Sarika : துரத்திய துரதிருஷ்டம்! கமலுக்கு முன்பு! சரிகாவுக்கு "சச்சின்", கபில்தேவுடன் Break Up-ஆ?
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு கமலுக்கு முன்பே இருவருடன் காதல் பிரேக் அப் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர்கள் யார் என்பதை பார்க்கலாம். சரிகா துரதிருஷ்டமான பெண் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் ஏன் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: இந்த உலகில் பாவப்பட்ட ஜென்மம் நான் தான்.... என சில சினிமா வசனங்கள் உண்டு.அதற்கு பொருத்தமான ஒரு பெண் குழந்தை இருந்ததென்றால் அது நான் அறிந்த அந்த பூனைக்கண் நடிகை.

சரிகா... சரிகா (முன்னாள்) கமல்ஹாசன்... சரிகாவின் அம்மா ஒரு போல்டான ராஜபுத்ர பெண். சரிகாவின் அப்பா ஒரு சாதுவான போட்டோகிராபர். சரிகாவுக்கு நான்கு வயதிருக்கும் போதே சரிகாவை போட்டோ எடுத்த அப்பா அதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு போட்டிக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு அது ஒரு குதூகலம். ஆனால் சரிகா அந்த போட்டியில் தேர்வாகவில்லை.
ஆனால் அதிர்ஷ்டம் வேறு வழியில் வந்தது. சரிகாவின் போட்டோவை பார்த்த ஒருவர் தயாரிப்பாளர் பி.ஆர்.சோப்ராவிடம் 'உங்கள் படத்துக்கு நல்ல குழந்தை கிடைத்துவிட்டது' என கொடுக்க சரிகா சினிமாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தாயோடும், தந்தையோடும் போய் ஒப்பந்தமாகி ஷுட்டிங் தொடங்கிய சரிகா படம் முடியும் முன்பே தாய்-தந்தை பிரிவதைத்தான் கண்டார். தந்தை போனதும் ஒரே தாய்க்கு ஏடிஎம்மானார் சரிகா. எனி டைம் மணி...
சரிகா நடித்த சோப்ராவின் படம் ஓடியது. ஆனாலும் சரிகாவுக்கு வாய்ப்புக்காக அம்மா சரிகாவோடு ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைந்து சான்ஸ்பெற்றார். படத்தின் காட்சியில் ரீடேக் வாங்கினால் முதல் அடி அம்மாவிடமிருந்து விழும். மற்றவரின் முன்னால் அந்தக் குழந்தை வாங்கும் அடி யூனிட் ஆட்களுக்கு ரத்தக் கண்ணீர் வரும்.
இரண்டு படங்களுக்கு பிறகு சரிகாவின் மார்க்கெட் சூடு பிடிக்க கூடுதல் பையனாகவே நடித்தார் சரிகா. காலையில் எழும் போதே 'மேக்கப் ரூமுக்கு போ' என்கிற கட்டளையோடு எழ வேண்டி வரும். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஸ்டுடியோவில். நான்கு வயது முதல் நடிக்கத் தொடங்கியதால் பள்ளிப்படிப்பு பற்றி தெரியாது.எழுதவோ, வாசிக்கவோ தெரியாது.
வசனம் படிக்க பலர் சொல்லி அம்மா ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணியின் டியூஷன் ரெடியாக்க அது மற்றொரு இம்சை சரிகாவுக்கு. அதை விட கொடுமை சரிகாவுக்கு 12 அல்லது 13 வயதாகும் போது வளர்ச்சி கண்ட மேக்கப் மேன்கள் ஆண் வேடமிடும் சரிகாவை ஆணாக்க 'கையாளும் விதங்கள்' சரிகாவை வெறுப்புற செய்பவை...
ஆனால் எத்தனை நாள் பேட் வைத்து மறைக்க முடியும்? அம்மா சரிகாவை நாயகியாக்க தீர்மானித்தார். முதல் படமே Maine pyar kiya பின்னாளில் எடுத்த ராஜ்ஸ்ரீ பிக்சர்சின் சான்ஸ். கோல்டன் சான்ஸ். நாயகன் மற்றொரு குழந்தை நட்சத்திரம் சச்சின். Geet geeta chal என்கிற அப்படம் மெகா ஹிட். தொடர்ந்து சச்சின்-சரிகா ஜோடி ஹிட்டானது அப்போது.
குழந்தை நட்சத்திரமாகயிருந்த போது மதிக்காத சினிமா உலகத்தில் வெற்றி நாயகியான போது நிறைய நண்பர்கள் வட்டம் சரிகாவுக்கு கிடைத்தது. ரசிகர்களும் கூட ஒரு விழாவுக்கு அம்மாவும் சரிகாவை ஒப்பந்தம் செய்தார். சரிகாவுக்கு முன் அம்மா செல்ல விழா தொடங்க சரிகா வரவில்லை. லேட்டாக வந்த சரிகாவை ரசிகர்கள் சூழ்ந்து ஆட்டோகிராஃப் வாங்க டென்ஷனிலிருந்த அம்மா ரசிகர்கள் முன்னேயே வெளுத்துவிட்டார். பாத்ரூமுக்குள் ஓடிய சரிகா முகத்தை கழுவிக் கொண்டு சிரித்துப் பேசி விழாவை சிறப்பித்ததும் நிகழ்ந்தது.
கொடுமைகளை சந்தித்த சரிகாவின் அம்மா ஆறு ஃப்ளாட்டுகளையும், காரையும் வாங்கி வைத்திருந்தார். ஒரு நாள் சரிகா அம்மாவுக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். ட்ரைவிங், உணவு, புத்தகம் என கழிந்த அந்த நாள் ஆனந்தமாக கழிய இரவு காரில் உறங்கினார். பின் அடுத்த நாள் நண்பியின் வீட்டில் குளியல், நண்பியின் உடை என மாற்றி மாற்றி ஆறு நாள் கழிந்தது.
தாக்குப் பிடிக்க முடியாமல் அம்மாவுக்கு போன் செய்ய அம்மாவோ 'நீ எங்கே வேண்டுமானாலும் போ. இந்த பேப்பர்களில் கையெழுத்திடு' என சொல்ல எல்லா சொத்துக்களையும் அம்மாவுக்கு கொடுத்த போது சுதந்திரப் பறவையாக உணர்ந்தார் சரிகா.
தானே படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். தனக்காக மும்பையில் ஃப்ளாட்டும் வாங்கினார். தன்முதல் நாயகன் சச்சினோடு காதல் ஏற்பட்டது. சில வருடங்கள் அந்த காதல் நீடித்தது. அப்போது நடிகர் மனோஜ்குமாரும், அவர் மனைவியும், இளம் பஞ்சாப் சிங்கம் கபில் தேவ் என்கிற கிரிக்கெட்டரை அறிமுகப்படுத்தி இவன்தான் உன்னை காப்பாற்றுவான் என அறிவுரைக்க சரிகா-கபில் ஜோடியாக சண்டிகர் போய் கபில் பெற்றோரை சந்திக்கும் வரை அவர்கள் காதல் வளர்ந்தது.
கபில் பெற்றோருக்கு தங்கள் மருமகளுக்கு பச்சைக்கண் என அவ்வளவு பெருமை... ஆனால் சரிகாவை இம்முறையும் போனில் அழைத்தது மனோஜ்குமார் தான். கபில் பால்ய ஸ்நேகிதி ரோமியை திருமணம் செய்யப்போவதாக. பத்திரிக்கையாளர்கள் பெரிய பட்டாசு வெடிக்கும் என காத்திருக்க சரிகாவோ எதுவும் செய்யாமல் ஒதுங்கியே இருந்தார்.
கிசுகிசு பத்திரிக்கையாளர்கள் காத்திருக்க ஒருநாள் சரிகா-கமல் விஷயம் வெளியே வந்தது. அப்போது சரிகா கர்ப்பமாக இருந்தார். தன்வீட்டையும் சென்னை ஆழ்வார் பேட்டைக்கு மாற்றினார். குழந்தை ஸ்ருதி பிறந்தாள். ஆனாலும் கமல் சம்மதித்தாலும் சரிகா ஒப்புக் கொள்ளாமலே இருந்தார். இரண்டாவது குழந்தை பிறக்கும் முன் சரிகா கமலை மணந்து கொண்டார்.
சரிகாவுக்கு நடக்க முடியாத சூழ்நிலையில் கமல் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு போனதாக செய்தி உண்டு. ஆனால் சில வருடங்களில் கமலின்(சரிகாவின்) காதல் கசந்தது. பத்திரிக்கையாளர் கேட்டால் 'என் உடலுக்கு ஏற்காதது' என்கிற அர்த்தத்தில் கமல் பதில் இருந்தது.
பத்திரிக்கைகள் கமல் கௌதமியின் கஷ்டநிலை, மற்றும் நோய் சிகிச்சைக்கு செய்த உதவியை காதல் என எழுத தொடங்க சரிகாவுக்கு கமலின் தூரம் புரிய 43 வயதில் தன் தாயகமான மும்பைக்கே திரும்பி விட்டார்.
அம்மாவோடு பிரிந்த அதே எழுபதுகளின் நிலைக்கு திரும்பி ஒரு ஃப்ளாட் வாடகைக்கு எடுத்தார். சினிமா சான்சுக்கு அலைந்து சில நல்ல படங்களில் நடித்தார். ஒரு படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
தன் மகள்களை அடிக்கடி சந்தித்து பேசி தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் சரிகா. அவருக்காக இறைவன் யாரையும் படைக்கவில்லை. பிறந்த குழந்தைகள் உட்பட... இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications