சரிகமப மேடையில் தேவயானியின் கணவர் சொன்ன அந்த வார்த்தை! காதலின் அடையாளம்! இது பலருக்கு பாடம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சி, இந்த வாரம் ஒரு உணர்வுபூர்வமான அத்தியாயத்தைக் கண்டது. நடிகை தேவயானியின் மகள் இனியா, இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராகக் கலந்துகொண்டிருக்கும் நிலையில், சிறப்பு விருந்தினர்களாக தேவயானி மற்றும் அவரது கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் கலந்துகொண்டனர்.
ராஜகுமாரனின் நெகிழ்ச்சியான பேச்சு
இந்த வாரம் 'டெடிகேஷன் ரவுண்டு' நடைபெற, இனியா தனது அம்மா மற்றும் அப்பாவிற்காகப் பாடலை டெடிகேட் செய்தார். அப்போது மேடையில் பேசிய ராஜகுமாரன், "என்னுடைய மகள் இனியா, 'சரிகமப' நிகழ்ச்சியில வந்து நிற்கிறபோதுதான், நாம ஏதோ சாதிச்சுட்டோம்னு நான் நினைக்கிறேன். என் மகள் இந்த நிலைமைக்கு வந்திருக்கான்னா, அதுக்குக் காரணம் என்னுடைய உழைப்பு ஒண்ணும் இல்ல. தேவயானி அவங்களுடைய உழைப்புதான்," என்று தன்னுடைய மனைவியைப் பெருமைப்படுத்தினார்.அவரது இந்த வார்த்தைகள், பல வருடங்களாகத் தனது குடும்பத்திற்காக உழைத்து வரும் தேவயானிக்கு அளித்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

தாயும், மகளும் - ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு
ராஜகுமாரன் பேசி முடித்தவுடன் மேடைக்கு வந்த தேவயானி, கண்கலங்கியபடி பேசினார். "என்னுடைய அம்மா எனக்காக எல்லாம் பண்ணினாங்க. நான் அதை எல்லாம் என்னுடைய குழந்தைகளுக்குப் பண்ணனும்னு நான் விரும்புறேன். என் இனியா ரொம்ப என் பக்கம் வர மாட்டா. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலமாக இப்போ என் மகள் என் கூட ரொம்ப அட்டாச் ஆகிட்டா," என்று உருக்கமாகப் பேசினார். இந்த கியூட்டான தருணம் இணையத்தில் வைரலாகி, பலரின் இதயங்களையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு இனியா, தனது அம்மா திரைப்படங்களில் வருவது போல, பாரம்பரியமான பாவாடை தாவணியில் மிகவும் எளிமையாக வந்திருந்தார். அவரது இந்தத் தோற்றம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இனியாவின் வெற்றிப் பயணம்
'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சி ஏப்ரல் 2025-ல் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இனியா பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, அவர் பாடிய பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், காதோரம் லோலாக்கு, வா வா என் தேவதையே, நலம் நலம் அறிய ஆவல் போன்ற பாடல்கள் ஹிட்டாகி, இணையத்தில் வைரலாகின.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முன்பே, ஒரு பேட்டியில் தேவயானி தனது மகள் குறித்துப் பேசியிருந்தார். "என் மகள் இனியாவுக்குப் பாடகியாக வர ஆசை. அவளது திறமையைக் கண்டறிந்து, அவளுக்கு இசைப் பயிற்சி கொடுத்து வருகிறேன்," என்று அவர் கூறியிருந்தார். இப்போது, 'சரிகமப' மேடையில் தனது மகள் வெற்றி பெறுவதைக் கண்டு, தேவயானி அடைந்த மகிழ்ச்சி, ஒரு தாயாக அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது. இனியாவின் இந்த இசைப்பயணம் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications