ராஜீவ் காந்தியிடம் சரோஜாதேவி பண்ண சத்தியம்? கடைசிவரை மீறல.. சரோஜா தேவி கிட்ட 2 விஷயம் கவனிச்சீங்களா
சென்னை: சினிமா வாய்ப்புக்காக எத்தனையோ பேர், தங்களது சுயமரியாதையை இழக்கும் சூழல் உருவாகிவிடுகிறது.. இதற்காக எந்த ரேஞ்சுக்கும் சிலர் சென்றுவிடுவிடுவதை காண முடிகிறது.. ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், சரோஜாதேவி நமக்கு வித்தியாசமானவராகத்தான் ஒளிர்ந்துள்ளார்.. கடைசிவரை அவர மேற்கொண்ட நேர்மையும், உறுதிப்பிடிப்பும் பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.
சரோஜாதேவிக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசை.. ஆனால், அவரது அம்மாவுக்குதான் மகளை எப்படியாவது சினிமாவில் நடிகையாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்..

அம்மா மீது உயிர்
அம்மா என்றாலே சரோஜாதேவிக்கு உயிர்.. எந்த சூழலிலும் தாய் சொல்லை தட்டாதவரும்கூட.. அந்தவகையில், 1955ல் மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் அம்மாவின் வற்புறுத்தலுக்காக நடிக்க ஒப்புக் கொண்டார்.. ஆனால், சரோஜாதேவியே எதிர்பாராத அளவுக்கு அந்த படம் சக்கை போடு போட்டது.
இதைப்பார்த்ததும் அவரது அம்மா, இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடும்மா என்று சொல்லி உள்ளார்.. இதற்கு ஒப்புக் கொண்ட சரோஜாதேவி, அம்மாவுக்காக இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு, மறுபடியும் பெங்களூருக்கே சென்று தன்னுடைய பள்ளி படிப்பை தொடரலாம் என்று நினைத்துள்ளார்.
ஆனால், பிரபல டைரக்டர் கே.சுப்பிரமண்யம், சரோஜாதேவிக்கு தந்த படவாய்ப்பு, அவரது ஒட்டுமொத்த சினிமாவையும் மாற்றியமைத்துவிட்டது.. சிவப்பு நிறமே கவர்ச்சி என்று இலக்கணம் வகுத்த சினிமாவில், மாநிறமும் கவர்ச்சியே என்பதை நிரூபித்தவர் சரோஜாதேவி.. மொழி தெரியாவிட்டாலும்கூட, தன்னுடைய நடிப்பை மட்டுமே முழுமையாக நம்பியவர்..
2 விஷயங்களில் அசர வைத்தவர்
சரோஜாதேவி தன்னுடைய வாழ்க்கையில் 2 விஷயங்களை பிரதானமாக கடைபிடித்துள்ளார்.. இதில் முதலாவதாக அவரது எளிமையை பற்றி சொல்லலாம்.
ஒரு பேட்டியில் சரோஜாதேவியே சொல்கிறார், "ஒரு முறை மிகப் பெரிய காரை வாங்குவதற்கு பம்பாய் போனேன்.. அப்போது அங்கிருந்த திரு. வாசனிடம் இந்த விஷயத்தை சொன்னேன்.
அதற்கு அவர், "நீ ஒரு பிரபலமான நடிகை. சிறிய காரில், ஆடம்பரமில்லாமல் சென்றாலே உன்னை எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள். உன்னை பார்த்தாலே கூட்டம் கூடிவிடும்... பெரிய காரில் ஆடம்பரத்துடன் சென்றால், நடிகைதானே என்று பார்க்க விரும்பாதவர்கள் கூட, காரின் கவர்ச்சியில் மயங்கி, உன்னைக் பார்க்க வருவார்கள். கூட்டம் அதிகமாவதால் பலருக்குத் துன்பம்தான் வரும்.. பொது வாழ்வில் பிரபலமாகும்போது, ஆடம்பரமில்லாமல் இருப்பதுதான் நல்லது. சினிமா இல்லாவிட்டாலும்கூட எளிமையாக வாழ்ந்தாலே தலை நிமிர்ந்து நடக்கலாம்" என்றார்.
எளிமை உறுதி
வாசன் சார், இப்படி சொன்னதுமே, கார் வாங்கும் எண்ணத்தையே கைவிட்டேன்.. நடிகை என்றாலே அவர்களது செய்கைகளையும், அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள்.. ஆகையால், நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.. இப்படி வாழ்நாள் முழுவதும் இளைய தலைமுறை நடிகைகளுக்கும் சேர்த்தே அப்படியொரு பதிலை சொல்லியிருந்தார் சரோஜாதேவி...
80களில், தன்னுடைய கணவரை இழந்து தவித்து கொண்டிருந்தார் சரோஜாதேவி.. அப்போது அவரிடம் எம்ஜிஆர், "இப்படியே அழுதுட்டு இருந்தால், மனபாதிப்பு அதிகமாகிவிடும்.. இந்த துயரத்தில் இருந்து நீ வெளிவரவேண்டுமானால், பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்" என்றாராம்.
ராஜீவ் காந்தி வேண்டுகோள்
அதேபோல ராஜீவ்காந்தியும் சரோஜாதேவியை டெல்லிக்கு அழைத்து, எம்.பி. பதவியை தருவதாக சொல்லி, மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம். ஆனாலும், எம்ஜிஆர், ராஜீவ் காந்தி இருவரின் கோரிக்கையையுமே நிராகரித்துவிட்டார் சரோஜாதேவி.. இதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
"நேர்மையாக வாழ்வதற்கு என்னுடைய அப்பா சொல்லித்தந்திருக்கிறார். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.. அப்படியிருக்கும்போது, அரசியலில் எல்லா நேரங்களிலும் நேர்மையை கடைப்பிடிக்க முடியுமா? என தெரியவில்லை.
ஏனென்றால் அரசியலில் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருந்தால், இன்னொரு தரப்பினருக்கு கெட்டவராகிவிடுவோம். எல்லாருக்குமே நான் நல்லவளாக இருக்க நினைக்கிறேன். எனக்கு அரசியல் வேண்டாம். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று நாகரீகமாகவும், மென்மையாகவும் சொல்லிவிட்டார் சரோஜாதேவி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications