சிவாஜி கணேசனையே "நடிக்காதே"ன்னு சொல்லி தடுத்த பிரபலம்? சரோஜாதேவிக்காக? இதுவல்லவோ இருவர் உள்ளம்! செம
சென்னை: எம்ஜிஆர் பட சரோஜாதேவிக்கும், இருவர் உள்ளம் சரோஜா தேவிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.. எம்ஜிஆர் பட சரோஜாதேவிக்கும், புதிய பறவை சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இருக்கும்.. இப்படி இரண்டுவிதமான பரிமாணங்களை சரோஜாதேவி பேலன்ஸ் செய்தார். இவைகளுக்கு நடுவில், ரொமாண்ட்டிக், டிராஜடீஸ் என்றாலே அது ஜெமினி கணேசன் படங்களாக இருக்கும் என்று மறைந்த நடிகை சரோஜா தேவி குறித்து பேசியிருக்கிறார் நடிகர் ஒய்ஜி மகேந்திரன்.
Behind Talkies என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "அந்த காலகட்டத்தில், அனைவரையுமே அட்ஜெஸ்ட் செய்து போவது சவாலான விஷயம்..

எம்ஜிஆருடனும் சரோஜாதேவிதான் டாப் ஹீரோயின்.. சிவாஜியுடனும் இவர்தான் டாப் ஹீரோயின்.. ஜெமினியுடனும் இவர்தான் டாப் ஹீரோயின்.. இந்த 3 பேரிடமும் சரோஜாதேவி நல்ல பேர் வாங்கினார் என்பதுதான் விசேஷம்... சினிமா துறையில் இது மிகவும் கஷ்டம்..
மூன்று பேரிடமும் மூன்று விதமான கெமிஸ்ட்ரி இருக்கும்.. சிவாஜியுடன் நடிப்பில் கெமிஸ்ட்ரி நன்றாக இருபபது போல, பாடல்களில் எம்ஜிஆருடனான காம்பினேஷன் நன்றாக இருக்கும். அதிலும் தேவர் பிலிம்ஸ் பட பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.
கல்யாண பரிசு படத்திலேயே சரோஜாதேவியின் நடிப்பு திறமையை காணலாம்.. ஆடிப்பெருக்கு படத்தில், அழகும், நடிப்பும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.. காவேரி ஓரம் என்ற பாட்டில் சரோஜாதேவியின் வித்தியாசமான பாவனைகள் இருக்கும்.. நடிப்பில் உச்சத்தை தொட்டது சிவாஜியுடனான இருவர் உள்ளம் படம்தான்..
இருவர் உள்ளம் சீன்
இருவர் உள்ளம் படத்தில் ஒரு சம்பவத்தை சிவாஜி சார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.. சரோஜாதேவி, சிவாஜி இருவரும் ஒரு சீனில் நடித்து கொண்டிருந்தபோது, அப்படத்தின் டைரக்டர் எல்வி பிரசாத் சார், சிவாஜியை கூப்பிட்டு, "சின்ன வேண்டுகோள்.. இந்த சீனில் நீங்கள் எதுவும் நடிக்க வேண்டாம்" என்றாராம்.. இதைக்கேட்டு சிவாஜிக்கு எதுவுமே புரியலயாம்..
உடனே எல்வி பிரசாத், "நீங்கள் நன்றாக நடிக்கக்கூடியவர் என்பது உலகத்துக்கே தெரியும்... ஆனால், இந்த குறிப்பிட்ட காட்சி நன்றாக வரவேண்டுமானால் சரோஜாவின் நடிப்புதான் தேவைப்படுகிறது.. அதனால் நீங்கள் இந்த சீனில் நடிக்காமல, பெர்பார்மன்ஸை குறைத்து அமைதியாக இருந்தால்தான், சரோஜா நடிப்பது எடுபடும்" என்றாராம்.
சிவாஜி நடிக்காதே
இதுபோல நடிக்காதே சிவாஜி சாரை யாருமே சொன்னதில்லையாம்.. எல்வி பிரசாத சார் மட்டும்தான் சிவாஜியிடம் அப்படி சொல்லியிருக்கிறார்.. இதை சிவாஜி சாரே என்னிடம் சொன்னார்.. எல்வி பிரசாத் சொன்னது சரியென்று சிவாஜி சாருக்கே பிறகுதான் தெரிந்துள்ளது.. சீனில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதை சிவாஜியும் ஒப்புக் கொண்டுள்ளார்.. அந்த காலத்தில் எப்படியெல்லாம் பெருந்தன்மையுடன் இருந்திருக்கிறார்கள் பாருங்க.
ஒருமுறை சரோஜாதேவி அம்மாவிடம் இதை பற்றி கேட்டதற்கு அவரும் அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஏனென்றால், எம்ஜிஆர் படங்களில் துடிப்புள்ள பெண்ணாகவே வருவார்..
எம்ஜிஆர் பட சரோஜாதேவிக்கும், இருவர் உள்ளம் சரோஜா தேவிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.. எம்ஜிஆர் பட சரோஜாதேவிக்கும், புதிய பறவை சரோஜா தேவிக்கும் வித்தியாசம் இருக்கும்.. இப்படி இரண்டுவிதமான பரிமாணங்களை சரோஜாதேவி பேலன்ஸ் செய்தார். இவைகளுக்கு நடுவில், ரொமாண்ட்டிக், டிராஜடீஸ் என்றாலே அது ஜெமினி கணேசன் படங்களாக இருக்கும்..
வைஜெயந்தி மாலா
சரோஜாதேவி கணவர் இறந்ததும், வைஜெயந்தி மாலா கணவர் இறந்ததும் ஒரே நாளில்தான்.. வைஜெயந்தி மாலா என்னுடைய உறவினர்.. அன்றைய தினம் அவரது வீட்டில்தான் நான் இருந்தேன்..
அன்றைய தினம், சரோஜாதேவியிடமிருந்து போன் வந்தது.. நான்தான் அந்த போனை எடுத்தேன்.. அவரது கணவரும் அன்றுதான் இறந்திருந்தார்.. ஆனால் என்னிடம் சரோஜாதேவி, பாப்பாவை கூப்பிடு, நான் அவளுக்கு ஆறுதல் சொல்லணும்னு சொன்னார்..
பிறகு வைஜெயந்தி மாலாவிடம் போனை தந்ததும், அவருக்கு சரோஜாதேவி ஆறுதல் சொன்னார்.. நான்தான் இதற்கு சாட்சி... யாருக்கு இந்த மனசு வரும்? அந்த காலத்தில் எப்படியெல்லாம் உறவுகளை வளர்த்துள்ளார்கள்?
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications