தலையை அமுக்கி, கையை பிடிச்சு, காலை அமுக்கி... மனசுக்குள் புகுந்து.. கலக்குறியே சத்யா!
சென்னை: சன் டிவியின் சந்ரதிரகுமாரி சீரியலில் அஞ்சலிக்கு உதவி செய்யற சத்யா, அஞ்சலியோட முறை மாமன். கிராமத்தான்.. நல்ல தைரியசாலி. இவனோட பேச்சு செயல், நடிப்புன்னு எல்லாமே நல்லாருக்கு.
அஞ்சலியின் கால்டாக்சி பிஸினெஸில் அம்மா சந்திரா இல்லாத இந்த நேரத்தில் சத்யா ரொம்ப உதவியா இருக்கான். அவளுக்குத் தேவையான உதவிகளை செய்துகிட்டு, பிசினெஸ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியா இருக்கான்.
இவங்க வளர்ச்சியில் அஞ்சலியின் அப்பாவின் ரெண்டாவது மனைவி ருத்ரா பிசினெஸ் தொய்வடைஞ்சு இருக்கு. சத்யாவைத் தூக்க ருத்ராவும், வசீகரனும் பிளான் பண்றாங்க.

தலைவலி
வண்டி எதுவும் இப்ப இல்லை.. எல்லாம் சைட்டுக்கு போயிருக்குங்க.. எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க.. வாங்க நாம சாப்பிட போலாம்னு சத்யா கூப்பிடறான். இல்லை சத்யா எனக்கு மண்டையில யாரோ சுத்தியல்ல அடிக்கற மாதிரி தலைவலிக்குது.கை, கால் எல்லாம் ஒரே வலி. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுன்னு சொல்றா அஞ்சலி.

நான்தான் டாக்டர்
அப்பிடியாங்க.. சரிதான் கண்ணை மூடுங்கன்னு சொல்றான். என்ன எதுவும் கிஃப்ட் குடுக்க போறீங்களான்னு கேட்கறா. என்னங்க நீங்க தலைவலியில் இருக்கீங்க.. இந்த நேரத்துல.. கண்ணை மூடுங்க சொல்றேன்னு சொல்றான். அவளும் கண்ணை மூட, அவள் நெற்றியின் இரு பொட்டிலும் விரலை வச்சு இதமா அமுக்கி விடறான்.

எப்படிங்க
இப்போ எப்படிங்க இருக்கு அஞ்சலின்னு கேட்க. ரொம்ப நல்லாருக்கு சத்யான்னு சொல்றா. இது எங்க பாட்டி வைத்தியம்ங்க.. உடனே சரியாய் போகும்னு சொல்லிட்டு, இப்போ கையை குடுங்கன்னு கேட்கறான். அவ கொடுக்க, விரல்களை மடக்கி, இதமா பிடிச்சு, சொடக்கு எடுக்கறான். இப்போ கையை உதறுங்கண்ணு சொல்ல, அவ உதறிட்டு சரியா போச்சுன்னு சொல்றா.

காலை
இப்போ காலை குடுங்க அஞ்சலின்னு இவன் கேட்க.. சத்யா கால் எல்லாம் வேணாம்னு அஞ்சலி சொல்றா. நான் இப்போ டாக்டருன்னு நினைச்சுக்கோங்க.. காலை குடுங்க அஞ்சலின்னு சொல்றான். அஞ்சலி காலை நீட்ட, காலையும் பிடிச்சு விட்டு, விரல்களுக்கு சொடக்கு எடுக்கறான்.

ஆதவன்
சத்யா நடந்து வந்துகிட்டு இருக்க, அஞ்சலியின் தாய் மாமன் மகன் ஆதவன், வண்டியை குறுக்கே வந்து நிறுத்தறான். என்னடா.. அஞ்சலியை கைக்குள்ள போட்டுக்க அவ கூடவே இருக்கியான்னு கேட்கறான்... ஐயோ .. ஏன் கேட்கறீங்க.. அஞ்சலிக்கு தலை பிடிச்சுட்டு, கை, கால் அமுக்கி விட்டு, ரெண்டு பேரும் கடையில சாப்பிட்டுட்டு, அப்படியே நான் மட்டும் இப்போ காலாற நடந்து போயிகிட்டு இருக்கேன்ன்னு சொல்றான்.

கடுப்பேத்தறியா
நடக்காத எல்லாத்தையும் சொல்லி என்னை வெறுப்பேத்துறியான்னு ஆதவன் கேட்க, சந்தேகமா இருந்தா அஞ்சலிக்கு போன் போட்டு கேளுடான்னு சொல்றான். நான் போன் பண்ணினாத்தான் அவ எடுக்க மாட்றாளேன்னு சொல்றான். சரி, இனிமே பண்ணுங்க நான் எடுத்து பேச சொல்றேன்னு சொல்றான். ஓ.. உன் சிபார்சுல நான் அவ கிட்ட பேசணுமா.. அப்படி ஒண்ணும் தேவையில்லடா.. உன்னை பார்த்துக்கறேன்னு சொல்றான்.. பார்த்துக்க பார்த்துக்கன்னு சொல்லிட்டு சத்யா கிளம்பறான்.
இது கிராமத்தான் வைத்தியம் மட்டும்தானா, இல்லை காதலுமா... கிராமத்து ஆளுங்களுக்கு மட்டும் காதல் வராதா என்ன?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications