரியல் ஜோடி ரீல் ஜோடியா நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பதே அரிது. அதனால், நாங்க ரொம்ப சின்சியரா இந்த சீரியலில் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கோம். மக்கள் தரும் ஆதரவுதான் நாங்க ஜோடியா நடிப்பதற்கும் காரணம். அந்த ஆதரவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கோம் என்று சொல்கிறார் ரக்ஷிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications