என்ன சொல்லுங்க.. சாக்ஷியோட பலமே அதுதான்.. யாரும் தொட முடியாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் இவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்று அடாவடியாக ரசிகர்களை தினமும் கதற வைத்துக் கொண்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

அவரது தற்போதைய போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது .அதுவும் கண்ணாடி சேலையில் கலக்கலான சிக்ஸ் பேக்கை காட்டி ரசிகர்களை கவர்ந்து கவுத்து இருக்கிறார்.

இவர் ஒரு மாடலாக இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப் படிப்பினை முடித்து மார்க்கெட்டிங்கில் ஆலோசகராக ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவரது ஃப்ரெண்ட் மூலமாக தொண்டு நிறுவனத்திற்கு ஃபேஷன் ஷோவில் பங்கேற்றார்.

ஷோ தந்த மாற்றம்

ஷோ தந்த மாற்றம்

அந்த ஷோவுக்குப் பிறகுதான் அவருக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றமே கிடைத்திருக்கிறது. இவர் மாடலாக கலக்கியதை பார்த்து நீங்கள் அந்த அளவிற்கு இருக்கிறீர்கள் என்று பல ரசிகர்களும் ஆனா ஊனா என்று இவரை புகழ்ந்து தள்ள இவருக்கும் நாம் நடிக்கலாமே என்று ஒரு ஆசை பச்சக்கென்று ஒட்டி விட்டது. அதன்பிறகுதான் பிரண்டு மூலமாக விளம்பர இயக்குனர்களுக்கு இவரது போட்டோக்களை அனுப்பி அனுப்பி இருக்கிறார்.

விளம்பரத்தில் அசத்தல்

விளம்பரத்தில் அசத்தல்

டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் இன்போசிஸ்வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி சீரியல் டிவி விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அப்போதுதான் நடிகர் சூர்யாவுடன் மலபார் கோல்டு விளம்பரத்தில் நடித்தார் .விளம்பரத்தில் இவரைப் பார்த்து ரசிகர்கள் ரசிக்க தொடங்கியதும் ஒரு நடிகையாக நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

டான்ஸ் பயிற்சி

டான்ஸ் பயிற்சி

அது மட்டுமல்லாமல் அவருக்கு சில குறும் படங்களில் வாய்ப்பு வந்திருக்கிறது. இதனால் இன்போசிஸ் இல் தனது வேலையை ரிசைன் செய்துவிட்டார் .முதல் முதலில் ஜில்லுனு ஒரு கலவரம் என்ற வீடியோ ஆல்பத்திற்காக நடித்திருக்கிறார். நடிப்பதற்கு நடனமும் தேவை என்றுதான் டான்ஸ் கிளாசுக்கு சென்று ஸ்ரீராமர் என்பவரிடம் டான்ஸ் முறைப்படி கற்றிருக்கிறார்.

நயன்தாராவின் தோழி

நயன்தாராவின் தோழி

அதன்பிறகு தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் வாய்ப்புக்காக காத்திருந்தார் .அப்போது தான் முதல் முதலாக 2013ஆம் ஆண்டு அவள் என்ற திரைப்படத்தில் கன்னடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழிலும் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நயன்தாராவின் பிரண்டாக நடித்திருந்தார் .அதன் பிறகு மென்பொருள் காந்தா என்னும் கன்னட திரைப்படத்திலும் நடித்து இருந்தார்

பல படங்கள்

பல படங்கள்

மீண்டும் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அது பெரிய அளவில் இல்லை என்றாலும் தமிழில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று இவர் எதிர்பார்த்து இருந்ததால் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். யோகன் ,திருட்டு விசிடி, கா கா கா போ, காலா, விசுவாசம் ,சின்ரெல்லா ஆயிரம் ஜென்மங்கள் ,டெடி, அரண்மனை, புறவி போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 ரஜினிக்கு மருமகளாக

ரஜினிக்கு மருமகளாக

காலா திரைப்படத்தில் இவர் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் .இதன் மூலம் இவருக்கு ரசிகர்களிடம் ஒரு ஈர்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருக்கு 2018ல் சன்டிவியில் சொப்பன சுந்தரி என்னும் நிகழ்ச்சியில் நடுவராக வாய்ப்பு கிடைத்திருந்தது. அதன்பிறகு பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் 49 ஆவது நாள் வெளியேற்றப்பட்டார்.

நல்லவரா கெட்டவரா

நல்லவரா கெட்டவரா

அதுவரைக்கும் அந்த வீட்டிற்குள் இவர் ஆட்டம் பாட்டம் கொண்டாடி ரசிகர்களை நல்லாவே கவர்ந்து இழுத்து திரும்பவும் உள்ளே இருக்கும்போது கவர்ச்சி புயலாகவும் இவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாத அளவில் ரசிகர்களை குழப்பி இருந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அறிமுகமான பிறகு தான் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்திருக்கிறது என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இன்ஸ்டாவில் அதிரடி

இன்ஸ்டாவில் அதிரடி

அதிலும் அதில் இருந்து வெளியே வந்த பிறகு ரசிகர்களை கவருவதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று இன்ஸ்டாகிராமில் அவர் கண்டுபிடித்து விட்டார். இளைஞர்கள் அனைவரும் ஆக்டிவாக இருக்கும் ஒரே இடத்தில் இவரும் தன்னுடைய போட்டோக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் பலர் போட்டோ ஷூட் நடத்தி நடத்தினாலும் பிரபலமானானலும் இவரை அடிச்சு குவதற்கு யாரும் வரமுடியாது.

கவர்ச்சி குவியல்

கவர்ச்சி குவியல்

அந்த அளவிற்கு தினமும் விதவிதமான போட்டோக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து பலர் போட்டோ ஷூட் நடத்தி பிரபலம் ஆனாலும் இவரது இடத்தை பிடிப்பதற்கு யாரும் இல்லை .அதிலும் தற்போது கண்ணாடி சேலையில் செப்பு சிலை போல நின்று கொண்டு ரசிகர்களை இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறாராம். இவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் கமெண்டுகள் ஆக போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+